கனலெனவெகுண்டுசேனைபலபலகசரததுரங்கராசியுடன்வர வனிலகுலமைந்தனானபதியொடுமபிமனொடும்வந்துபோரின் முடுகவே. |
(இ-ள்.) என - என்று, உயர் புயங்க கேது - உயர்ந்த பாம்புக்கொடியையுடைய துரியோதனன், உரை செய - கட்டளைகூற, வீரர் அனைவர்உம் - போர்வீர ரெல்லோரும், இவனை விடை கொண்டு - இத்துரியோதனனிடம் அனுமதிபெற்று, காலம் முகில் என - கார்காலத்து மேகம்போல, முரசுஇனம் முழங்க - வாத்திய வகைகள் ஆரவாரிக்க, ஓடி- விரைந்துசென்று, முனைபட அணிந்து- போர்களத்திலே பொருந்த ஒழுங்குபட நின்று, கனல் என வெகுண்டு - அக்கினிபோலக் கோபாவேசங்கொண்டு, சேனை பல பல- மிகப்பலவாகிய சேனைகள், கச ரத துரங்க ராசியுடன் வர-யானை தேர் குதிரைகளின் கூட்டத்துடனே வர, அனில குலம் மைந்தன் ஆன பதியொடும்உம் - வாயுவின் சிறந்த புத்திரனும் (வீரர்க்குத்) தலைவனுமான வீமனுடனும், அபிமனொடுஉம் - அபிமந்யுவுடனும், எதிர் எதிர் வந்து - எதிரிலே எதிரிலே வந்து,போரில்முடுக- யுத்தத்தில் நெருங்க,-(எ - று.)-'வாயுமதலை வாளி உதையினன்' எனஅடுத்த கவியோடு குளகமாய் முடியும். உயர்தல் - சிறத்தலும், மேலிருத்தலும். காலமுகில்-யுகாந்த காலத்து மேகமுமாம்; காளமேக மென்றலுமாம், முரசு-இங்கே, வாத்தியப்பொது. 'குலமைந்தன்'என்றதில், குலம் என்பது-சிறப்பு பொருளது. (179) 42.- இதுவும், மேற்கவியும்-தன்னுடன் எதிர்த்தாரை வீமன் அழித்தல் கூறும். விழிமலர்சிவந்துகோலமதிநுதல்வெயர்வரவிரண்டுதோளுமுறை முறை, யழகுறவிளங்கமூர னிலவெழவணிமகர குண்டலாதிவெயிலெழ, முழவினொடுசிங்கநாதமெழவெழமுடுகியெதிர்சென்று மோதி யவரவ, ரெழில்வடிவ மெங்கும் வாளியுதையின னிரதமிசை நின்ற வாயுமதலையே. |
(இ-ள்.) இரதம்மிசை நின்ற வாயு மதலை-தேரின்மேல்நின்ற வீமன்,-விழி மலர் சிவந்து-தாமரைமலர்போலுங் கண்கள் (கோபத்தாற்) செந்நிறம் பெற்று, கோலம் மதி நுதல் - அழகிய சந்திரன் போன்ற நெற்றியில், வெயர் வர-(கோபாவேசத்தால்) வேர்வை யுண்டாகவும், இரண்டு தோளும்-, முறைமுறை-மாறிமாறி(ப்புடைபருத்து) (பூரித்து), அழகு உற விளங்க - அழகுமிக விளங்கவும், மூரல் - புன்சிரிப்பின், நிலவுஎழ - வெள்ளொளி வீசவும் அணி மகர குண்டல(ம்)ஆதி-அழகிய மகரகுண்டலம்முதலிய ஆபரணங்களின், வெயில் -சூரியகாந்திபோன்ற சிவந்த ஒளி, எழ-வெளித்தோன்றவும், முழுவினொடு-வாத்தியகோஷத்துடனே, சிங்க நாதம் - சிங்ககர்ச்சனை போன்ற (தன்) கனைப்பொலியும், எழ எழ- மிகுதியாகத் தோன்றவும்,முடுகி எதிர் சென்று-வேகமாக எதிரிற் போய், மோதி-தாக்கி, அவர் அவர் எழில்வடிவம் எங்கும்உம்-அந்தந்தப் பகைவீரரது அழகிய உடம்பு முழுவதிலும், வாளிஉதையினன்-அம்புகளைச் செலுத்தினான்; (எ - று.) |