பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்43

விரித்தவெண்குடைமன்னர்சூழ்தரவீமனிற்பதொர்மேன்மைகண்
டெரித்தநெஞ்சொடுவிரைவின்மைத்துனரானகொற்றவரெய்தினார்.

     (இ-ள்.) விரித்த வெள் குடை மன்னர் - விரித்துப்பிடித்த வெண்
கொற்றக்குடையையுடைய அரசர்கள் (பலர்),- தரித்த வேலினர் - பிடித்த
வேலாயுதமுடையவர்களும், தாரை வாளினர் - கூர் நுனியையுடைய
வாளாயுதத்தையுடையவர்களும், தாமம் வில்லினர் ஆக - ஒளியையுடைய
வில்லையுடையவர்களுமாக,- பரிதியை செறி பரிதி போல் - சூரியனைச் சூழ்ந்த
பரிவேடம்போல, இரு பக்கம்உம் சூழ்தர-(தனது) இரண்டு பக்கத்திலுஞ் சுற்றிநிற்க,-
வீமன் - வீமசேனன், பரித்த தேரொடு - (தன்னைத்) தாங்கி தேருடனே, நிற்பது-
(இடையில்) நிற்பதாகிய, ஒர் மேன்மை - ஒரு கம்பீரத்தோற்றத்தை, கண்டு -
பார்த்து,எரித்த நெஞ்சொடு - பொறாமைகொண்டு தவித்த மனத்துடனே,
மைத்துனர் ஆனகொற்றவர் - (துரியோதனனுக்கு) மைத்துனன்மார்களான
அரசர்கள், விரைவின்எய்தினார் - துரிதமாக அருகுவந்துசேர்ந்தார்கள்; (எ-று.)

     பகையிருளொழித்துத் தேரின்மீது விளங்குதலால் வீமனுக்குச் சூரியனும்,
அவனைச் சூழ்ந்துநின்று விளங்குதலால் மன்னர்க்குப் பரிவேடமும் உவமை.
பரித்ததேரொடு என்பதை 'மன்னர் சூழ்தர' என்பதனோடும் இயைக்கலாம். பரிதி -
வடசொல்; சூரியனுக்குச் சமீபத்தில் சிலகாலங்களில் சூழ்ந்துதோன்றும் மண்டல
வடிவமான ரேகை; இதற்கு - பரிவேஷமென்றும் பெயர்; தென் மொழியில்
'ஊர்கோள்' எனப்படும். பக்கம் - பக்ஷம்; வடசொல். மைத்துனரான கொற்றவர் -
துரியோதனனது மனைவியான பானுமதிக்கு உடன்பிறந்த முறையாகுபவர். தாமம் -
போர்மாலைசூடிய என்றும், நாணிக்கயிற்றையுடைய என்றுங் கொள்ளலாம். பி -ம்:
மத்திரரான கொற்றவர்.                                          (46)

47.-வீமன் கதாயுதத்தினால் வந்தவரோடு சீறி
அவரிரியப்பொருதல்.

எய்துமைத்துனரெய்துதெவ்வரொடெண்ணில்போர்செயவிண்ணிடைச்
செய்துபெற்றனதேரினின்றுமிழிந்துளானனிசீறினான்
மொய்திறற்பவமானனன்றுமுருக்குமுக்குவடென்னவே
கைதவப்படைமன்னர்மாமுடிசிதையவங்கொருகதையினால்.

     (இ - ள்.) எய்து மைத்துனர்-(இவ்வாறு) வந்த துரியோதனன்
மைத்துனன்மார்,எய்து-(பாணங்களைப்) பிரயோகித்து, தெவ்வரொடு- (வீமன்
முதலிய)பகைவர்களுடனே, எண் இல் போர் செய- அளவில்லாத பெரும் போரைச்
செய்யாநிற்க,-விண்இடை செய்து பெற்று அன தேரினின்றும் இழிந்துளான் -
தேவலோகத்திலே செய்யப்பட்டு(த் தான்) பெற்றாற்போன்ற (தனது) இரதத்தினின்று
இறங்கியுள்ளவனாய், (வீமன்),- மொய் திறல் பவமானன் அன்று முருக்கு முக்குவடு
என்னஏ - மிக்க வலிமையையுடைய வாயுதேவன் அக்காலத்தில் [முன்பு ஒரு
காலத்தில்] முறித்துத்தள்ளின (மேரு மலையின்) மூன்று சிகரங்கள்போல, கைதவம்
படை மன்னர் மா முடி சிதைய-வஞ்சனை