பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்47

     (இ - ள்.) இருவர்உம் - (சல்லியன் சுவேதன் என்னும்) இவ் விரண்டுபேரும்,
இவர்க்கு ஒருவர்உம் நிகர் இல்லை என-இவர்களுக்கு ஒருத்தரும் ஒப்பில்லை
யென்று சொல்லும்படி, உற்று மலைந்திட- மிகுதியாகப் போர்செய்ய, (அப்பொழுது),
இராச குலராசன் - அரசர்களுடைய கூட்டத்திற்குத் தலைவனாகிய துரியோதனன்,
பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று - (அப்போரில்)
இளைப்பையடைகிற மத்திரதேசத்தரசனான சல்லியனுக்குச் சகாயமாகக்கடவரென்று,
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான் - அழித்தற்கரிய மலையோடு
சமானமான தோள்களை யுடையவர்களான (தனதுதம்பிமார்கள்) ஆறுபேரைத்
துணையனுப்பினான்; (எ - று.)

     இவர்கள்  துரியோதனன்தம்பிய ரென்பது, அடுத்தகவியில் "தரணிபதி
தம்பியர்கள்" என்பதனால் விளங்கும். ஆயுதங்களால் அழிக்கமுடியாத
வலிமையிலும், பருமையிலும், உயர்ச்சியிலும், மலை-தோளுக்கு உவமை.
'இராசராசன்' என்று துரியோதனனுக்கு ஒரு பெயர். பருவரல் - வருந்துதல்;
பருவா -பகுதி, உதவி - உதவிசெய்பவர்க்குத் தொழிலாகுபெயர்.        (51)

52.-மூன்றுகவிகள் - சுவேதன் எதிர்த்துவந்தவரை
வென்றமை கூறும்.

தரணிபதிதம்பியர்கடானையொடுவந்தே
யிரணமுகமொன்றுமயிலோனெனவெதிர்த்தார்
திரணறைகொடார்புனைசிவேதனவரந்தக்
கரணம்வறிதாகும்வகைகணைபலதொடுத்தான்.

     (இ-ள்.) தரணிபதி தம்பியர்கள் - (இங்ஙனம் அனுப்பப்பட்ட)
பூமிக்குத்தலைவனான துரியோதனனது தம்பிமார்கள், தானையொடு -
சேனையுடனே,இரணம் முகம் ஒன்றும் மயிலோன் என- போர்க்களத்தினிடத்தை
யடைகிறமயிலை(வாகனமுங் கொடியுமாக) உடைய முருகக்கடவுள்போல, வந்து
எதிர்த்தார்-;(அப்பொழுது), திரள் நறை கொள் தார் புனை சிவேதன் - திரண்ட
தேனைக்கொண்ட பூமாலையைச் சூடிய சுவேதன். அவர் அந்தக்கரணம் வறிது
ஆகும்வகை-அவர்களது மனம் அழியும்படி, கணை பல தொடுத்தான் - அநேக
பாணங்களை (மேன்மேல்) பிரயோகித்தான்; (எ - று.)

     தம்பியர் அறுவரும் உடலாற்பலராயினும் மனத்தால் ஒருவரேயாதலாலும்,
சுப்பிரமணியமூர்த்தி உருவம் பலவாயினுந் தாம் ஒருவரேயாதலாலும், இவ்வுவமை
ஏற்கும். முருகக்கடவுளுவமை பல பராக்கிரமங்களோடு ஆறுவடிவமாக வருதற்
கென்க. சுப்பிரமணியனது வடிவம் ஆறுகூறாகச்சென்றது, சூரபதுமனை அழித்த
பொழுதென்க; இங்கே     "அறுவேறு வகையினஞ்சுவரமண்டி" என்ற
திருமுருகாற்றுப்படை காண்க. அயிலோனெனப் பிரித்து,
வேலாயுதத்தையுடையவனெனக் கொள்ளலுமாம்; 'வேலன்' என்று சுப்பிரமணியனுக்கு
ஒருபெயர். வறிதாகும்வகை- வறுமையுடையதாகும்படி; எண்ணஞ் சிறிதும் இல்லாமற்
கலங்கும்படி; இடைவிடாது எய்த