பக்கம் எண் :

120பாரதம்துரோண பருவம்

குக் கூறப்படாத தோல், மச்சை, சுவேதநீர் என்பன 'இவையிவை' என்பதனாற் 
குறிக்கப்பட்டன.  ஆன-முற்று; உவமவுருபு.                       (182)

45.-இருவரெதிரிலும் தன்படைபின்னிட, கண்ட துரியேதனன் சினந்து
சைந்தவனிடம் சொல்லலுறுதல்.

இருவரெதிரும்பொறாமன்முடுகியவிருபடையுநொந்துமீளவவ
                                       னிபன்,
வெருவொடுதளர்ந்துபோனநிருபரைமிகவசைமொழிந்து
                               போதநகைசெய்து,
கருகிமுகநெஞ்சுகோபவனல்கொடுகதுவிநயனங்கள்சேயநிறமுற,
வருகுவருசிந்துராசதிலகனொடபரி மிதமின்சொலாகவுரை
                                      செய்தான்.

     (இ-ள்.)  முடுகிய - வேகமாக எதிர்த்துச்சென்ற, இருபடை உம்-தன்
சேனையின் பகுப்பு இரண்டும், இருவர் எதிர்உம்-(வீமன் அபிமன் என்னும்)
இரண்டுபேரின் எதிரிலும், பொறாமல்-(அவரவரம்பின் கொடுமையைப்)
பொறுக்கமாட்டாமல், நொந்து - வருந்தி, மீள-பின்னிட,-(அதுகண்டு). அவனிபன் -
துரியோதனராசன்,-வெருவொடு தளர்ந்து போன நிருபரை-அச்சத்தோடு சோர்ந்து
ஓடிய அரசர்களை, மிக வசை மொழிந்து-மிகவும் நிந்தையாகப் பேசி, போத நகை
செய்து -மிகவும் (இகழ்ச்சியாகச்) சிரித்து,-நெஞ்சு கோபம் அனல்கொடு கதுவி-மனம்
கோபாக்கினியாற் பற்றப்பட்டு, முகம் கருகி-(அதனால்) முகங் கறுத்து, நயனங்கள்
சேய நிறம் உற-கண்கள் சிவந்தநிற மடைய,-அருகு வரு சிந்துராசதிலகனொடு-(தன்)
பக்கத்தில் வருகிற சிந்துதேசத்து அரசனும்  திலகம் போலச் சிறந்தவனுமான
சயத்திரதனுடன், இன் சொல் ஆக- இனிய உபசாரமொழியாக, அபரிமிதம்-
அளவில்லாத பல வார்த்தைகளை, உரைசெய்தான் - சொல்லினான்; (எ - று.)-
துரியோதனன் இன்சொலாக வுரைசெய்ததை மேல் மூன்று கவிகளிற் காண்க.

     நயனம், ஸிந்துராஜதிலகன், அபரிமிதம் - வடசொற்கள், சேய-
குறிப்புப்பெயரெச்சம். பி-ம்: உரைசெய்தே.                            (183)

46.-மூன்றுகவிகள்-சைத்தவனைநோக்கித் துரியோதனன்புகழ்ந்து
அபிமனை உயிர்கவர்வதற்குச் செய்யவேண்டுவது இன்னதெனத்
தெரிவித்தலைக் கூறும்.

மறனுடையைசெம்பொன்மேருறிரிகிகர்வலியுடையைவென்றி
                                    கூருமரசிய.
லறனுடையைபஞ்சபாணனெனவடிவழகுடையை
                              நின்றசேனையரசரி.
னிறனுடையைதிங்கள்சூடிவியனதிநிறைபுனல்
                             பரந்துலாவுமவுலியர்.
திறனுடையமன்றனாறுமலரடிதெளிவொடு
                          பணிந்தஞானமுடியினை.

ஏழுகவிகள் -ஒருதொடர்.

     (இ - ள்.) '(நீ), மறன் உடையை - பராக்கிரமமுடையாய்; செம்பொன் மேரு
கிரி நிகர் - சிவந்த பொன்மயமான மகாமேரு மலையையொத்த, வலிஉடையை-
வலிமையை உடையாய்: வென்றி கூரும்-வெற்றி மிக்க, அரசு இயல்
அரசாட்சியையும், அறன் - தருமத்தையும், உடைய-;பஞ்சபாணன் என - ஐந்து
அம்புகளையுடைய மன்மதன்போல, வடிவு அழகு உடையை -உடம்பின்