பக்கம் எண் :

96பாரதம்வீட்டும பருவம்

15.-அப்போது அருச்சுனன் தொடர்ந்துசென்று போர்புரியாதபடி
ஸ்ரீக்ருஷ்ணன்தாளிணை பற்றுதல்.

ஆழியெடுத்தனன்வீடுமனைப்பொ ருதாவியழித்திடுவா
னூழிமுகக்கனல்போலெழுமப் பொழுதோடியருச்சுனனுந்
தாழிதனக்குமுன்வீடுகொடுத்தரு டாளிணையைப்பிடியா
வாழியுனக்கிவனோவெதிர்வித்தக மாயவெனத்தொழுதான்.

     (இ - ள்.) (இங்ஙனம் கண்ணபிரான்), ஆழி எடுத்தனன் - சக்கரத்தை
யேந்திக்கொண்டு, பொருது - போர்செய்து, வீடுமனை ஆவி அழித்திடுவான் -
பீஷ்மனைக்கொல்லும்பொருட்டு, ஊழி முகம் கனல் போல்-பிரளயகாலத்துத்
தீப்போல, எழும் அப்பொழுது-புறப்பட்டுச்சென்ற அந்தச்சமயத்தில், அருச்சுனனும்-
,ஓடி - (அவ்வெம்பெருமானைத் தொடர்ந்து) விரைந்துசென்று, தாழி தனக்கு முன்
வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா - தயிர்த்தாழிக்கு முன்னே
முத்தியைக்கொடுத்தருளின (அவனது) உபயபாதத்தை(த் தன்கைகளாற்)
பிடித்துக்கொண்டு, 'வித்தக - ஞானசொரூபியானவனே! மாய -
ஆச்சரியசக்தியுடையவனே! வாழி-வாழ்வாயாக; உனக்கு இவன்ஓ எதிர் -
(வரம்பிலாற்றலையுடைய) உனக்கு இவ்வீடுமனோ எதிராவன்?' என-என்று கூறி,
தொழுதான்-நமஸ்கரித்தான்; (எ - று.)

     'அருச்சுனனால் வீடுமனை வெல்லமுடியாமற் போகவே, கண்ணன் தன்
சபதந்தவறியாயினும் சக்கரமெடுத்துப் போர்புரியலாயிற்று' என்று தனக்கு
உண்டாகும்பெரும்பழிக்கு அஞ்சி அருச்சுனன் கண்ணனைப் போர்புரியாதபடி
திருவடிபிடித்துவேண்டுபவனானான். வரையறைகடந்த கண்ணனது
பெருங்கருணைக்குக்கண்ணெச்சில்பட்டு ஏதேனுந் தீங்குவிளையுமோ வென்று தன்
மனத்தில் திடுக்கென்றுஉண்டான சங்கையால், அந்தத் திருஷ்டி தோஷம்
உண்டாகமலிருக்கவேண்டுமென்றுவாழியென வாழ்த்தினான்; இங்ஙனம்பகவானை
வாழ்த்துதல், பொங்கும்பரிவையுடைய பெரிய பக்தர்களது மரபு. அதிக
விருப்பத்தால்அவசியமில்லாதவிடத்திலும் பயசங்கையுண்டாதல், இயல்பு. இவனோ
என்ற ஓகாரம்-இழிவுசிறப்போடு எதிரல்ல னென எதிர்மறையையுங் குறிக்கும்.

     'தாழிதனக்குமுன்வீடுகொடுத்தருள் தாளிணை' என்பதிலடங்கியசரிதை:-
ஒருநாள் கண்ணன் யசோதை பால்கொடாததற்காக வெகுண்டு தயிர்த்தாழிகளை
யுடைத்து உருட்டிவிட்டு, அதுகண்டு தன்னை யடிக்கக்கோலெடுத்து வந்த
அவளுக்கு அகப்படாதபடி ததிபாண்டனென்பவனது மனையிலே மறைய, அவன்
கண்ணனது திருவடித்தாமரைகளைப் பிடித்துக்கொண்டு 'எனக்கு முத்தியளிக்க
வேண்டும்' என்ன, கண்ணன் 'தாய் என்னை அடிக்க வருகிறாள்: என் காலை விடு'
என்று சொல்ல, அவன் 'நீ எனக்கும் எனக்கு வேண்டிய இருபத்தெட்டுமனையி
லுள்ளோருக்கும் எனது தயிர்த்தாழிக்கும் பரமபதம் கொடாயானால், யான்
உன்காலைவிடாமல்