பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்121

அழகையுடையாய்; நின்ற சேனை அரசரில்-(இங்கு) நின்ற சேனையிலுள்ள
அரசர்களுள், நிறன் உடையை--மேன்மையையுடையாய்: திங்கள் சூடி-சந்திரனைத்
தரித்து, வியன் நதி நிறை புனல் பரந்து உலாவும்-ஆகாச(கங்கா) நதியினது
நிறைந்தநீர் பரவித் தளும்பப்பெற்ற, மவுலியர் - திருமுடியையுடைய பரமசிவனது,
திறன்உடைய-மகிமையையுடைய, மன்றல் நாறும் மலர் அடி - பரிமளம் வீசுகிற
தாமரைமலர்போன்ற திருவடிகளை, ஞானம் தெளிவோடு பணிந்த-
தத்துவஞானத்துக்கு உரிய தெளிவோடு வணங்கிய, முடியினை-சிரத்தையுடையாய்;
(எ - று.)

     அரசியல்- சேனை, குடிகள் செல்வம், மந்திரி, நண்பர், அரண் என்னும்
ஆறுஇராசாங்கமுமாம். இனி, அரசியலறன்-அரசியல் ஆறில் அறநிலையறம்
அறநிலைப்பொருள், அறநிலையின்பம் என்னும் மூன்றுமாம்: மற்றவை -
மறநிலையறம், மறநிலைப்பொருள்,மறநிலையின்பம் என்பன. அவையாவன:-நான்கு
சாதியாரும் தம்தம் வருணவொழுக்கத்திற் பிறழாது நிலைபெறப் பாதுகாத்தல்-
அறநிலையறம்; நல்நெறியில் நின்று தம்தம் நிலையினால் முயற்சி  செய்து பெறும்
பொருள்-அறநிலைப்பொருள்; குலமும் ஒழுக்கமும் குணமும் பருவமும் ஒத்த
கன்னிகையை அக்கினிசாட்சியாக விவாகஞ்செய்து அவளோடு கூடிவாழ்தல் -
அறநிலையின்பம்; நிரைமீட்டுப் பகைவென்று செஞ்சோற்றுக் கடன்கழியாதாரைத்
தண்டித்துக் குறைவறச் செய்தல் - மறநிலையறம்; பகைவர் பொருளும்
திறைப்பொருளும் குற்றஞ்செய்தோரைத் தண்டித்தலால் வரும் பொருளும் சூதில்
வெல்பொருளும் - மறநிலைப்பொருள்; ஏறு தழுவியும், வில்லில்தொடுத்த
அம்பினாற்குறியெய்தும், பொருள்கொடுத்தும், வலிந்தும் மகளிரைக்கொண்டு
மணஞ்செய்தல் -மறநிலையின்பம். திருவடிக்குத் திறன்-தன்னைச்சரண
மடைந்தார்க்கு வேண்டியவேண்டியாங்கு எய்துவிக்கும் வல்லமை. தெளிவு -
ஐயந்திரி பில்லாமை.                                         (184)

47.வயவிசயனின்றதேர்கடவிவரும்வலவன்மருகன்றனோடு
                                 வரைபுரை,
புயமுடையதண்டவீமனுறிலிருபொருநரையுமின்று
                             பூசல்பொரவரி,
தயலிவரகன்றுபோகிலமர்பொரவறவுமெளிதுண்டு
                              பாயநுதலெரி,
நயனனருள் கொன்றை மாலைதனை யிவர்நடுவிடி.
                       லிரண்டுபாலுமகல்வரே.

     (இ-ள்.) 'வயம்-வெற்றியையுடைய, விசயன்-அருச்சுனன், நின்ற-பொருந்திய,
தேர் - தேரை, கடவிவரும் - செலுத்திவருகிற, வலவன் - சாரதியான
கண்ணனுக்கு,மருகன்தனொடு-மருமகனான அபிமனுடனே, வரை புரை புயம்
உடைய-மலையையொத்த தோளையுடைய, தண்டம்-கதையில்வல்ல, வீமன்-,
உறில்-கூடிவிட்டால், இரு பொருநரைஉம்-(இந்த) இரண்டு போர்வீரரையும் இன்று
பூசல்பொர அரிது - இப்பொழுது (எதிர்த்துப்) போர்செய்ய முடியாது; இவர் -
இவ்விரண்டுபேரும், அயல் -வெவ்வேறு இடத்தில், அகன்று போகில் -(தனித்தனி)
விலகிச்சென்றால், அமர் பொரஅறஉம் எளிது - (இவர்களோடு) போர்செய்ய மிகவும்
எளியதாம்; உபாயம் உண்டு - (அவ்வாறு இவர்களைக் கூடாமற் செய்