தம். இனி, இரண்டாம் வேற்றுமையுருபும்பயனுந்தொக்கதொகையாக, பீஷ்மனைப்பற்றிய பருவ மெனினும் அமையும். பீஷ்மன் துர்யோதனாதியர் சேனைத்தலைவனாய்நின்று பத்துநாள் போரை நடத்திய கதையைக் கூறும் பாகமென்று பொருள். பருவம்=பர்வம்: கணுஎன்று பொருள்: கரும்பு மூங்கில் முதலியவற்றிற்கு ஏகதேசமாகிய [ஏகதேசம் - ஒருபகுதி] கணுப்போல, நூலுக்கு ஏகதேசமாகிய உறுப்பைப் பருவமென்றது-உவமாகுபெயர். கீழ் ஆதிபருவம்முதலாகவும், மேல் சௌப்திகபருவம்முதலாகவும் கதாநாயகரான பாண்டவரது சரித்திரபாகத்தின் விஷயத்தைக்குறிக்குஞ் சொற்களாற் பர்வங்களுக்குப் பெயரிட்டுவரும் ஆசிரியர், இங்கு வீட்டுமபருவம், துரோணபருவம், கன்னபருவம், சல்லியபருவம் எனத் துரியோதனாதியரோடு சேர்ந்தவரைப்பற்றின சொற்களாற் பெயரிடக் காரணம் என்னையோ வெனின்?-எதிரிகளது சிறப்பை நன்கு எடுத்துக்காட்டி அப்படிப்பட்டவர்களை இவர்கள் வென்றிட்டார்க ளெனக் கதாநாயகரைப் பெருமைப்படுத்தவேண்டி யென்க. இனி, பீஷ்மவதபர்வ மென்பது மத்தியமபதலோபமாய்ப் பீஷ்மபருவமென நின்றது, திரிந்ததென்றலும் ஒன்று. முதற் போர்ச்சருக்கம் பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் நடந்த பதினெட்டுநாளை யுத்தத்தில் முதல்நாள்யுத்தத்தைக் கூறும் பாகமென்று பொருள். கதைத்தொடர்ச்சி:-இப்பரதகண்டத்திலே அஸ்தினபுரியில் சந்திர குலத்திலேயுதித்துச் செங்கோல்செலுத்திய சந்தனுவுக்கு முதல் மனைவியாகிய கங்கையின்குமாரர் பீஷ்மரென்பவரும், இரண்டாம் மனைவியாகிய யோஜநகந்தியின்மகன் விசித்திரவீரியனென்பவனும் இருந்தார்கள். [முன்னார்ச்சத்தியவதியென்னும்பெயரோடு இருந்து; பராசரமுனிவரோடுசேர்ந்து வியாசரைப்பெற்றுப் பின்பு அப்பராசாரருளாற் கன்னிப்பருவமடைந்த இந்தக் கந்தவதியினிடம் சந்தனுவுக்குப்பிறந்த முதற்குமாரனான சித்ராங்கதன், அப்பேருள்ளஒருகந்தருவனாற் கொல்லப்பட்டு இறந்தான்.] முன்னைய விரதத்தின்படி. வீடுமர்விசித்திரவீரியனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்வித்தார். விசித்திரவீரியனதுபத்தினியாகியஅம்பிகையினிடத்துத் திருதராஷ்டிரனும், அம்பாலிகையினிடத்துப் பாண்டுவும்,சந்ததிவிருத்தியின்பொருட்டுத் தாய்சொற்கடவாத வியாசபகவானருளாற் பிறந்தனர்.அம்பிகையாலேவியனுப்பப்பட்ட சூத்திரப்பெண்ணினிடத்து வியாசரருளால்அவதரித்த விதுரனென்னுங்குமாரனும் இருந்தான். திருதராட்டிரன் பிறவிக்குருடனாதலால், விதுரனை மந்திரியாகவைத்துக்கொண்டு, பாண்டு, திருதராட்டிரனுக்குமுடிசூட்டித் தானே இராசாங்ககாரியம் பார்த்து வந்தான். பாண்டுவுக்கு மனைவியுடன்சேரக்கூடாதென்று சாபம் நேரிட்டதனால், அவனனுமதிப்படி அவனதுமூத்தமனைவியாகிய குந்தி தனக்கு இளமையில் துருவாசமுனிவனுபதேசித்திருந்தமந்திரத்தின் மகிமையால் வந்த யமதருமராசனால் யுதிஷ்டிரனையும், |