பக்கம் எண் :

மூன்றாம் போர்ச்சருக்கம்89

துரோணனும், முதல் ஆம் - முதலாகிய, அதிரதர்உம் - அதிரதர்களும், எல்
ஆர் -ஒளி நிறைந்த. இரத கய துரங்கம் - தேர்யானை குதிரைகளில், ஏல் -
பொருந்தின,ஆளுடனே - வீரர்களொடு, காலாள்உம் - பதாதிவீரர்களும்,-
வில்லால் முன் நாள்தமைதுரந்த வீரன்தனைஉம் - வில்திறமையால் முந்தினநாளில்
[இரண்டாநாட்போரில்]தம்மைத் துரத்திய வீரனான அருச்சுனனையும்,
சிறுவனைஉம் - அருச்சுனன்மகனான அபிமன்னுவையும், (அருச்சுனனுக்குப்
பாகனாகவுள்ள), மல்லால் வஞ்சம்மல் அடர்த்த மாயன்தனைஉம் -
இளம்பருவத்திலே மற்போரால்வஞ்சனையையுடைய மல்லர்களை அழித்த
ஆச்சரியகசக்தியையுடையகண்ணபிரானையும், வளைத்தார் -
சூழ்ந்துகொண்டார்கள்; (எ - று.)

     துரோணகும்பத்தில் [பதக்களவுகொண்ட பாத்திரத்தினின்று] பிறந்தமைபற்றி,
துரோணன் என்று பெயர்; துரோணம்-பதக்கு: இனி, துரோணமென்று வில்லுக்குப்
பெயருண்மையால், வில்வன்மைபற்றிவந்த பெய ரென்னவுமாம். கஜம் - கயமென
மொழியிடையில் ஜகரம் யகரமாயிற்று. ஏலாள் - வினைத்தொகை; ஏலுதல் -
பொருந்துதல். மேலாள் எனப் பதம்பிரித்து உரைத்தல் மோனைத்தொடைக்குச்
சிறவாதாம். மல்-மல்லர்க்குத் தொழிலாகுபெயர். கம்ஸசபையிற் கிருஷ்ணபலராமர்
செல்லுகையில், அவனால் வஞ்சனையாக ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகன் முதலிய
பெருமல்லர்கள் சிலர் வந்துஎதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர்செய்ய,
அவர்களையெல்லாம் இவ்யாதவவீரர் இருவரும் மற்போரினாலேயே கொன்று
வென்றிட்டன ரென்பது கதை.   பி - ம்:  வீரன்றனையுஞ் சிறுபதத்தே. (113)

5.-துரியோதனன்முதலியோர் வீமனை வளைத்தல்.

சூரர்க்கெல்லாமுதலெண்ணுந் துரியோதனனுந்தம்பியரு
மாரக்கவிகைக்காந்தாரன் முதலாவுள்ளவவனிபருஞ்
சேரத்திரண்டுகரிகளொரு சிங்கம்வளைத்ததெனச்சிங்க
வீரத்துவசனின்றுழிப்போய் வளைத்தார்சமரம்விளைத்தாரே.

     (இ - ள்.) சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனன் உம் -எல்லா
வீரர்களுக்கும் முதலிலெண்ணப்படுகிற துரியோதனனும், தம்பியர் உம்- (அவனது)
தம்பிமார்களும், ஆரம் கவிகை-முத்துக்களாலாகிய குடையையுடைய, காந்தாரன்
முதல் ஆ உள்ள அவனிபர்உம் - காந்தாரதேசத்தரசனான சகுனி முதலாகவுள்ள
அரசர்களும், சேர திரண்டு - ஒருசேரக்கூடி, கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது
என -பலயானைகள் ஒரு சிங்கத்தைச் சூழ்ந்ததுபோல, சிங்கம் வீரம் துவசன்
நின்ற உழிபோய் வளைத்தார் - சிங்கத்தின் வடிவத்தையெழுதின வீரத்தன்மைக்கு
அறிகுறியானகொடியையுடைய வீமசேனன் நின்றவிடத்திற் சென்று அவனைச்
சூழ்ந்துகொண்டு,சமரம் விளைத்தார் - போரைச் செய்தார்கள்; (எ - று.)