தான்உம்- நகுலனுக்குத் தம்பியான சகதேவனும், (தேரினின்று இறங்கி), நகு- பிரகாசிக்கிற, மணி - இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற, வலயம்- வளையையணிந்த,தோள்மேல்-(தன்) கையில், மிகு திறல் தண்டுகொண்டுஏ - மிக்கவலிமையையுடைய கதாயுதத்தை எடுத்துக் கொண்டே, வென் இட - (அச்சகுனி) முதுகுகொடுக்கும்படி, பொருது - போர்செய்து, மீண்டான் - திரும்பி (த்தேர்மீது) ஏறினான் ; (எ - று.) தேரினின்று இறங்கிக் கையிற் கதையை யேந்திய சகுனி, சிறிதுபொழுதேனும் எதிர்த்துநின்று அவ்வாயுதங்கொண்டு போர் செய்யமாட்டாமல் உடனே அஞ்சிப் புறங்கொடுத்துத் தோற்று ஓடுதலால், அவனுக்கு அப் படைக்கலம் போர்க்கருவியாகாது, வழுக்குதலுடைய சேற்றுநிலத்திற் சறுக்கிவிழாமல் ஓடுதற்கு உதவியாகிற ஊன்றுகோல்மாத்திரமாகப் பயன்பட்டதென்றார்; இது - தற்குறிப்பேற்றவணி. அத்தேர் - பாகனும் துவசமும் குதிரையும் இழந்த தேர். பி -ம்: இளையகோவும். (10) 11.-துரியோதனன் வீமனோடு பொருதல். மதாசலமகுடமான்றேர்வாம்பரிவயவர்வெள்ளப் பதாதியெம்மருங்கும்போதப்பார்த்திவர்நிழலிற்போதப் பிதாமகனிறந்தானென்றுபேதுறுநிருபன்போந்து சதாகதிமைந்தனோடுந்தாக்கினன்றபனன்போல்வான். |
(இ-ள்.) மத அசலம்- மதத்தையுடைய மலைகள் போன்ற யானைகளும், மகுடம் மான் தேர் - சிகரத்தையுடைய குதிரைகள் பூட்டிய தேர்களும், வாம்பரி - தாவிச்செல்லுங் குதிரைகளும், (என்னும் இவற்றில் ஏறிய), வயவர் - வீரர்களும், பதாதி வெள்ளம்- காலாள்களின் கூட்டமும், எ மருங்குஉம் போத - எல்லாப் பக்கங்களிலும் (சூழ்ந்து) வரவும், பார்த்திவர் - அரசர்கள், நிழலின் -(தனது) நிழல்போல, போத (நீங்காது உடன்) வரவும்,- தபனன் போல்வான் -சூரியன்போல விளங்குபவனான, பிதாமகன் இறந்தான் என்று பேது உறு நிருபன்- பெரியபாட்டனான வீடுமன் அழிந்தானென்று மதிமயக்கமடைந்த துரியோதனராசன்,- போந்து-வந்து, சதாகதி மைந்தனோடுஉம்- வாயுபுத்திரனான வீமசேனனுடனே, தாக்கினன்- எதிர்த்துப்பொருதான்; ( எ-று.) பார்த்திவர் - பிருதிவியை ஆளுபவர் ; தத்திதாந்தநாமம்: ப்ருதிவீ - பூமி ; ப்ருது என்னும் அரசனால் சீர்ப்படுத்தப்பட்டமை பற்றிய பெயர் இறந்தான் என்றது, இங்கே இலக்கணை; வலிமை முழுதுமொடுங்கி இறந்தாற்போலானா னென்றபடி. பேது - பேதம் என்னும் வடசொல்லின் விகாரம். 'தபனன் போல்வான்' என்பதனை, வீமனுக்கு அடைமொழியாக்கினும் பொருந்தும், மேல் அவனே வெல்லுதலால். (11) 12.- வீமன் துரியோதனனோடு அவனைச் சார்ந்தாரையும் வெல்லுதல் அரிக்கொடியரியேறன்னானரவவெங்கொடியுமற்று வெருக்கொள்பேரரவமன்னான்வில்லுமுனற்றுவீழ |
|