வெரிக்கணையேவிச்சூழ்ந்ததரணிபரெதிர்ந்தவேந்தர் கரிக்குலமிவுளிதிண்டேர்மடியவெங்கணைகடொட்டான். |
(இ - ள்.) அரி- சிங்கத்தின்வடிவமெழுதிய, கொடி - துவசத்தையுடைய, அரி ஏறு அன்னான் - ஆண்சிங்கத்தை யொத்தவனான வீமன்,- வெரு கொள் பேர் அரவம் அன்னான் - (காண்பவர்) அச்சங்கொள்ளுதற்குக் காரணமான பெரிய பாம்பை யொத்த துரியோதனனது, அரவம் வெம் கொடிஉம் - பாம்பின்வடிவமொழுதிய பயங்கரமான துவசமும், அற்ற - அறுந்து, வில்உம் - (அவன்கை) வில்லும், அற்று - அறுபட்டு, முன் வீழ-(அவையிரண்டும்) எதிரிற் கீழ்விழும்படி, எரி கணை - நெருப்புப்போன்ற கொடிய அம்புகளை, ஏவி- செலுத்தி,- (அதன்பின்), சூழ்ந்த தரணிபர் - (அவனைச்) சுற்றிநின்ற அரசர்களும், எதிர்ந்த வேந்தர்- (தன்னை) எதிர்த்த அவ்வரசர்களின், கரி குலம் - யானைக்கூட்டங்களும், இவுளி - குதிரைகளும், திண் தேர் - வலிய தேர்களும், மடிய - அழியும்படி, வெம் கணைகள் - கொடிய அம்புகளை, தொட்டான் - பிரயோகித்தான்; ( எ -று.) அரி -ஹரி: (யானைமுதலிய பெரிய விலங்குகளையும்) அரிப்ப தென்று பொருள். 'வெருக்கொள்பேரரவமன்னான்' எனத் தோல்வியுறுந் துரியோதனனைக்குறித்ததாகவுமாம். தரணிபர் - பூமியையாள்பவர். ஏவித்தொட்டான் என இயையும்; ஏவிச் சூழ்ந்த என இயைத்து உரைப்பினுமாம். பி -ம்: போரரவம். (12) 13.-துரியோதனன் புறங்கொடுப்பதுகண்டு சல்லியன்வந்து வீமனையெதிர்த்தல். பல்லியமுழங்கமன்னர்படப்படப்பரித்தேரோடும் வில்லியறானைவேந்தன்வென்னிடும்விரைவுகாணாச் சொல்லியவிற்கைவாயுசுதனுடனுருமேறென்னச் சல்லியன்முனைந்துவீரசாயகமேவினானே. |
(இ -ள்.) பல் -அநேகமான, இயம் - வாத்தியங்கள், முழங்க - ஆரவாரிக்க, (போருக்குவந்து அப்போரில்), மன்னர் பட பட - (தன்னுடன்வந்த) அரசர்கள் மிகுதியாக அழிய, வில் இயல் தானை வேந்தன் - விற்கள் பொருந்திய சேனையையுடைய துரியோதனன், பரி தோரோடுஉம்- குதிரைகள் பூண்ட தேருடனே வென் இடும் -(வீமனுக்குப் ) புறங்கொடுக்கிற, விரைவு - வேகத்தை, காணாபார்த்து, சல்லியன்-, உரும் ஏறு என்ன முனைந்து - பேரிடிபோல உக்கிரங்கொண்டுவந்து, சொல்லிய வில் கை வாயு சுதனுடன் - கீழ்க்கூறின வில்லையேந்திய கையையுடைய வாயுகுமாரனான வீமனை, வீரசாயகம் ஏவினான் - வலிய அம்புகளைத் தொடுத்தான்; ( எ - று.) பல் இயம் - கொட்டுவனவும் ஊதுவனவும் ஆகிய தோற்கருவி துளைக்கருவி கஞ்சக்கருவி நரப்புக்கருவி எனப்படும் அநேகவாத்தியங்களைக் காட்டும் பொதுச்சொல்லாதலால்,'முழங்க' எனப் பொதுவினை கொடுத்தார். சல்லியன் - (பகைவர்க்கு) அம்பு நுனி போல் (வருத்தஞ்செய்) பவன் என்பது பற்றிய காரணப்பெயர்; |