பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்111

மகன்விழுந்தனன்மார்பின்மூழ்கியவாளியொன்றினின்மற்றுளார்
மிகநடுங்கியொடுங்கியோடினர்வீழுமன்னர்கள்வீழவே.

     (இ-ள்.) (அதன்பின்), சகுனியும்-, திருமகன்உம்- (அவனது) சிறந்த புத்திரனும்.
மற்று உள தமர்உம் மற்றுமுள்ள உறவினர்களும். மேல் இடு தானையோடு -
மேலெழுந்துவருகிற சேனையுடனே, நெடு இகல் களம் வென்று கொள்குவம் என்று-
'பெரிய போர்களத்தில் (பகைவனைச்) சயித்துக் கைப்பற்றுவோம்' என்று கருதி,
எதிர்வந்து அணுகினார்- எதிரில் வந்து நெருங்கினார்கள்; (உடனே அவர்களுள்),
மகன் -சகுனிபுத்திரன், மார்பில் மூழ்கிய வாளி ஒன்றினில்- (தன்) மார்பில்
முழுவதும்புதைந்தஓரம்பால், விழுந்தனன் - இறந்து கீழ்விழுந்தான்; வீழும்
மன்னர்கள் வீழ -(போர்வெல்ல) விரும்பிவந்த அரசர்கள் இறந்துவிழ, மற்று
உளார்- மற்றும் (இறவாது)உள்ளவர்கள், மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர்- 
(அச்சத்தால்) மிகநடுக்கமுற்று வலிமைகுன்றி ஓடிப்போனார்கள்:

     சகுனிமகன் உலூகனென்றும், அவனைச் சகதேவன் கொன்றானென்றும்
வியாசபாரதத்தால் தெரிகின்றது. மேலிடுதானை-சிறப்புப்பெற்ற சேனையெனினுமாம்.
'மார்பில்மூழ்கிய வாளி ஓன்றினில் என்பதைப் பிந்தினவாக்கியத்துக்குங் கூட்டுக.
வீழ்தல் என்பது -  விரும்புதலாதலை "தாம் வீழ்வார்மென்றோள் துயில்" எனத்
திருக்குறளிலுங் காண்க. இனி, 'வீழுமன்னர்கள் வீழ' என்பதற்கு -  இறக்கும்
அரசர்கள் தவிர என்றும் பொருள் கொள்ளலாம்.                     (167)

30.-விகன்னன் முதலியோர் பொரவர, அபிமன் அவர்களை
அவமதிப்புப்படச்சொல்லி விடுத்தல்.

வின்முகந்தெழுவாளிவாளிவிலக்கவந்தவிகன்னனுந்
துன்முகன்றலையாகமற்றுள துணைவருஞ்சமர்துன்னினார்
நன்முகம்பெறுவிசயன்மைந்தனுநானுமக்கெதிரன்றுநீர்
பின்முகம்படவோடியின்றுயிர்பிழையுமென்றுரைபேசினான்.

     (இ - ள்.) (அதன்பின்), வில் முகந்து எழு - வில்லினாற் கொள்ளப்பட்டு
வெளிப்படுகிற, வாளி - (தன்) அம்புகள், வாளி விலக்க-(அபிமனது) அம்புகளைத்
தடுக்கும்படி, வந்த-, விகன்னன்உம்-விகர்ணனென்பவனும் துன்முகன் தலை ஆக -
துர்முகனென்பவன் முதலாக, மற்று உள துணைவர்உம் - இன்னுமுள்ள
துரியோதனன் தம்பிமார்களும்,  சமர் துன்னினார்-போரில் நெருங்கினார்கள்;
(நெருங்க), நல் முகம் பெறு - அழகிய முகத்தைப் பெற்ற விசயன்மைந்தன்உம்-
அருச்சுனனது புத்திரனான அபிமனும், (அவர்களை நோக்கி), 'நான் உமக்கு எதிர்
அன்று-நான் உங்களுக்குச் சமமானவனல்லன் [மிகமேம்பட்டவன்] நீர்-நீங்கள், பின்
முகம் பட  ஓடி-முகம்பிற்படும்படி [முதுகுகாட்டி] விரைந்து சென்று, இன்று-
இப்பொழுது, உயிர் பிழையும்-சீவித்திடுங்கள்,' என்று-, கூரை பேசினான்-வார்த்தை
சொன்னான்: (எ - று.)- நான் உமக்கு எதிர் அன்று, 'அன்று' என்னும் எதிர்மறைப்
பொதுக்குறிப்புமுற்று-இங்கே தன்மையொருமைக்கு வந்தது.               (168)