இரண்டாம் போர்ச்சருக்கம் 1.கடவுள் வணக்கம், எந்த வெந்த யோனி பேத மெங்கு மெங்கு முள்ளன அந்த வந்த யோனி தோறு மாவி யான தன்மையைச் சிந்தை யின்க ணொருக ணத்தி னிகழு மாறு தேவர்கோன் மைந்த னுய்ந்தி டப்பு கன்ற வள்ள றாள்வ ணங்குவாம். |
(இ - ள்,) எந்த எந்த யோனி பேதம் - எந்தஎந்தப் பிறப்பு வகைகள், எங்குஉம்எங்குஉம் உள்ளன - எல்லாவுலகங்களிலும் எல்லா விடங்களிலும் இருக்கின்றனவோ,அந்த அந்த யோனி தோறுஉம் - அந்தந்தப் பிறப்புக்களிலெல்லாம், ஆவி ஆனதன்மையை - (பரமாத்மாவாகிய தான்) உயிர்க்குஉயிராய் உள்ளுறையும் இயல்பை,சிந்தையின்கண் ஒரு கணத்தில் நிகழும் ஆறு - மனத்திலே ஒருக்ஷணப்பொழுதிலேபதிந்திடும்படியாக, தேவர்கோன் மைந்தன் உய்ந்திட - தேவர்களுக்கரசனாகியஇந்திரனது புத்திரனான அருச்சுனன் ஈடேறும்படி, புகன்ற - (கீதை)உபதேசித்தருளிய, வள்ளல் - வரையாது அருளுந்தன்மையனான கண்ணபிரானது,தாள் - திருவடிகளை, வணங்குவாம் - நமஸ்கரிப்போம்; (எ - று.) கீழ்ச்சருக்கத்தில் பகவான் பார்த்தனுக்குப் பரமார்த்தம் பகர்ந்தருளிய பெருங்கருணையில் இவ்வாசிரியர்க்கு உண்டான ஈடுபாட்டின் மேலீட்டினால், அடுத்தஇச்சருக்கத்துக்கு அச்சிறப்பையேசொல்லிக் கடவுள்வாழ்த்துக் கூறுகின்றார். பலவருஷகாலம் பணிவிடை செய்து வழிபட்டார்க்கே உபதேசித்தற்குரிய நற்பொருளை அருச்சுனனுக்கு அருளாற்கூறியருளின உதாரகுணம் விளங்க, 'வள்ளல்' என்றார். "ஊர்வ பதினொன்றா மொன்பது மானிடம், நீர் பறவை நாற்காலோர் பப்பத்தாம்- சீரிய, பந்தமாந்தேவர் பதினாலயன்படைத்த, வந்தமில்சீர்த்தாவர நாலைந்து" என்பதனால், ஏழுபிறப்பின் எண்பத்துநான்கு நூறாயிரம்யோனிபேதம் இன்னவை யென விளங்கும். ஒருகணத்தில் - மிகவிரைவில் என்றபடி,உய்தல் - உஜ்ஜீவித்தல், கரையேறுதல். உய்ந்திட - இம்மையில் பகையொழித்துப்பிழைக்க, மறுமையில் நற்கதிபெற எனக் கொள்க. வணங்குவாம் என்ற பன்மைக்குக்காரணம், கீழ்"எங்கள்கோ" என்றவிடத்து உரைக்கப்பட்டது. இதுமுதற் பன்னிரண்டுகவிகள் - பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று விளச்சீரும், மற்றையாறும்மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரியசந்தவிருத்தங்கள். (78) 2.-திட்டத்துய்மனை நோக்கி ஸ்ரீகிருஷ்ணன் 'நீ சேனாபதி யாகிப்பொருக' என்று பணித்தல். சோனைமேகமென்னாவாளிதூவுதிட்டத்துய்மனைச் சேனைநாதனாகிநீசெருச்செய்கென்றுசெப்பினான் |
|