பக்கம் எண் :

8பாரதம்வீட்டும பருவம்

அங்ஙனமே பாண்டவர்கள்  திரௌபதியுடனே சென்று பன்னிரண்டு வருஷம்
காமியவனம்முதலிய இடங்களில் வசித்துப் பின்னர் மாறுவேடம்பூண்டு
விராடநகரத்தில் ஒருவருஷகாலம் அஜ்ஞான வாசஞ்செய்தனர்.
அந்தப்பதின்மூன்றாவது ஆண்டினிறுதியில் துரியோதனன் பாண்டவர்கள்
விராடநகரத்தில் இருக்கலாமென்று ஒருவாறுஊகித்து உணர்ந்து, அவர்களைக்
கண்டுபிடிக்கும்படி படையெடுத்துச்சென்று, அந்நாட்டை இருபுறத்தும்வளைத்துக்
பசுக்கூட்டத்தைக் கவர்ந்துசெல்ல, அருச்சுனனொழிந்த நால்வரும் விராடனுடன்
சென்று தென்புறத்தில் திரிகர்த்தரையும், விராட குமாரனை உத்தரனுக்குத்
தேரூர்ந்துசென்ற பேடிவடிவான அருச்சுனன்  வடபுறத்தில் துரியோதனாதியரையும்
போரில் வெல்ல அப்போது முன்னையஏற்பாட்டின்படி பதின்மூன்றுவருடமுங்
கழிந்துவிட்டனவாதலால், பாண்டவர்களுந் திரௌபதியும்
நிஜரூபத்தோடுவெளிப்பட்டனர். பின்பு விராடராசன் அவர்களுக்கு விசேஷ
உபசாரஞ்செய்து தூதர்கள் மூலமாகச் செய்தியைத்தெரிவித்து ஸ்ரீகிருஷ்ணன்
முதலான பந்துக்களையும் மற்றும் அரசர்களையும் வரவழைத்து,
கிருஷ்ணனுடன்பிறந்தவளான சுபத்திரை யினிடத்து அருச்சுனனுக்குப்  பிறந்த
குமாரனான அபிமந்யுவுக்குத் தன்மகளான உத்தரையைச் சுபமுகூர்த்ததில் மணம்
புரிவித்தான்.

     பின்பு பாண்டவர்கள் விராடனால் அமைக்கப்பட்ட உபப்பிலா வியமென்ற
பட்டணத்தையடைந்து கிருஷ்ணன் முதலியவர்களுடனே இராச்சியம் பெறும்
உபாயத்தை ஆலோசித்து முடிவு செய்து உலூகனென்னும் அந்தணனைத்
திருதராட்டிரனிடந் தூதனுப்ப, அவ்வேதியன் சென்று செய்தி கூறுகையில், அங்குத்
துரியோதனன், துரோணர்முதலிய பெரியோர்கள்பலர் சொல்லவுங் கேளாமல்
கர்ணன்முதலிய சிற்றினத்தவரின் கருத்தையே முக்கியமாகத்தழுவிச்
சிறிதும்இராச்சியங் கொடுக்கமாட்டேனென்று மறுத்துவிட, அச்செய்தியை
அம்முனிவன் பாண்டவர்க்குங் கண்ணனுக்குந் தெரிவித்துச் சென்றான். அதன்பின்
கண்ணபிரானைத் தந்தமக்குப் போரில் ஏற்ற துணையாகும்படி துரியோதனனும்
அருச்சுனனும் ஒருங்கேசென்று வேண்ட, அப்பெருமான் தந்திரமாக,
துரியோதனனுக்கு யாதவசேனை முழுவதையுந் துணையனுப்புவதாகச்  சொல்லி,
தான் மாத்திரம் பாண்டவர்க்கே துணைவனாயினான். பின் திருதராட்டிரனது
வேண்டுகோளால் சஞ்சயனென்னும் முனிவன் பாண்டவர்பக்கல்வந்து 'அரசாட்சி
பலபெருந்துன்பங்களுக்கும் இடமாதலால், அதனிடத்து ஆசையை விட்டு
வனத்தையடைந்து பெருந்தவஞ்செய்தலே சிறந்த அறிவு' என்று
வைராக்கியம்போதிக்க, பாண்டவர்கள் அதற்குச் சிறிதும் உடன்படாது மறுத்து
விட்டனர். அதன்பின்பு பாண்டவர் மீண்டும் ஆலோசித்துக் கண்ணபிரானையே
தூதனுப்ப, அப்பிரான்சென்று சொன்ன நீதிகளையுஞ் சற்றும் உட்கொள்ளாமல்
துரியோதனன் சிறிதும் அவர்களுக்கு இடங்கொடுக்கமாட்டேனென்று துணிவாய்க்
கூறிவிட்டதுமன்றி அங்குக் கிருஷ்ணனைக்கொல்லும்படி ஒரு தந்திரமுஞ்செய்ய,
கிருஷ்ணபகவான் தனது திவ்வியசக்தியால் மிகப்