பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்103

     அகத்தியன் கடலைக் கரத்திலொடுக்கிய கதை:-இந்திரன் முதலிய
தேவர்கள்,தம்பகைவனாகிய விருத்திராசுரன் மற்றும்பல அசுரர்களுடனே கடலில்
ஒளித்துக்கொண்டபோது, அகத்தியமகா முனிவனை வந்து பிரார்த்திக்க,
அம்முனிவரன், அக்கடலின் நீரைத் தனது ஒருகையால் முற்றும் முகந்துபருகியருளி,
உடனே ஒளித்திருந்த அவ்வசுரரை இந்திரன் கொன்றபின், அவர்வேண்டுகோளின்
படி மீண்டும் உமிழ்ந்தன னென்பதாம்.                            (152)

15.- இருதிறத்துச் சேனையோரும் துரோணன்திறலைப் புகழ்தல்.

வந்தெதிர்முட்டுதலுந்தனதேரினைமாறுபடத்திருகிச்
சிந்தையுமானமும்வீரமும்விட்டொருசெயலறவென்னிடலுந்
தந்திரநாதனுடைந்தனனென்றிருதானையின்மன்னவரும்
அந்தணனாண்மையும்வன்மையும்வின்மையுமன்றுதுதித்தனரே.

     (இ-ள்.) வந்து எதிர் முட்டுதலும் - (துரோணன்) வந்து எதிரில்
தாக்கியவளவில், (திட்டத்துய்மன்), தனதேரினை மாறுபட திருகி - தன்னுடைய
தேரைப் பின்னாகத் திருப்பிக்கொண்டு, சிந்தை உம் மானம்உம் வீரம்உம் விட்டு -
எண்ணத்தையும் மானத்தையும் பராக்கிரமத்தையும் இழந்து, ஒரு செயல் அற -
செய்யுந்தொழிலொன்று மில்லாமல், வென் இடலும் - புறங்கொடுத்தவளவிலே,-
தந்திரநாதன் உடைந்தனன் என்று - (பாண்டவர்) படைத்தலைவன் தோற்றா
னென்றுஅறிந்து, இரு தானையின் மன்னவர்உம் - இரண்டு சேனையின்
அரசர்களும்,அன்று - அப்பொழுது, அந்தணன் - முனிவனான துரோணனது,
ஆண்மைஉம் -பராக்கிரமத்தையும், வன்மை உம் - வலிமையையும், வின்மைஉம் -
வில்தொழில்திறத்தையும் துதித்தனர் - புகழ்ந்து கொண்டாடினார்கள்; (எ-று.)-
'தனதேர்' - இங்கு வருமொழி ஒருமையாயிருக்கும் பொழுது 'அ' உருபு
வந்தது.                                                       (153)

16.- தருமபுத்திரன் திருஷ்டத்யும்நனைத் தழுவி முகமன்கூறுதல்.

வேதியன்விட்டசரங்களினொந்துவெரீஇவருமன்னவனைத்
தாதவிழ்பொற்றொடைமார்பிலணைத்துயர்தருமனுரைத்தருள்வான்
நீதவறிற்பினையார்நிலைநிற்பவர்நிருபர்சிகாமணியே
மோதியிளைத்தனையாறுகெனப்பலமுகமன்மொழிந்தனனே.

     (இ-ள்.) வேதியன் விட்ட சரங்களின் - துரோணன் எய்த அம்புகளால்,
நொந்து - வருந்தி, வெரீஇ வரும் - அஞ்சி ஓடிவருகிற, மன்னவனை -
திட்டத்துய்மனை,- உயர் தருமன் - சிறந்த யுதிட்டிரன், தாது அவிழ் பொன்
தொடைமார்பில் அணைத்து - பூந்தாதுகள் சிந்துகிற அழகிய மாலையைத் தரித்த
மார்பிலேபொருந்தத் தழுவிக் கொண்டு, உரைத்தருள்வான்-கருணையோடு தைரியங்
கூறுபவனாய்,-'நிருபர் சிகாமணியே - அரசர்களுக்குத் தலைமேலணியும்
இரத்தினம்போன்றவனே! நீ தவறின் -(துரோணனுக்குமுன்) நீயே பின்னிட்டால்,
பிணை யார் நிலைநிற்பவர் - வேறுயாவர் உறுதியாய் நிற்க வல்லார்? மோதி
இளைத்தனை - போர்செய்து சோர்ந்தாய், ஆறுக - (அவ்விளைப்புத்) தணிவாயாக,'
என - என்று, பல முகமன் மொழிந்தனன் - அநேக உபசார வார்த்தைகளைக்
கூறினான் (எ -று.)