பக்கம் எண் :

60பாரதம்வீட்டும பருவம்

முன்னது - வடிவுவமையும், பின்னது-நிறமும் ஒளியும்பற்றிய உவமையுமாம்.
செந்நிறமுள்ள இரத்தவெள்ளத்தைச் செந்நிறமுள்ள புதியயாற்றுநீர்ப்பெருக்காகவும்,
அதனிரண்டு பக்கத்தும் விழுந்துகிடக்கிற உயிர்நீங்கிய உடல்களை
அதன்கரைகளாகவும் வருணித்தார்; நடுத்தோல் கிழிந்து நீங்க இடையிடையே
விழுந்துகிடக்கிற போர்ப்பறைகளின் துவாரங்களின் வழியாய் அவ்விரத்தம்
பாய்ந்துஅப்பாற் செல்வது, ஆங்காங்குள்ள கால்வாய்த்தலைமதகு கண்களில்
அப்புதுவெள்ளம் பாய்ந்துசெல்வதை யொக்குமென்க. பல்வேறு நிறத்தனவான
இரத்தினங்களைப் பதித்த ஆபரணங்கள் அநேகம் ஆங்காங்குச் சிதறிக்கிடந்து
விளங்குதல், பல்வேறு நிறத்தனவாய் விளங்கும் நட்சத்திரங்களின்கூட்டம்போலும்.
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. இவ்வணிக்கு, முதலடியில் உருவகம் அங்கமாய்
வந்தது. பி - ம் : வீழ்வபோலும்.                               (72)

73.-சூரியாஸ்தமன வருணனை.

பட்டநுதற்களியானைப்பாண்டவர்தம்படைத்தலைவன்பட்டானாகத்
தொட்டகழற்றடமகுடச்சுடர்வடிவாண்மகிபரெலாந்துணுக்கமெய்தி
விட்டபடங்கியல்பாடிவீடணைந்தார்வெயிலோனுமேல்பாற்குன்றிற்
கிட்டவவன்வடிவமுமிக்குருதியினாற்சிவந்ததெனக்கிளர்ந்ததம்மா.

     (இ-ள்.) பட்டம்-பெறப்பட்டத்தையணிந்த, நுதல்-நெற்றியையும், களி-
மதக்களிப்பையுமுடைய, யானை-யானைச்சேனையையுடைய, பாண்டவர்தம்-
பாண்டுகுமாரர்களது, படை தலைவன்-சேனாதிபதியான சுவேதன், பட்டான் ஆக-
இறந்தவனாய்விட,-தொட்ட கழல்- அணிந்தவீரக்கழலையும், தட மகுடம் -
பெரியகீரிடத்தையும், சுடர் வடி வாள் - விளங்குகிற கூரிய வாளாயுதத்தையுமுடைய,
மகிபர் எலாம்- (அந்தச்சேனையின்) அரசர்யாவரும், துணுக்கம் எய்தி- கலக்கத்தை
யடைந்து, விட்ட படங்கு இயல் பாடி வீடு அணைந்தார் - (தாங்கள் காலையில்)
விட்டுவந்த கூடாரம் அமைந்த பாசறையிற் போய்ச் சேர்ந்தார்கள்; (அச்சமயத்தில்),
வெயிலோன்உம் - உஷ்ணகிரணனான சூரியனும், மேல் பால் குன்றில் கிட்ட-
மேற்குத்திக்கிலுள்ள அஸ்தகிரியிற் போய்ச் சமீபிக்க, (அப்பொழுது) அவன்
வடிவம்உம்-அச்சூரியனது மண்டலமும், இ குருதியினால் சிவந்தது என -
(போர்க்களத்திலுள்ள) இவ்விரத்தந் தெறித்து அதனாற் செந்நிறமடைந்ததுபோல,
கிளர்ந்தது - செந்நிறமாய் விளங்கிற்று; (எ - று,)-அம்மா - ஈற்றசை;
மிக்கதூரத்தில்வானத்திலுள்ள சூரியமண்டலத்திலும் இவ்விரத்தம்தெறித்த
தென்பதுபற்றியவியப்பிடைச்சொல்லெனினும் அமையும்.

     நான்காமடி - ஏதுத்தற்குறிப்பேற்றவணி; என வென்னும் உருபு
தொடர்ந்துவந்தது. அந்திப்பொழுதில் மிக்குத்தோன்றகிற சூரிய மண்டலத்தின்
செந்நிறத்தை, இரத்தத்தாற் சிவந்த தென்று உத்பிரேக்ஷித்தார். யானை -
மற்றைச்சேனைகட்கும், வாள் - மற்றையாயுதங்கட்கும் உபலக்ஷணம், யானைப்
பாண்டவர் - யானைபோன்ற