பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்117

குறிக்கின்ற 'நபா;' என்னும் வடசொல், நபம் எனச்சிதைந்து, இலக்கணையாய்,
கார்காலத்தை உணர்த்தும்; ஆவணிபுரட்டாசி மாதங்கள் வர்ஷாகால மாதலால்,
உபரி,இபஸங்கம், விபிநம் - வடசொற்கள். ஒருசிங்கத்தைக்கண்டு யானைகள்
பலவும் வலிஅழிதல், பிரசித்தம். ஏவின் - ஐந்தாம்வேற்றுமை விரி: ஏ -
முதல்வேற்றுமை.

     இதுமுதல், பன்னிரண்டு  கவிகள் - கீழ்ச்சருக்கத்தின் 45ஆங் கவிபோன்ற
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தங்கள்.  'தன தனன தந்த தான
தனதனதனதனன தந்த தான தனதன' என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாதலால்,
இச்சந்தம்சிறிது வேறுபட்டது.                                      (177)

40.-துரியோதனன் தன்சேனையோரை நோக்கி வீமஅபிமன்னுக்களைப்
பிரித்துப் பொருதாலே எளிதில்வெல்லலாமென்று உபாயம் கூறுதல
்.

சகுனியுடன் விந்துபூரிமுதலியதரணிபரடங்கவேகிமகபதி,
மகன்மகனொடிங்குறாதபடி யெதிர்வளைமின்வருகந்தவாகன்
மதலையைவிகனனுமடங்கல்போலு மிளைஞரும் விருதர்பலருந்
                            துரோணன் மதலையு,
மிகன்மலையிலிந்த நாழிகையிலிவரிருவரையும் வென்று  
                                 கோறலெளிதரோ.

     (இ-ள்.) 'விந்துபூரி முதலிய - விந்துபூரி யென்பவன் முதலான, தரணிபர்
அடங்க-அரசர்களெல்லோரும், சகுனியுடன் - சகுனியுடனே, ஏகி-சென்று, வரு
கந்தவாகன் மதலையை-எதிர்த்து வருகிற வாயுகுமாரனான வீமனை, மகபதி மகன்
மகனொடு இங்கு உறாதபடி - இந்திரகுமாரனான அருச்சுனனது புத்திரனாகிய
அபிமனுடன் இவ்விடத்துச் சேராதபடி, எதிர்வளைமின் -எதிரில்
வளைத்துக்கொள்ளுங்கள்: (அங்ஙனம்வளைய), விகனன்உம் - விகர்ணனும்,
மடங்கல்போலும் இளைஞர்உம்-சிங்கம்போன்ற, (மற்றைத்) தம்பிமார் பலரும்,
விருதர்பலர்உம்-(மற்றும்) அரசர்கள் அநேகரும், துரோணன் மதலைஉம்-
அசுவத்தாமாவும்இகல் மலையில்-(அபிமனுடன்) போர்செய்தால், இந்த
நாழிகையில் - இவ்வொருநாழிகைப்பொழுதிலே, இவர் இருவரைஉம் - (வீமன்
அபிமன் என்னும்) இவர்இரண்டுபேரையும், வென்று கோறல் - சயித்தலும்
கொல்லுதலும், எளிது -எளியதாம்; (எ - று.) அரோ ஈற்றசை; தேற்றமுமாம்;
'இடைச் சொற்கள்இடத்துக்கேற்றபடி பல பொருள்தர உரியன',

     விந்து, பூரி என இரண்டுபேராக எடுத்தால், பூரி என்பது-பூரிசிரவா என்னும்
அரசனைக் குறிக்கும்; இங்ஙனம் ஒருபெயரின் ஒரு பகுதி அப்பெயர்முழுவதையும்
உணர்த்துதலை வடநூலார் 'நாமைகதேஸே நாமக்ரஹணம்'  என்பர், பூரிஸ்ரவஸ்
என்பவன், அதிரதத்தலைவரில் ஒருவன்; பூரி எனவும் ஓர் அரசன் உண்டு.
மகபதிமகன் மகன் - இந்திரனது பேரன்.  தரணிபர் அடங்க எதிர் வளைமின் -
இடவழுவமைதி.                                                  (178)

41.-துரியோதனன்மொழி கேட்டவீரர். இருவரோடும் பொரமுடுகுதல்.

எணவுயர்புயங்ககேதுவுரைசெயவினைவிடைகொண்டுவீரரனைவரு
முனைடடவணிந்துகாலமுகிலெனமுரசினமுழங்கவோடியெதிரெதிர்