பக்கம் எண் :

80பாரதம்வீட்டும பருவம்

     அழித்தற்கடவுளாகிய உருத்திரமூர்த்தி உவமை, தவறாது எளிதில்
பகையழிக்கும் ஆற்றலுக்கு என்க. வாசுகி - அஷ்டமகா நாகங்களுள் ஒன்று
"பொன்னங் குடுமி மேருவரை சிலையாய்ச் சேடன் புரிநாணாய்க், கன்னித்துளவத்
திருநெடுமால் கணையாய்" எனவும், "தடநெடு வடவரை சாபமும், படவர விறைபகர்
நாரியும், மடல்விரி துளவினன் வாளியும்" எனவும் பல புராணங்களில்
திரிபுரசங்காரகாலத்து ஆதிசேஷன் வில்நாணியாக இருந்ததாகக்கதை
பிரசித்தமாகவிருக்க, இங்கு 'நெடுவாசுகிபிணித்து' என்றது புராணாந்தர கல்பாந்தர
கதையைப்பற்றியதாதல்வேண்டும்; இனி, மேரு இமயம் மந்தரம் இவற்றில் ஒன்றை
மற்றொன்றாகக் கவிகள் அபேதமுற வழங்குதல்போல, மகாநாகமென்ற
பொதுமைபற்றி, ஆதிசேஷனை வாசுகியென்று அபதேமாகக் கூறியதென்றுங்
கொள்ளலாம்:  இங்ஙனம் ஒற்றுமை நயம்பற்றிக்கூறும் மரபை "ஆழியான் பள்ளி
யணையே யவன்கடைந்த, வாழிவரையின் மணித்தாம்பே-ஊழியான், பூணே
புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற, நாணே யகல நட" என்ற பாடலிலுங்
காண்க.வட்டம் - வருத்தமென்னும் வடமொழிச் சிதைவு. மெய்க்கணை - தவறாத
அம்பென்றுமாம். "பின்னைதழுவுங்கணை" என்றாற்போல, திருமாலுக்கு உரிய
அடைமொழி கொடுத்து 'மழைமேகநிகர்மெய்க்கணை' என்றார். ஆர் அழலின் -
அழித்தற்கரிய அனலினா லென்றுமாம். அரவாபரணனென்ற விவரம்:-
ஒருகாலத்திற் பரமசிவன் தன்னைமதியாத தாருகவனத்திலுள்ள முனிவர்களது
கருவத்தைப் பங்கஞ் செய்யவும், அவர்கள் மனைவிமார்களின் கற்புநிலையைப்
பரிசோதிக்கவுங் கருதித் தாம் ஒருவிடசங்கமத் திருவுருவங்கொண்டு
அவரில்லந்தோறுஞ்சென்று பிக்ஷாடநஞ்செய்து, தம்மைநோக்கிக் காதல் கொண்ட
அம்முனிபத்தினியரது கற்புநிலைமையைக் கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற்
கோபம்மூண்ட அம்முனிவர்கள் அபிசார யாகமொன்று செய்து
அவ்வோமத்தீயினின்றும் எழுந்த நாகங்கள் பூதங்கள் மான் புலி முயலகன்
வெண்டலை முதலியவற்றைச் சிவனைக் கொன்றுவரும்படி ஏவ, சிவபெருமான்,
தம்மேற் பொங்கி வந்த நாகங்களை ஆபரணங்களாகவும், பூதங்களைத்
தமதுகணங்களாகவுங் கொண்டு, மானைக் கையிலேந்தி, புலியைத் தோலையுரித்து
உடுத்து, முயலகனை முதுகிற் காலால் ஊன்றி, வெண்தலையைக் கையிற்பற்றிச்
சடையின்மேல் அணிந்து, இங்ஙனமே அவற்றையெல்லாம்
பயனிலவாகச்செய்துவிட்டன னென்பது.                          (103)

27.-வீமனையும் அபிமனையும்
துரியோதனன் ஏவலாற் பல அரசர் வளைதல்.

மேவலர்விதப்படையும்வீடுமனுமுட்கும் வகைவீமனும்விறற்  
                                    புதல்வனும்,
பூவலயமுற்று மெழுகாலவிறுதிப்பரவைபோலிகல்விளைத்த  
                                    பொழுதிற்,
கூவலினிலைப்புனலுமீதெழுவதொத்ததொருகோபமொடு    
                                  சர்ப்பதுவசக்,
காவலனுரைப்பவிருவோரையும்வளைத்தனர்கள்காவல
                              ரெனைப்பலருமே.

     (இ - ள்) (இவ்வாறு), வீமனும்-, விறல் புதல்வன்உம் - வெற்றியையுடைய
(அருச்சுனனது) குமாரனான அபிமந்யுவும்,'-