பக்கம் எண் :

104பாரதம்துரோண பருவம்

     தாது - மகரந்தப்பொடி, நீ தவறின் - உன்னைவிட்டாலென்றுமாம். பின்னை -
என்பது,வேறு என்றும் பொருளில் வந்தது. நிருபர்சிகாமணி-அரசர்கள்
தலைமேல்வைத்துக்கொண்டாடத்தக்கவனென்றபடி.                     (154)

17.-இதுமுதல்மூன்றுகவிகள்-ஒருதொடர்: 'நீசக்கரவியூகத்தைப்பிளந்து
வெல்க' என்று அபிமனைத் தருமன்தழுவி விடைகொடுத்தனுப்பியமை
கூறும்.

தன்னெதிர்மாமயிலோனெனநின்றதனஞ்சயன்மாமகவைப்
பொன்னெதிர்பேரொளியருள்வடிவாகியபூபதிவருதியென
நின்னெதிர்போரினினிற்பவர்வேறிலர்நேமிவியூகமுநீ
முன்னெதிராவமர்புரிபொழுதன்றிமுரண்குலையாதினியே.

     (இ - ள்.) (பின்பு), பொன் எதிர் - பொன்னையொத்த, பேர்ஒளி-மிக்க
உடம்பினொளியையுடைய, அருள் வடிவு ஆகிய-கருணையின் வடிவமான, பூபதி -
தருமராசன்,-தன் எதிர்-தனது எதிரில், மா மயிலோன் என நின்ற - சிறந்த
மயிலைக்(கொடியும் வாகனமுமாக) உடைய முருகக் கடவுள்போல நின்ற,
தனஞ்சயன் மா மகவை - அருச்சுனனது சிறந்த புத்திரனான அபிமனை, வருதி
எனா - வா வென்று அழைத்து, 'நின் எதிர்-உனது எதிரில், போரினில் நிற்பவர் -
யுத்தத்தில் நிற்கவல்லவர், வேறு இலர் -எவரு மில்லை; இனி-, நீ-, முன் எதிரா-
முன்னே எதிர்த்துச்சென்ற அமர் புரி பொழுது அன்றி-போர்
செய்யும்பொழுதில்லாமல், நேமி வியூகம் உம் - சக்கரவியூகமும், முரண் குலையாது
- வலிமை யழியாது;' (எ - று.)-இப்பாட்டில், 'என' என்ற வினையெச்சம், மேல்
பத்தொன்பதாம்பாட்டில் வருகிற "புல்லுக வென்றனன்" என்பதிலுள்ள 'என்றனன்'
என்ற முற்றோடு முடியும்; இப்பாட்டின் பின் இரண்டடிமுதல் 19-ஆம் பாட்டில்
"புல்லுக" என்பதுவரை - தருமன் அபிமனை நோக்கிக் கூறிய வார்த்தைகள்.

     முருகன் - அபிமனுக்கு, இளமை அழகு பலம் பகைவெல்லும் பராக்கிரமம்
சிவபிரான்ருள்பெற்றமை இவற்றில்உவமை. தருமன் செந்நிறமுள்ளவ னாதலால்,
'பொன்னெதிர்பேரொளி'  எனப்பட்டது; இனி, இத்தொடருக்கு-
பிருகஸ்பதிபதியையோத்த சிறந்த ஞானமுடைய என்றும் பொருள் கொள்ளலாம்.
கருணைநிரம்பியவனென்றும், அக்குருணையின் அமைதி இவனது தோற்றங்
கண்டமாத்திரத்திலே விளங்கு மென்றுங் கூறுவார், 'அருள்வடிவாகிய' என்றார். (155)

18.என்னையழைத்துடனென்னலுடன்றுவென்னிட்டவில்லா
                                      சிரியன்,
மன்னைவளைத்தொருசக்கரயூகம்வகுத்தெதிர் நின்றனனா,
னின்னையளித்ததராபதிதன்னையுநின்னையுமேமொழியப்,
பின்னையெடுத்தவிலோடெதிர்சென்றுபிளந்திடவல்லவர்யார்.

     (இ-ள்.) 'நென்னல் - நேற்று, என்னை-, அழைத்து- (போருக்குக்) கூப்பிட்டு,
உடன் -என்னுடனே, உடன்று-போர்செய்து, வென் இட்ட - புறங்கொடுத்த, வில்
ஆசிரியன்- வில்லில்வல்ல துரோணாசாரியன், அக்கறுவையுட்கொண்டு இன்றைக்கு),
மன்னை வளைத்து - (தன்சேனை) அரசர்களைச் சூழநிறுத்தி, ஒரு சக்கரயூகம்