பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்113

றமை' என்பதற்கு - பகைவர்கள்பலர் அபிமன் வருந்தும்படி வந்து போரைக்
கொடுமையாகச்செய்து நின்ற தன்மையை யென்று உரைப்பாரு முளர்.    (170)

33.-வீமன் தருமனை நோக்கிக்கூறுவது.

தோலநேகமநேகநேமிதூங்கமங்களநேகநீள்
வேலநேகமநேகம்வாள்வரிவில்லநேகவிதம்படக்
காலநேகமெழுந்ததொத்தமராடுகின்றகளத்திடைப்
பாலனேகடிதேகிவெம்முனைபயிலுவானொருபாவமே.

இதுமுதல் மூன்று கவிகள் - குளகம்.

     (இ-ள்.) 'தோல் அநேகம்-பல யானைகளும், அநேகம் நேமி - பல தேர்களும்,
துரங்கமங்கள் அநேகம் -பல குதிரைகளும், நீள் வேல் அநேகம் - நீண்ட பல
வேல்களும், அநேகம்  வாள்-பல வாள்களும், வரிவில் அநேக விதம்-கட்டமைந்த
பலவகை விற்களும், பட - பொருந்த, கால் அநேகம் எழுந்தது ஒத்து-பலதிசைக்
காற்றுக்களும் கிளர்ந்துவீசுவது போன்று, அமர் ஆடுகின்ற-போர்செய்கிற
களத்திடை-யுத்தகளத்திலே, பாலன்ஏ - இளங்குமரனான அபிமனொருவனே,
கடிதுஏகி- விரைவிற்சென்று, வெம்முனை பயிலுவான் - கொடியபோரைச் செய்து
பொருந்துவான்: ஒரு பாவம்ஏ- (இங்ஙனம் அவனைத் தனியே
பகைவர்சேனாசமூகத்தினிடையில் போருக்கு விட்டுப் பார்த்திருப்பது) ஒப்பற்ற
பெரும்பாவமேயாம்: (எ-று.)

     களிற்றுத்தானை தேர்த்தானை பரித்தானை வேற்றானை வாட்டானை
விற்றானை என்ற அறுவகைச்சேனைகளும், இப்பாட்டின் முதலிரண்டடிகளிற்
குறிக்கப்பட்டன. கால் அநேகம் - எட்டுத் திக்குகளினின்றும் விசும்
பலவகைக்காற்றுகள்; இனி,  சப்தமருத்துக்களுமாம். அவற்றின் பெயர் - ஆகவம்,
பிரவகம், சம்வகம், உத்வகம், விவகம், பரிவகம், பராவகம் என்பன:
இவ்வெல்லாக்காற்றுக்களும் உகாந்தகாலத்தில் ஒருங்கு எழுந்து உலகையழிக்கும்
நேமி- சக்கரம்; இது - சினையாகுபெயராய், தேரைக்குறித்தது, பட என்பதற்கு-
அழியஎன்றும் உரைக்கலாம். பாலனே, ஏ - பிரிநிலை, பாவமே, ஏ - தேற்றம்.    
                                                             (171)

34.-தருமனிடம் விடைபெற்றுக்கொண்டு வீமன் அபிமனுக்குத்
துணையாகும் பொருட்டுச் செல்லுதல்.

எனக்குநீவிடைநல்குகென்றவனிருபதந்தொழுதியாரினுந்
தனக்குநேர்தனையல்லதில்லெனவெல்லவல்லதொர்தண்டினான்
மனக்குநேர்வருதேரினன்பலமண்டலீகருமன்னருஞ்
சினக்குழாமுறுசேனையும்புடைசூழவன்றெதிர்செல்லவே.

     (இ-ள்.) 'எனக்கு-, நீ-, விடை  நல்குக- (அபிமனுக்குத் துணைசென்று
போர்செய்ய) அனுமதிகொடுப்பாயாக,' என்று- என்றுசொல்லி(த்தருமனைப்
பிரார்த்தித்து), அவன் இரு பதம் தொழுது - அவனது உபயதிருவடியை வணங்கி,
தனக்கு நேர்- தனக்குச் சமானம், தனை அல்லது - தன்னையேயன்றி, யாரின்உம்