பக்கம் எண் :

116பாரதம்துரோண பருவம்

சினம் கனல் நின்று காய்தரு கண்ணினான் - பொடிய கோபாக்கினி
நிலைபெற்றுமூண்டெரிகிற கண்களையுடையவனான துரியோதனன்.- 'விண்டு
கொண்டு முருக்கும் - மலைகளைப்பறித்தெடுத்து (அவற்றால் பகையை) அழிக்கிற,
மாருதி - வாயுகுமாரனான அநுமான், மீள வந்தனன் ஆம் - திரும்பவும்
(போருக்கு)வந்தான்போலும் என -  என்று, கண்டுகொண்டனன் -
அறிந்துகொண்டான்:(எ -று.)

     கதைகொண்டு கொடுமையாகப்போர்செய்து பகையையழிக்கிற வலிமைமிக்க
தம்பியான வீமனைக்கண்டு, மலைகொண்டு கொடுமையாகப் போர்செய்து
பகையையழித்த வலிமைமிக்க தமையனான அநுமன் வந்திட்டானோ என்று
துரியோதனன் கருதினான். முன்திரேதாயுகத்தில் இராமபிரானது தூண்டுதலால்
அரக்கரை யழித்தற்கு வந்தமைபோல, துவாபரமாகிய இப்பொழுது கண்ணபிரானது
தூண்டுதலால் அரசரையழித்தற்கு வந்தனனென்று கருதினானென்பது, 'மீள'
என்றதனால் விளங்கும். விண்டு - விஷ்ணு என்னும் வடசொல்லின்சிதைவாய்,
வியாபித்ததெனப்பொருள்படும்; எனவே மலைக்காயிற்று.
'வெஞ்சினக்கனல்நின்றுகாய்தருகண்ணினான்' என்பது துரியோதனனாதலை, மேல்
41-ஆங் கவியில் 'புயங்ககேது' என வருவதனால் அறிக. வியூகமாகிய சக்கரம் -
சக்கரவியூகம்,                                                 (176)

வேறு.

39. - வீமன் வருவதுகுறித்துத் தன்சேனையரசரைநோக்கித்
துரியோதனன் கூறுதல்.

நபமுகின்மு ழங்கி யேறி யிடிவிட நடுநடுந டுங்கி மாயு மர
                                        வென,
வுபரியெழு கின்ற சீயம் வரவர வுடையுமிப சங்க மோடு
                                     வனவென,
வபிமனொரு வன்கை யேவி னமபடை யடையநெளி
                        கின்ற தாய பொழுதினில்,
விபினமிசை மண்டு தீயொ டனிலமும்விரவுமியல் பந்த
                                 வீம னணுகிலே.

இது முதல் நான்குகவிகள் - குளகம்.

     (இ-ள்.) - நபம் - ஆகாயத்திற்சஞ்சரிக்கிற, முகில் - மேகம், முழங்கி -
ஆராவரித்து, ஏறி -மேல்நின்று, இடிவிட - இடியிடித்தலால், நடுநடுநடுங்கி -
அளவில்லாத அச்சங்கொண்டு, மாயும்-இறக்கிற, அரவு என - பாம்புகள்போலவும்,-
உபரி எழுகின்ற-மேலே பாயுந்தன்மையுள்ள, சீயம்-சிங்கம், வரவர -
அடுத்தவருதலால், உடையும் - வலிமை குலைகிற, இப சங்கம் -
யானைக்கூட்டங்கள், ஓடுவன என-ஓடுபவைபோலவும்,-அபிமன் ஒருவன் கை
ஏவின் -  அபிமந்யு ஒருத்தனது கையம்புகளால், நம படை அடைய - நம்முடைய
சேனை முழுவதும், நெளிகின்றது ஆய-மிகவருந்துகிறதான, பொழுதில் -
இச்சமயத்தில்,-அந்த வீமன் அணுகில் - அந்த வீமசேனனும் (அவனுக்குத்
துணையாகநெருங்கிச்) சேர்ந்தால், (அது), விபினம்மிசை மண்டு தீயோடு - காட்டிற்
பற்றியெரிகிற நெருப்புடளே, அணிலம்உம் விரவும் - காற்றுங் கலக்கிற, இயல்பு -
தன்மையாம்; (எ - று.)

     நபம் - வடசொல். நபமுகில் என்பதற்கு கார்காலத்துமேகமென்று
பொருள்கொள்ளுதலும் பொருத்தம்; ஆவணிமாசத்தைக்