பக்கம் எண் :

12பாரதம்துரோண பருவம்

சல்யம - அம்புமுனை. இவன், மத்திரதேசத்து அரசன்; பாண்டு மகாராசனது
இரண்டாம் மனைவியாகிய மாத்திரிக்கு உடன் பிறந்தவனாதலால், நகுலசகதேவர்க்கு
மாமனாவன். எய்பவனது பராக்கிரமத்தை அம்பின்மே லேற்றி, 'வீரசாயகம்' என்றது.
வாயுஸு தன், சல்யன், வீரஸாயகம்- வடசொற்கள். சொல்லிய - (சிறந்தவனென்று)
சொல்லப்பட்ட எனினுமாம்.

     தருமபுத்திரன் துரியோதனனை யெதிர்த்துத் தாக்கி நாகபாசத்தாற்கட்டிவைக்க,
துரோணன் வந்து கருடாஸ்திரத்தால் அந்நாகபாசத்தை விடுவித்துத் துரியோதனனை
மீட்டுக்கொண்டு சென்றதாகப் பெருந்தேவனார் கூறியுள்ளார்.              (13)

14.- சல்லியனைக் குறுக்கிட்டு நகுலன் எதிர்த்தல்.

தம்முனோடுடன்றுவந்தசல்லியகுமாரன்றன்னை
எம்முடனெதிர்ப்பைாயகிலிமைப்பொழுதிகல்செய்கென்னா
வெம்முனைகடந்தபொற்றேர்வெஞ்சிலைநகுலன்றோன்றி
அம்முனைகவந்தமாடவவனெடும்போர்செய்தானே.

     (இ -ள்.) தம் முனோடு - தனது தமையனான வீமனுடன், உடன்று வந்த -
எதிர்த்துவந்த, சல்லிய(ன்)  குமாரன்தன்னை - சல்லியனாகிய ஆண்மகனை
(நோக்கி), 'எம்முடன் எதிர்ப்பை ஆகில்-எம்மோடு எதிர்க்கவல்லையானால், இமை
பொழுது இகல் செய்க - ஒரு மாத்திரைப்பொழுது போர்செய்வாக,' என்னா- என்ற
சொல்லிக்கொண்டு,- வெம் முனை கடந்த - கொடிய (பல) போரை வென்ற, பொன்
தேர் - அழகிய தேரையும், வெம்சிலை - கொடிய வில்லையுமுடைய, நகுலன்-,
தோன்றி - எதிர்ப்பட்டு, அ முனை கவந்தம் ஆட - அப்போர்க்களத்தில்
தலையற்றஉடற்குறைகள் கூத்தாடும்படி, அவனொடுஉம் போர் செய்தான் -
அச்சல்லியனோடும் போரைச்செய்தான்; ( எ-று.)

     சல்லியன் வீமனை யெதிர்க்கச் செல்லுகையில், நகுலன் வீரவாதங்
கூறிக்கொண்டு இடையில் வந்து அவனையெதிர்த்துப் பொருதன னென்பதாம்.
தம்பியாகிய என்னை வென்றபின்பன்றோ தமையனான வீமனை நீ எதிர்க்கத்
தகுதியுடையாய் என்றுகருதி வந்ததுதோன்ற, 'தம்முனோடுடன்று வந்த சல்லியனை'
என்றார். சல்லியகுமாரன் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பி - ம் :
அவனுடனடுபோர்செய்தான்.                                       (14)

15.- நகுலனுக்குச் சல்லியன் புறந்தந்துபோதல்.

மோகரித்தொன்றிரண்டுமூன்றுநாலைந்தம்பேவிப்
பாகனைச்சிலையைப்பொற்றேர்ப்பதாகையைப்பரியைவீழ்த்தி
ஆகமுற்றுருவவெய்தானருச்சுனனிளவன்மாறாப்
போகமத்திரத்தார்கோவும்புறந்தந்துபோகலுற்றான்.

     (இ -ள்.) அருச்சுனன் இளவல் - அருச்சுனது தம்பியான நகுலன்,- மோகரித்து
- வீராவேசங் கொண்டு, ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி - ஒன்று
இரண்டு மூன்று நான்கு ஐந்து அம்புகளைத் (தனித்தனி) தொடுத்து, (அவற்றால்
முறையே),