பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்105

வகுத்து-ஒப்பற்ற சக்கர வியூகமாக அணிவகுத்து, எதிர் நின்றனன்- எதிரில்
(போருக்கு) நின்றான்; நின்னை அளிந்த - உன்னைப் பெற்ற, தராபதிதன்னைஉம் -
அருச்சுனராசனையும், நின்னைஉம்ஏ- உன்னையும் ஆக உங்களிரண்டுபேரையும்,
ஒழிய-தவிர, எடுத்து விலோடு- ஏந்திய வில்லுடனே, எதிர் சென்று-எதிரிற் போய்,
பிளந்திடவல்லவர் - (அந்தவியூகத்தை) சிதைத்திடவல்லவர், பின்னை யார்- வேறு
யாவர் உளர்? (எ - று.)

     'அபிமந்யு அருச்சுனன்  கிருஷ்ணன் (கிருஷ்ணனது குமாரனான)
பிரத்யும்நன்இந்நால்வரு மொழிய வேறு ஐந்தாமவனொருவன் பதும வியூகத்தைப்
பிளக்கவல்லானல்லன்' என்று வியாசபாரதங் கூறுகிறது. உடல் - விரைவில்
என்றுமாம்: இதனை 'வென்னிட்ட' என்றதனோடு கூட்டலுமாம். ஆல் -சுற்றுலா.
பி-ம்:-
என்னை வளைத்திட.                                     (156)

19.-புல்லுக வென்றனன் மார்புற வன்பொடு புல்லியி மைப்
                                  பொழுதிற்,
செல்லுக வென்றனன் வன்சம ரத்திடை சென்றுமிகப்
                                  பகையைக்.
கொல்லுக வென்றனன் னின்புய மேவரு கொற்றவை
                               தன்னருளால்,
வெல்லுக வென்றன னன்றுது ரோணனை வென்ற
                              பெருந்தகையே. 

     (இ-ள்.) 'புல்லுக - (என்னை வந்து) தழுவுவாயாக,' என்றனன்-என்று சொல்லி,-
அன்று துரோணனை வென்ற பெருந்தகை-  முந்தின நாளில் துரோணனைச் சயித்த
பெருமைக்குணமுடைய  தருமன், மார்பு உற அன்பொடு புல்லி - (அபிமனை)
மார்பிலே பொருந்தப் பிரீதியோடு அனைத்துக்கொண்டு, இமை பொழுதில் செல்லுக
என்றனன் - 'மிகவிரைவில் செல்லுவாயாக' என்றுங் கூறினவனாய், 'வன் சமரத்திடை
சென்று-கொடியபோரிற்போய், பகையை மிக கொல்லுக - பகைவர்களை மிகுதியாகக்
கொல்லுவாயாக,' என்றனன்-என்றுங்கூறி. 'நின்புயம்-உனது தோள்களில், மேவரு-
பொருந்திய, கொற்றவைதன் - துர்க்காதேவியின், அருளால்-, வெல்லுக- (பகை)
வெல்வாயாக,' என்றனன் - என்றுங் கூறினான்: (எ - று.)

     போருக்கு உரிய தேவதை துர்க்கையாதலாலும், அவளருளே வெற்றிக்குக்
காரண மாதலாலும், 'கொற்றவைதன்னருளால் வெல்லுக' என்றான். வீரம்
தோளின்திறமையா லுண்டாதலால், வீர மகளாகிய அவனைத் தோளின் மேல்
தங்குகிறவளாகக் கூறுதல் கவிசமயம். 'கொற்றவை' என்னும் பெயருக்கு -
வெற்றியைத் தருபவ ளென்று காரணப்பொருள் கூறலாம்.              (157)

வேறு.

20.-மூன்றுகவிகள்  - அபிமன் யுத்தசன்னத்தனாய்ச் சென்றமை கூறும்.

மூத்த தாதைதன் னேவ லிற்கழன் முளரி கைதொழு துரனுறச்
சேர்த்த நாணுடை வில்லன் வெய்யதெ ரிந்த வாளியன்
                                        முதுகுறக்
கோத்த தூணியன் வாண்மு தற்பல கொற்ற முற்றிய
                                     படையினன்
பார்த்தன் மாமக னிரத மீதுயர் பரிதி யாமென வேறினான்.