இங்கே, 'மதி’ என்றது. அஷ்டமீ திதியிலுள்ள பாதிச்சந்திரனை; அதுவே நெற்றிக்குவடிவத்திலும் ஒளியிலும் உவமையாம். பி - ம்: நிலவுடன். (180) 43. | மணிமுடிசிரங்களோடுதறிபடவலயமொடணிந்ததோள்க டறிபட, வணிகழலொடுந்துதாள்கடறிபடவயிலொடுகரங்களான தறிபட, நணியவிரதங்கள் சாயவிவுளிக ணடுவறவளைந்த சாபமுதலிய, துணிபடவழிந்துமீளநடவினர்துவசபுயகன்பதாதிநிருபரே. |
(இ-ள்.) (வீமனம்புகளால்), சிரங்கள் - தலைகள், மணி முடியோடு- இரத்தினகிரீடத்தோடு, தறிபட - துணிபடவும், அணிந்த தோள்கள்-அழகிய புயங்கள்,வலயமொடு-வளைகளுடனே, தறிபட- துணிபடவும், உந்து தாள்கள்- உயர்ந்தகால்கள், அணி கழலொடு - அழகிய வீரக்கழலுடனே, தறிபட - துணிபடவும்,கரங்கள் ஆன- கைகளானவை, அயிலொடு-(ஏந்திய) வேலுடனே, தறிபட-துணிபடவும், நணிய - அருகில் வந்த, இரதங்கள்-தேர்கள், சாய-அழியவும், இவுளிகள்-குதிரைகள், நடுஅற - (உடம்பின்) நடுவிலே அறுபடவும், வளைந்த சாபம் முதலிய-வளைந்த வில் முதலிய ஆயுதங்கள், துணிபட-துண்டுபடவும், அழிந்து-, துவசபுயகன் பதாதி நிருபர் - கொடியிற் பாம்பையுடைய துரியோதனனுடையசேனையரசர், மீள நடவினர் - பிற்படச் சென்றார்கள்;(எ - று.) உந்து தாள் - (அவரவரைச்) செலுத்துங்கால் எனினுமாம். ஆன, முதலிய- பெயர்கள், கரங்களான என்பதில், 'ஆன' என்பது- முதல்வேற்றுமைச் சொல்லுருபு. பதாதி-இங்கே, சேனைப்பொது. 44.- தன்னுடன் எதிர்த்தாரை அபிமன் அழித்தல். விசயன்மகனுந் தன்மீதுவரும்வரும் விருதருடலங்கள் யாவு நிரைநிரை, தசைகுருதி யென்பு மூளையிவை யிவைதரணிமிசைசிந்தி வேறுபடவிழ, வசையவிரதங்கடாவிவளைதருமணிசிலையுமம்புமாகி முனைமுனை, திசைதொறுநடந்து சீறரவியெதிர்திமிர படலங்களான வடையவே. |
(இ-ள்.) விசயன் மகன்உம் - அபிமந்யுவும்,-தன்மீது வரும் வரும்-தன்மேல் மிகுதியாக வருகிற, விருதர்-வீரர்களது, உடலங்கள் யாஉம்-உடம்புகளெல்லாம், நிரைநிரை-வரிசை வரிசையாய், தசை குருதி என்பு மூளை இவை இவை தரணிமிசை சிந்தி-சதை இரத்தம் எலும்பு மூளை என்னும் இவற்றையெல்லாம் தரையிற் சொரிந்து, வேறு பட-(உயிர்) வேறாகி நீங்க, விழ-இறந்துகீழ் விழும்படி, அசைய இரதம் கடாவி- அசைந்துசெல்லும்படி தேரைச்செலுத்தி,-வளைதரும் அணி சிலைஉம் அம்புஉம் ஆகி - வளைந்த அழகிய வில்லும் அம்பும் (கைகளில்) உடையனாய்,-முனைமுனை திசைதொறுஉம் நடந்து - போர்க்களத்தில் (அவரவர்) எதிர்க்கிற இடந்தோறும் சென்று, சீற-கோபித்துப் போர்செய்ய,-அடைய (அவ்வெதிரிகள்கூட்டம்) எல்லாம், ரவி எதிர் திமிர(ம்) படலங்கள் ஆன-சூரியன்முன் இருட்கூட்டம்போல ஆயின; (எ- று.) மாற்றர்கூட்டங்கள் இருந்துவிடமுந் தெரியாதபடி மிகவிரைவில் மிகஎளிதில் அழிந்தன என்க. எழுவகைத்தாதுக்களுள் இங் |