பக்கம் எண் :

98பாரதம்வீட்டும பருவம்

நாரணவற்புத வானவருக்கொரு நாயகநிற்பணியும்

வாரணமுத்தி விசாலதலத்திடை வாழ்வுறவைத்தவனே.

     (இ - ள்.) ஆரணம் கற்பித - வேதங்களிற்கூறிய நியமத்தை யுடையவனே!
மாதவ - மாதவனென்னும் பெயரையுடையவனே! அச்சுத - அச்சுதனென்னும்
பெயரையுடையவனே! ஆழியிடைதுயிலும் - கடலிலே அறிதுயிலமர்ந்தருளும்,
காரண - பிரபஞ்ச காரணணே!  சித் குண ரூப - ஞானத்தையே குணமாகவும்
வடிவமாகவும் உடையவனே! மலர் கொடி காதல் மனத்து உறையும் -
செந்தாமரைமலரில் வாழும் பூங்கொடிபோல் மெல்லிய வடிவமுடைய திருமகளது
அன்புள்ள மனத்தில் (எப்பொழுதும்) வசித்தருளும், நாரண - நாரயணனென்னும்
பெயரையுடையவனே! அற்புத - ஆச்சரியசக்தியுடையவனே! வானவருக்கு ஒரு
நாயக - தேவர்கட்கு ஒப்பில்லாத தனிநாயகனே! நின் பணியும் வாரணம் -
உன்னைவணங்குவதொரு யானையை, முத்தி விசால தலத்திடை - மோஷமாகிய
பெரியஉலகத்தினிடத்தே, வாழ்வு உற - பேரின்பவாழ்க்கையையடையும்படி,
வைத்தவனே -சேர்ப்பித்தருளியவனே!(எ-று.)

     ஆரண கற்பித என்பதற்கு - வேதமந்திரங்களால் (ஓரிடத்து) ஆவாகனஞ்
செய்யப்படுபவ னென்றும் பொருள்கொள்ளலாம். மாதவன் - திருமகள்கணவன்.
அச்சுதன் - தன்னைச்சரணமடைந்தவர்களை நழுவவிடாதவன் அல்லது
அழிவில்லாதவன். திருப்பாற்கடலிலும் மற்றைக்கடல்களிலும் பிரளயசமுத்திரத்திலும்
எம்பெருமான் பள்ளிகொண்டு யோகநித்திரை செய்தருளுகின்றன னென நூல்கள்
கூறும். கொடி - உவமையாகுபெயர். சித்குணரூப, அத்புத, நாயக, வாரணம்,
முக்திவிஸாலதலம்- வட சொற்கள். ஒருநாயகன் - ஆதிநாயகன். நிற்பணியும் -
"நின்னீறியல்பாம்" என்ற விதிக்கு மாறாக னகரந் திரிந்தது; இரண்டாம்
வேற்றுமைச்சிறப்புவிதியால். முக்தி - (இவ்வுலகப்பற்றுக்களை) விட்டு
அடையுமிடமெனக்காரணப்பெயர்; 'வீடு' என்னுந் தமிழ்ப் பெயரும் இதன்பொருள்
கொண்டதே.

     'வாரணம் முத்திதலத்து வாழ்வுறவைத்தவன்' என்பதிலடங்கியகதை:-
இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்க விஷ்ணுபக்தியுடையவனாய் விஷ்ணு
பூஜைசெய்கையில், ஒரு நாள் - அகஸ்தியமகாமுனிவர் அவனிடம் எழுந்தருள,
அப்பொழுது அவன் கருத்து முழுவதையும் திருமாலைப்பூசிப்பதிற்
செலுத்தியிருந்ததனால் அம்முனிவர்வருகையை யறியாமல் அவருக்கு
உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அவர் தம்மை அலட்சியஞ்செய்தா னென்று
கருதிக் கோபித்து 'நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால், யானையாகக் கடவை'
என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத்தோன்றினனாயினும்,
முன்செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும்
ஆயிரந்தாமரை மலர்களைக்கொண்டு திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில்,
ஒருநாள் பெரியதொரு தாமரைத்தடாகத்தில் அருச்சனைக்காகப்