பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்45

கிற வடவாமுகாக்கினிபோல, தும்பை உற்று மிலைச்சி - (போர்க்கு உரிய)
தும்பைப்பூமாலையை விரும்பிச் சூடிக்கொண்டு, ஈசன் அளித்த வில்லொடு -
சிவபிரான் (தனக்குத்) தந்தருளின வில்லுடனே, தோன்றினான் - (போர் செய்யப்)
புறப்பட்டான்; (எ - று,)

     அம்பரத்திற்சஞ்சரிப்பவர்-அம்பரத்தவர். ஸாகரம் - சகரசக்கரவர்த்தி
புத்திரரால் தோண்டப்பட்ட தென்று பொருள்; வடமொழித் தத்திதாந்த நாமம்:
இந்திரனால் ஒளிக்கப்பட்ட சகரசக்கரவர்த்தியின் அசுவமேதயாகக் குதிரையைத்
தேடுகையில் அவனது இரண்டாம் மனைவியின் புத்திரர் அறுபதினாயிரவர்
பாதாளஞ்செல்லுதற்கு வழியாகத் தோண்டிய பள்ளமே பின்பு நீர்நிறைந்து ஒரு
கடலாயிற்றென வரலாறு காண்க. கடலிடையிலே ஒரு பெண்  குதிரையின்
முகத்தில்எப்பொழுதும் தீப்பற்றியெரிகிற தென்றும், அது மழைநீர் முதலியவற்றால்
கடல்பொங்காதபடி அதிகநீரை அப்பொழுதப்பொழுது உறிஞ்சிநிற்ப தென்றும்,
அதுவேகல் பாந்தகாலத்தில் கடலினின்று வெளிவந்து உலகை எரித்தழிக்கு
மென்றும்நூற்கொள்கை. எழுசாகரம் என்பதற்கு- ஏழுவகையான கடலென்று
உரைப்பாருமுளர். தும்பை-அதன் பூமாலைக்கு இருமடியாகுபெயர். ஈசன் என்ற
வடசொல்லுக்கு- எல்லா ஐசுவரியமு முடையவனென்று பொருள். கோபக்கினியாற்
சொலித்தல்பற்றியும், சேனைக்கடலிடை விளங்குதல்பற்றியும், சுவேதனுக்கு
வடவைத்தீயை உவமைகூறினார்.

     சுவேதன் முன்னொருகாலத்தில் தேவலோகத்திற் போயிருந்த பொழுது
வசுக்கள் அவனை மயிலென்னும் பறவையாகும்படி சபித்து
அவன்பேரெழுதிய அம்பொன்றை அவன்மே லெறிய, அதுபட்டவுடனே
அவன் மயிலாகித் தந்தையாகிய விராடனிடம் வந்துசேர, அதனையறியாத
அவன் கோபித்துத் துரத்திவிட, மைந்தன் பறந்து சென்று தவஞ்செய்து
சிவபிரானருளால் சாபவிடை பெற்று வில் முதலிய ஆயுதங்களும்
கவசங்களும் பெற்றனனென்ற வரலாறுபற்றி, ஈசனளித்தவில்' எனப்பட்டது;
'சிவன்றன்னைநோக்கிச் சிவேதன்றவஞ்செய்தவாறு, மவன்றனருளாற் பல
வாயுதம்பெற்றவாறும்" என்றார் கீழ் வெளிப்பாட்டுச்சருக்கத்தும்.    (48)

49.-சுவேதன் எதிரிட்டவரை வென்றுகொண்டு சல்லியனுள்ள
விடத்தைவினாவிச் சென்று சேர்தல்.

சங்கி னங்கண்மு ழங்க வும்பணை முரசி னங்கட ழங்கவுந்
துங்க வெங்களி றிவுளி தேரொடு தானை மன்னவர் சூழவும்
எங்கு நின்றன னெங்கு நின்றனன் மத்தி ரத்தர சென்றுபோ
யங்கு நின்றம கீபர் வென்னிட வவனை முந்துற வணுகினான்.

     (இ - ள்.) (இவ்வாறு தோன்றின சுவேதன்), சங்கு இனங்கள் முழங்கஉம் -
சங்கவாத்தியங்களின் வகைகள் ஒலிக்கவும், பணை முரசு இனங்கள் தழங்கஉம் -
பெரிய பேரிகைகளின் வகைகள் ஒலிக்கவும், துங்கம் வெம்களிறு இவுளி தேரொடு
தானை மன்னவர்