(இ-ள்.) பார்த்தன் மா மகன்-அருச்சுனனது சிறந்த புத்திரனான அபிமன், மூத்ததாதைதன் ஏவலின்- (தனது) பெரிய தந்தையான தருமனது கட்டளைக்கு இணங்கி,கடில் முளரி கை தொழுது-(அவனது) தாமரை மலர்போன்ற பாதங்களைக் கைகூப்பிவணங்கி, உரன் உற சேர்த்த-வலிமை பொருந்தக்கட்டிய, நாண் உடை - நாணியையுடைய, வில்லன் - வில்லை யுடையவனும், தெரிந்த-ஆராய்ந்தெடுத்த, வெய்ய வாளியன் - கொடியஅம்புகளை யுடையவனும், முதுகு உற கோத்த- (தனது) முதுகிற் பொருந்த மாட்டிய, தூணியன் - அம்பறாத்தூணியை யுடையவனும், வாள் முதல் - வாள் முதலான, பல-அநேகமான, கொற்றம் முற்றிய - வெற்றி மிக்க, படையினன் - ஆயுதங்களை யுடையவனுமாய், இரதம் மீது - (தனது) தேரின்மேல், உயர்பரிதி ஆம் என - சிறந்த சூரியன்போல, ஏறினான்-(எ - று.) கழல் முளரி - முன்பின்னாகத் தொக்க உவமத்தொகை: தொடர்ச்சி தோன்றக் கூறாமையின் உருவகமாக்கி யுரைத்தற்கு இங்கே இயைபு இன்று முளரி - முட்களையுடைய அரியை [அரையை] யுடையது எனவேற்றுமைத்தொகையன் மொழியாகிய காரணப்பெயர் சூரியனுவமை - விரைந்தோடுஞ் சிறந்த தேர்மீது ஏறுதற்கும், விளக்கத்துக்கும், பகையிருளொழித்தற்குமாம். இதுமுதற் பத்தொன்பது கவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள்மாச்சீர்களும், மற்றையான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். 21. | வீரவார்கழல்கழலின்மீதுவிளங்கமார்பினில்வெண்ணிலா வாரமாலைதுலங்கமாசுணவலயம்வாகுவிலழகெழச் சேரவானமதிருளகற்றுமிரண்டுசெஞ்சுடரென்னவெ சாரமாமணிகுண்டலங்கள்வயங்கமௌலிதயங்கவே. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்.) வீரம் - பராக்கிரமத்துக்கு அறிகுறியான, வார்-நீண்ட, கழல் - கழலென்னும் அணி, கழலின்மீது - பாதத்தின் மேல், விளங்க- பிரகாசிக்கவும், மார்பினில்-, வெள் நிலா வெண்ணிறமான 'சந்திரகாந்திபோன்ற ஒளியை வீசுகிற, ஆரம் மாலை - முத்துமாலை, துலங்க - அசைந்துவிளங்கவும், மாசுணம் வலயம் - பாம்பின்வடிவந்தோன்றத் தொழில்செய்யப்பட்டுள்ள வளை, வாகுவில்- தோள்களில், அழகு ஏழ - அழகோடுவிளங்கவும், வானம் அது -ஆகாயத்தில், சேர-ஒருசேர, இருள் அகற்றும்- இருட்டைப் போக்குகிற, இரண்டு செம் சுடர் என்ன - இரண்டு சிவந்த சூரியர்கள் (இருந்தாற்) போல, சாரம் மா மணி குண்டலங்கள்-சிறந்த பெரிய இரத்தினம்பதித்த குண்டல்மென்னும் காதணிகள், வயங்க - விளங்கவும், மௌலி,-கிரீடம், தயங்க - பிரகாசிக்கவும்,- (எ-று.)- "தேர் செலுத்தினான்"(22) எனமுடியும். மூன்றாமடி - இல்பொருளுவமை. வானமது, அது - பகுதிப் பொருள்விகுதி, செஞ்சுடர் என்பதை - அடையடுத்த பண்பாகு பெயரென்றாவது, பண்புத்தொகையன்மொழி யென்றாவதுகொள்க |