பக்கம் எண் :

130பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) (எதிர்த்துவந்த அவ்விரண்டுபேரும்), நிற்கும் நிலை நின்று - (தாம்)
நிற்றற்கு உரிய நிலையிலே நின்று, வரி விற்கள்உம் வளைத்தார் - கட்டமைந்த (தம்)
விற்களையும் வளைத்து, உற்கைகளின் - அனற்கொள்ளிகள் போல, நூறு பல பொன்
கணை - பல நூற்றுக்கணக்கான அழகிய அம்புகளை, தொடுத்தார்-; (எ - று.)

     நிலை - யுத்தத்தில வில் வளைத்து அம்பினை யெய்வார்க்கு உரிய நிலை,
உற்கை - உல்கா என்னும் வடமொழியின் திரிபு. நூறு என்பதை வினைத்
தொகையாகஎடுத்தால், அழிக்கிற எனப்பொருள்; இனி, மோனைப்
பொருத்தத்திற்காக ஊறு எனப்பதம் பிரித்தால், அச்சொல் - இடையூறு, கொலை,
தழும்பு, தீமை, பரிசம் எனப்பொருள்படும்: அவற்றைச் செய்யவல்ல என்க.   (207)

70.வருகணைவிலக்கியெதிர், பொருகணைகளாலே
யொருவனொரிமைப்பொழுதி, லிருவரையும்வென்றான்.

     (இ-ள்.) ஒருவன் - தனியனான அபிமன், எதிர் பொரு கணைகளால் -
(தான்)எதிரில் எய்கிற அம்புகளால், வரு கணை விலக்கி -  (தன்மேல்) வருகிற
(துரோணஅசுவத்தாமரது) அம்புகளைத் தடுத்து, ஓர் இமை பொழுதில் - ஒரு
மாத்திரைப்பொழுதிலே, இருவரைஉம் வென்றான்-; (எ - று.)

71.- துரோண அசுவத்தாமர் புறங்கொடுத்தமை.

தேர்முகமிழந்துமிரு, கார்முகமிழந்தும்
போர்முகமிழந்துமவர், நேர்முகமிழந்தார்.

     (இ-ள்.) அவர் - அவ்விரண்டுபேரும்,- (அபிமனம்புகளால்), தேர் முகம்
இழந்துஉம்- தேராகிய இருப்பிடத்தை யிழந்தும், இரு கார்முகம் இழந்துஉம் -
இரண்டுவிற்களையும் இழந்தும், போர்முகம் இழந்துஉம்-போர் செய்யுந்தன்மையை
யிழந்தும், நேர் முகம் இழந்தார்-(அவனுக்கு) எதிர்முகமாக இருத்தலையும்
இழந்தார்கள் (புறங்காட்டிப் போயினர் என்றபடி); (எ - று.)-தேர் முகம் -
தேர்முதலியனவும், போர்முகம் - போர்க்களமுமாம்.                 (209)

72.- துன்முகன் பொருது முடிதறிதல்

துன்முகனுமன்றமரின். முன்முனமர்செய்தே
வன்மிகமறிந்ததென, நன்முடிதறிந்தான்,

     (இ-ள்.) அன்று-அப்பொழுது, துன்முகன்உம்-துர்முகனென்பவனும் அமரில்-
போர்களத்தில், முன் முன் அமர் செய்து-முந்தி முந்தி வந்து போர்செய்து,
வன்மிகம்மறிந்தது என - புற்றுச் சரிந்ததுபோல, நல்முடி தறிந்தான் -
(அபிமனம்பால் தனது)அழகிய கிரீடம் அழியப்பெற்றான்; (எ - று.)

   வன்மிகம் - வல்மீகமென்னும் வடசொல்லின் திரிபு. துர்முகன் துரியோதனன்
தம்பியாதலாலும், அவனை அபிமன் கொன்றனனென்றால் நூற்றுவரையுங்கொல்வே
னென்ற வீமன்சபதம் பொய்க்குமாதலாலும், மேல் இவனை வீமன் கொல்வதனாலும்,
'முடிதறிந்தான்' என்பதற்கு -இவ்வாறு பொருள் கொள்ளப்பட்டது. துர்