வாளாயுதத்தை உறையினின்று எடுத்துச்சுழற்றி, மேல் உற நடந்தான் - வீடுமன்மேலே பொருந்தச் சென்றான்: (அப்பொழுது), நின்றவன்உம் - (எதிரில்) நின்ற வீடுமனும், வேறு ஒரு நெடுசிலை குனித்தான் - (தானும் வாளையெடுக்காமல்) மற்றொருநீண்டவில்லை யெடுத்து வளைத்தான்; (எ-று.) எதிர்சிவேதனென வினைத்தொகையாக எடுத்து, எதிர்த்து நின்ற சுவேதனென்றுங் கொள்ளலாம். தனக்கு விற்போரொழிந்த வாட்போர் வேற்போர்களில் திறமையில்லை யென்று வீடுமன் இகழ்ந்ததனால், வெள்கினான். தான் கையிலுள்ளவரையில் வெற்றியைத்தரவல்ல தென்றசிறப்பு, 'குன்றுசிலைகொண்டவனளித்த சிலை' என்றதனால் விளங்கும். மகாமேருமலையைப் பரமசிவன் வில்லாக ஏந்தியது, திரிபுரசங்கார காலத்திலென்க. தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி தாரகாட்சன் கமலாட்சன்என்னும் மூவரும் மிக்கதவஞ்செய்து மயனென்பவனால் சுவர்க்க மத்திய பாதாளமென்கிற மூன்று இடங்களிலும் முறையே பசும்பொன் வெண்பொன் கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந்தன்மையுடைய மூன்றுபட்டணங்களைப் பெற்று, மற்றும் பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த இடங்களிற் பறந்து சென்று பல இடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால், சிவபெருமான் பூமியைத் தேராகவும், சந்திர சூரியரைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும், மற்றைத் தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு யுத்தசன்னத்தராகிச் சென்று போர்செய்ய யத்தனித்துப் புன்சிரிப்புச்செய்து அசுரர் அனைவரையும் பட்டணங்களோடு எரித்தருளின ரென்பது கதை. (66) 67. | வாளினெதிர்வெஞ்சிலைவளைத்துவயவீரன் தோளிணையிலொன்றுதுணியக்கணைதொடுத்தான் காளையொருகைவிழவுமற்றையொருகையான் மீளவும்வெகுண்டுசுடர்வாளினையெடுத்தான். |
(இ - ள்.) (இங்ஙனம் வீடுமன் மாறுபாடாக), வாளின் எதிர்- (சுவேதன் எடுத்த)வாளுக்கு எதிரிலே, வெம் சிலை வளைத்து - (தான்) கொடிய வில்லை வளைத்து,வய வீரன் தோள் இணையில் ஒன்று துணிய - (இதுவரையில்) வெற்றியைப்பெற்றவீரனாகிய சுவேதனது புயங்களிரண்டில் ஒன்று அறுபடும்படி, கணை தொடுத்தான் -அம்பு செலுத்தினான்; (அப்பொழுது), காளை-சுத்தவீரனான சுவேதன், ஒருகைவிழஉம்-ஒருகை அற்றுவிழவும், (சிறிதும் பாராட்டாமல்), மீளஉம் வெகுண்டு -மீண்டுங்கோபங்கொண்டு, மற்றை ஒரு கையால் - |