தன்மைத்தற்குறிப்பேற்றவணி. பவ்வம், கவ்வை - பௌவம், கௌவை என்பவற்றின்போலி. ஐவர்-தொகைக்குறிப்பு. கலந்த-முற்று. (80) 4.-தூளிப்பெருக்கமும் பல்லியவொலியும். வெம்பராகம்வெளியிலுற்றெழுந்தபோதுவேழவிற் சம்பராரிதகனநாளினன்றெழுந்ததன்மையென் றும்பரார்நடுங்கினாருருத்துவீழுமுருமென விம்பரார்நடுங்கினாரிரங்குபல்லியங்களால். |
(இ-ள்.) (அந்தச் சேனைகளாற் கிளப்பப்பட்ட), வெம்பராகம் - மிகுந்த தூளிகள், வெளியில் உற்று எழுந்த போது - வெளியிலே தோன்றி மேலெழுந்தபொழுது, வேழம் வில் சம்பராரி தகனம் நாளின் அன்று எழுந்த தன்மைஎன்று-கருப்புவில்லையுடைய மன்மதனை யெரித்த தினமாகிய அப்பொழுதில்(சிவபிரானது நெற்றிக்கண்ணின் நெருப்பின் புகை) மேலெழுந்த விதத்தை யொக்குமென்றுகருதி, உம்பரார் நடுங்கினார் - மேலுலகத்துள்ள தேவர்கள் மிகஅஞ்சினார்கள்; இரங்கு பல் இயங்களால்-ஒலிக்கிற (அச்சேனைகளிலுள்ள) அநேகவாத்தியங்களின் முழக்கத்தால், உருத்து வீழும் உரும் என - கர்ச்சித்துவிழுகிறஇடியென்றுகருதி, இம்பரார் நடுங்கினார் - இவ்வுலகத்துள்ள மனிதர்கள் மிகஅஞ்சினார்கள்; (எ - று.) மயக்கவணி. பராகம், சம்பராரி, தஹநம்-வடசொற்கள். சம்பராரி- சம்பர அரிஎனப் பிரியும்; சம்பரனென்னும் அசுரனுக்குச்சத்துருவென்று பொருள்: இவ்வசுரனைமன்மதன் கண்ணபிரானுக்கு ருக்குமிணிப்பிராட்டியிடத்துப் பிரத்யும்நனென்னும்புத்திரனாகப் பிறந்த பொழுது கொன்றனனென வரலாறு. (81) 5.-இதுவும், மேற்கவியும் - குளகம்: சேனைத்தலைவனோடு தருமபுத்திரன் களத்தில் அணிவகுத்துநிற்றலைக் கூறும். அளவின்மன்னரேறுதேர்களாறிரண்டுபத்துநூ றிளவலோடுகசதுரங்கமங்களோடுமிடம்வரப் பளகமன்னவெழுபதிற்றுப்பத்துநூறுதேரொடும் வளவராதிமன்னரோடுநகுலராசன்வலம்வர. |
(இ - ள்.) இளவல் - (பாண்டவருள்) இளையவனான சகதேவன், அளவு இல்மன்னர் ஏறு- எண்ணிறந்த அரசர்கள் ஏறியுள்ள, ஆறு இரண்டு பத்து நூறு - பன்னீராயிரமென்னுந் தொகையுள்ள, தேர்களோடு - இரதங்களுடனும், கச துரங்கமங்களோடு உம் - யானைகள் குதிரைகளுடனும், இடம் வர - இடப்பக்கத்திலே வரவும், நகுலராசன்-, பளகம் அன்ன - மலைகளைப்போன்ற, எழுபதிற்று பத்து நூறு தேரொடும் - எழுபதினாயிரந்தேர்களுடனும், வளவர் ஆதி மன்னரோடும் - சோழர்முதலிய அரசர்களுடனும், வலம் வர-வலப்பக்கத்திலே வரவும்,- (எ - று.)-'நாயகன் நின்றனன்' என மேற்கவியில் முடியும். |