சுவேதன்மீது) அனுப்பினான்; அவர்உம் - (அங்ஙனம் அனுப்பப்பட்ட) அரசர்களும், முனைந்தனர்கள் - (சுவேதனையெதிர்த்துப்) போர் செய்தார்கள்; (அப்பொழுது அச்சுவேதன்), செவ் வரைகள் போல்பவர்- அழகிய மலைகளை யொப்பவர்களாகிய அவர்களது, சிரங்கள்உம்- தலைகளும், வளைக்கும் கை வரிவில்உம் - வளைத்துநாணேற்றப்பட்ட கையிற்பிடித்த கட்டமைந்த விற்களும், துணிபட - அறுபடும்படி, கணை தொடுத்தான் - அம்புகளை எய்தான்; (எ - று,) அநலம் - வடசொல். அரசர்க்கு மலையுவமை - எதற்குங்கலங்காத உறுதி நிலைமைக்கும், கம்பீரமான தோற்றத்துக்கும், நெடுந்தூரத்தாரும் அறியும் உயர்ச்சிக்கும் என்க. (61) 62.-சுவேதன் வீடுமனையெதிர்த்து மேம்படுதல். கங்கைமகன்மற்றுமொருகார்முகம்வளைத்துச் சிங்கமெனவப்பொழுதுறுக்கியெதிர்சென்றான் அங்கவனகைத்தொருதனம்புகொடுமீளப் பங்கமுறவிற்றுணிபடுத்தியெதிர்நின்றான். |
(இ - ள்.) அப்பொழுது-. கங்கை மகன்-வீடுமன், மற்றுஉம் ஒரு கார்முகம் வளைத்து- வேறொரு வில்லை வளைத்து, சிங்கம் என - சிங்கம்போல, உறுக்கி எதிர்சென்றான் - கோபித்துச் சுவேதனெதிரிற் (போர்செய்யப்) போனான்; அங்கு - அப்பொழுது, அவன் - அச்சுவேதன், நகைத்து - சிரித்து, தன் ஒரு அம்பு கொடு- தனது ஓரம்பினால், மீள பங்கம் உற - மறுபடியும் (அவ்வீடுமன்) அவமானத்தையடையும்படி, வில் துணி படுத்தி-(அவனது) வில்லையறுத்துத்தள்ளி, எதிர் நின்றான் - (தனது மேன்மை தோன்ற) எதிரில் நின்றான்; (எ - று.) இங்கே, நகை-வீரத்தெழுந்த வெகுளிநகை; இனி, வீடுமன் கீழ் இருமுறை வில்அறுபட்ட இழிவை நோக்கிய பரிகாசமுமாம். 63.-தேவர்கள் சுவேதன்வலிமையை மதித்தல். ஆனபொழுதந்தரநெருங்கியமரகாணும் வானவர்விராடபதிமைந்தனைமதித்தார் வேனிலவன்மேனுதல்விழித்தவனளிக்குங் கூனல்வரிசாபமிதுகொண்டனன்வரத்தால். |
இதுவும், மேற்கவியும் - ஒருதொடர். (இ - ள்.) ஆன பொழுது - இவ்வாறான அச்சமயத்தில், அந்தரம் நெருங்கி அமர் காணும் வானவர்-ஆகாயத்தில் திரண்டுநின்று போர்வினோதத்தைப் பார்க்கிறதேவர்கள், விராடபதி மைந்தனை மதித்தார் - விராடராசனதுகுமாரனான சுவேதனைக் கொண்டாடினவர்களாய்,-வேனிலவன்மேல் நுதல் விழித்தவன் அளிக்கும் - மன்மதன்மேல் நெற்றிக்கண்ணை விழித்தெரித்த சிவபிரான் (தனக்குக்) கருணையோடு கொடுத்த, கூன் நல்வரி சாபம் இரு - வளைவான சிறந்த கட்டமைந்த இவ்வில்லை, வரத்தால் கொண்டனன்- |