வெல்லவந்ததுரோணமாமுனிவிறலழிந்ததுகுருவெனுஞ் சொல்லழிந்ததுவில்லழிந்ததுதேரழிந்ததுதொடைகளால். |
(இ-ள்.) மல்லல், - வலிமையையுடைய, அம்-அழகிய, புயம்- தோள்களையுடைய, அபிமன் - அபிமந்யுவினது, வெம் சரம் மழை அனைத்தைஉம்-கொடிய அம்புமழை முழுவதையும், (துரோணன்) மால் என-கண்ணபிரான் போல, பல்ல வெம் கணை கொடு விலக்கி-பலவாகிய கொடிய (தன்) அம்புகளைக்கொண்டு தடுத்து, முனைந்து வந்து-கோபித்து வந்து, எதிர் பற்றினான் - எதிரில் தகைந்தான்; தொடைகளால்- (அப்பொழுது அபிமனெய்த) அம்புகளால், வெல்ல வந்த துரோண மா முனி- சயிக்கவந்த துரோணசாரியனது, விறல்-பராக்கிரமம் - அழிந்தது-; குரு எனும் சொல்- ஆசிரியனென்னும் புகழ், அழிந்தது-; வில் அழிந்தது-; தேர் அழிந்தது-, (எ - று.) இந்திரனது அம்புமழையை மலைகொண்டு தடுத்த க்ருஷ்ணனையொப்ப, 'மாலென'என்றார், பல்லம் வெம் கணைஎனப்பிரித்து- பல்லமாகிய வெவ்வியகணையெனினுமாம். (163) 26.- பின்புஎதிர்த்த அசுவத்தாமன் அபிமன்கணையில் மூழ்குதல். தந்தைவென்னிடுமுன்னர்முப்புரதகனனேநிகர்மகன்மிகச் சிந்தைகன்றிவெகுண்டுதேரொடுசென்றுகால்வளைசிலையினா லுந்துகின்றசிலீமுகம்பலபகைமுகங்களிலுருவவே முந்தினானவனப்புமாரியின்முழுகினானுடன்முற்றுமே. |
(இ-ள்.) (இவ்வாறு யாவும் அழிந்து), தந்தை வென் இடு முன்னர் - (தனது) பிதாவான துரோணன் புறங்கொடுக்கு முன்னே, மு புரம் தகனன்ஏ நிகர் மகன் - திரிபுரசங்காரஞ்செய்திட்ட சிவபிரானையே போன்ற புத்திரனான அகவத்தாமன், வெகுண்டு-கோபித்து, சிந்தை மிக கன்றி - மனம் மிகவெதும்பி, தேரொடு சென்று- (தன்) தேருடன்போய், கால் வளை சிலையினால் - கழுந்து வளைந்த (தன்) வில்லினால், உந்துகின்ற-பிரயோகிக்கிற, சிலீமுகம் பல - அநேகம் அம்புகளால், பகை முகங்களில்-பகைவர்களது முகங்களிலே, உருவ-துளைத்துச் செல்லும்படி, முந்தினான்-போரில் முற்பட்டு, (உடனே), அவன் அம்பு மாரியின் - அந்த அபிமனது அம்புமழையில், உடல் முற்றுஉம் முழுகினான் -(தனது) உடம்பு முழுவதும்மூழ்கப்பெற்றான்: (எ-று.) சிவாநுக்கிரகத்தாற் பிறந்த குமார னாதலால், அவனுக்குச் சிவபிரானையே உவமைகூறினார். புரதஹநன் - வடமொழித்தொடர், 'கால்வளைசிலை' என்பதற்கு - பாதத்தால்' ஒருகோடியை அழுத்தி வளைக்கப்பட்ட வில்லென்றுமாம். 'முழுகினான்' என்ற வினைக்கு ஏற்ப, 'அப்புமாரி'என்பது - நீர்மழை யென்றும் பொருள்படும்; தொனி. அம்பு, அப் என்ற வடசெற்கள், நீரின்பெயராம். (164) 27.-கன்னன் அபிமனையெதிர்த்துப் பின்னிடுதல். கன்னனென்றுல கெண்ணும்வீரனு மொய்ம்புடன்பலகணைகள்வான், மின்னொழுங்கொருகோடியென்னநிறுத்திமெய்யுறவீசி |
|