பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்61

பாண்டவ ரென்றுமாம். விட்ட படங்கு இயல் - தொங்கவிட்ட பெருங்கொடி
பொருந்தின என்றுங் கொள்ளலாம்.                           (73)

74-இதுவும், மேற்கவியும் - புத்திரசோகமுற்ற விராடனுக்கு வேந்தர்
உபசாரங்கூறுதலைத் தெரிவிக்கும்.

திருநெடுமான்முதலானதேர்வேந்தர்விராடனுழைச்சென்றுன்மைந்த
ரிருவருமின்றொருபடியேவெஞ்சமரிலெஞ்சினரென்றிரங்கலையா
பொருமுனையில்வீடுமனைப்புறங்கண்டுநிருபரெலாம்பொன்றவென்று
விரகுடன்வாளெடுப்பித்தபிறகன்றோதொடுசரத்தால்வீழ்ந்ததென்றார்.

     (இ - ள்.) திரு நெடு மால் முதல் ஆன - சிறந்த பெருமைக் குணமுடைய
கண்ணபிரான்முதலாகிய, தேர்வேந்தர் - ரதாதிபதிகளான அரசர்கள், விராடனுழை
சென்று-வீராடராசனிடத்திற்போய், 'ஐயா- தலைவனே! உன் மைந்தர் இருவர்உம்-
(உத்தரனும் சுவேதனுமாகிய) உனதுகுமாரர் இரண்டுபேரும், இன்று-இன்றைக்கு,
ஒருபடிஏ - ஒரே வகையாக, வெம்சமரில்-கொடியபோரில், எஞ்சினர் - இறந்து
விட்டார்கள், என்று-என்றகாரணத்தால், இரங்கல் - (நீ) வருத்தப்படவேண்டாம்;
பொரு முனையில் - போர்செய்யுமிடத்தில், வீடுமனை புறம் கண்டு-பீஷ்மனை
முதுகுகாட்டியோடச்செய்து, நிருபர் எலாம் போன்ற வென்று- மற்றைப் பகையரசர்
யாவரும் அழியும்படி வெற்றிகொண்டு, விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றுஓ -
வஞ்சனையாக (வில்லை விட்டு) வாளையெடுக்கும்படி (வீடுமன்) செய்த பின்பன்றோ,
தொடுசரத்தால் வீழ்ந்தது-(அவ்வீடுமன்) தொடுத்த பாணத்தால் இறந்து விழுந்தது;
என்றார்-என்று (புகழ்ச்சி தோன்ற உபசாரமொழி) கூறினார்கள்; (எ - று,)

     இங்ஙனம் பொதுப்படக்கூறினும், ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால்,
'பொருமுனையில் நிருபரெலாம்பொன்ற வென்றுவீழ்ந்தது' என்பதை இருவருக்கும்,
மற்றதைச் சுவேதனுக்குமாத்திரமும் கொள்க. திருநெடுமால் - இலக்குமிகொழுநனும்,
திரிவிக்கிரமனாய் நீண்டவடிவுடையவனுமான கண்ணபிரானென்றுங்கொள்ளலாம்.
இறத்தலை எஞ்சுதலென்றசொல்லாற் குறித்தது - மங்கலவழக்கு. வீழ்ந்தது -
தொழிற்பெயர், வினைமுற்றின் தன்மைப்பட்டது; இங்ஙனம் வருவதை வடநூலார்
பாவேப்ரயோகமென்பர்.                                         (74)

75.பேய்செய்தவரங்கனையபெருங்கானிற்றிரிவோர்க்குப்
                                   பெற்றகாதற்,
றாய்செய்தவுதவியினுந்தகுமுதவிபலசெய்தாய்சமரூடின்றுன்,
சேய்செய்தவுயிருதவிதேவரெலாந்துதிக்கின்றார்
                             செறித்தோர்தம்மில்,
நீசெய்தபேருதவியார்செய்தாரெனவுரைத்தானெறி
                                 செய்கோலான்.

     (இ-ள்,) 'பேய் செய்த அரங்கு அனைய - பேய்கள் (தாம்
கூத்தாடுதற்குச்செய்த) நாடகசாலையைப் போன்ற, பெருகானில் - பெரிய காட்டிலே,
திரிவோர்க்கு - அலைந்தஎங்களுக்கு. பெற்ற காதல் தாய் செய்த உதவியின்உம்
தகும் உதவி பல செய்தாய்- (மக்களைப்) பெற்ற அன்புடைய தாய் (அம்மக்களுக்குச்)
செய்யும் உபகாரத்தி