(இ - ள்.) (அப்பொழுது), ஆதபன் ஒளித்த திசைஓ-சூரியன் மறைந்த மேற்குத்திக்குமாத்திரமோ, ஒளி சிவந்தது-(தன்) ஒளி செந்நிறமடைந்தது; மாதிரம்உம்-திக்குக்களும், மை கடல்உம்-கரிய கடலும், மா நிலம்உம்-பெரிய பூமியும், முட்ட-முழுவதும், அற ஆழ் குருதி மெத்துகையினால்-மிகவும் ஆழ்ந்துள்ளஇரத்தவெள்ளம் மிகுதலால், ஒரு மாசு அறு சிவப்புவடிவ ஆய்- களங்கமில்லாத ஒருசிவந்தவடிவத்தையுடையதாய், எதில் இருள் புக்கு உலவல் ஆம் இடம் அற-பகையாகிய இருள் பிரவேசித்துசஞ்சரித்தற்கு ஏற்ற வெற்றிட மில்லாதபடி, கடையின்ஏறு அனலிஒத்தது-(யுகத்தின்) முடிவில் (கடலினின்று) வெளியெழுந்து பரவும்படபாமுகாக்நியைப் போன்றது; (அச்சமயத்தில்), இகலி பாதகம், மிகுத்த கொலைவாள்நிருபர்- (ஒருவரோடொருவர்) மாறுபட்டுப் பாவத்தை மிகச் செய்யுங் கொலைத்தொழிலையுடைய ஆயுதங்களையேந்திய (இருதிறத்து) அரசர்களும், தம்தமது பாடிநகர் புக்கனர்கள் - தங்கள் தங்களது படைவீட்டிற் போய்ச் சேர்ந்தார்கள்; (எ-று,) 'ஆதபனொளித்ததிசைஒளிசிவந்தது' என்றது, சூரியாஸ்தமன காலத்தில் தோன்றுஞ் செவ்வானத்தை. இரத்தத்துக்கும் நெருப்புக்கும் உவமை செந்நிறம்பற்றியது. மாநிலம்முழுவதும் குருதிமெத்துகையினாற் சிவந்தது என்றது - பிறிதின்குணம்பெறலணி. அங்ஙனம் சிவந்த நிலத்தைக் கடையினேறு அனலியொத்ததென வருணித்தது - தன்மைத்தற்குறிப்பேற்றவணியாம். படைவீடு நகரம்போலப் பல பிராணிகள் ஒருங்குதிரண்டு வசிக்கும்படி விசாலமாக ஒழுங்குபட அமைக்கப்பட்டுள்ள தென்ற சிறப்பு விளங்க, 'பாடிநகர்' என்றார்; ஸ்ரீவேதவியாசரும் படைவீட்டுக்கு அஸ்தினாபுரியை உவமை கூறியுள்ளார். திசையோ, ஓ - பிரிநிலை. ஏது இன்மை - யாதொருசம்பந்தமுமில்லாமையென அயலையுணர்த்திப் பகையைக் குறிக்கும். ஒளியும் இருளும் ஒன்றுக்கொன்று மாறுபாடுடைய தாதலால், 'ஏதிலிருள்' எனப்பட்டது. "கோறல், பிறவினை யெல்லாந் தரும்" என்பவாகலின், 'பாதகமிகுத்த கொலை' என்றது. பி-ம்:- கடலினேறனலி. (108) 32.-சூரியோதயவருணனை. கூளிகள்செ ருக்கிநட மாடுகளம் விட்டரசர் கோமகனை யுற்றளவிலேவாளபிம னுக்குமொரு தேர்விசய னுக்குநம்வ ரூதினிபுறக்கி டுவதே நாளைமுது கிட்டவரை யாருயிர்செ குத்திடுவ னானெனவு ரைத்த னனிரா மீளவுழு தித்தனன்வி ரோசனன்மு தற்பகலில் வீரர்வி றலைக்க ருதியே. |
(இ - ள்.) கூளிகள் - பெருங்கழுகுகள் [அல்லது பேய்கள்], செருக்கி - (மிக்கதசையாகிய நல்லுணவு தமக்குக் கிடைத்ததனால்) மிகக்களித்த, நடம் ஆடு - கூத்தாடப்பெற்ற, களம் - போர்க்களத்தை, விட்டு - நீங்கி, அரசர் - (கௌரவசேனையின்) அரசர்கள், கோமகனை-இராசராசனான துரியோதனனை, உற்றஅளவில்-சேர்ந்தவளவில்,- (அவன் அவரைநோக்கி), 'வாள் அபிமனுக்குஉம் - ஆயுதப்பயிற்ச்சியையுடைய அபிமந்யுவுக்கும், ஒரு தேர் விசயனுக்கு உம் - ஒருதேரையுடைய அருச்சுனனுக்கும், நம் |