இதுமுதல் ஐந்துகவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீ ரொன்று புளிமாங்கனிச்சீரும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி நான்குகொண்ட கலிநிலைத்துறைகள். (217) 80. | வடாதுதுந்தெனாதும்பரராசர்வகுத்தநேமிக் குடாதுங்குணாதுமவற்றுட்படுகோணநான்கும் விடாதுந்துதேரின்மிசையெங்கும்விராயபோது சடாதுங்கமௌலிப்புரசூதனன்றன்னையொத்தான். |
(இ-ள்.) பர ராசர்-பகைவரான அரசர்கள், வகுத்த- அமைத்த, நேமி - சக்கரவியூகத்தில், வடாதுஉம்-வடக்குப்பக்கத்திலும், தெனாதுஉம்-தெற்குப் பக்கத்திலும்,குடாதுஉம்-மேற்குப் பக்கத்திலும், குணாதுஉம்-கிழக்குப்பக்கத்திலும், அவற்றுஉள்படு-அந்நான்கு பெருந்திசைகளின் இடையிற் பொருந்திய, கோணம் நான்கும்உம்-(தென்கிழக்கு தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு என்னும்) நான்கு மூலைத்திசைகளிலும், எங்கும்உம்-(ஆக) எல்லா விடத்திலும், விடாது உந்து தேரின்மிசை - விடாமற் செலுத்துந் தேரின்மேல் விராயபோது-(போர்க்குப்) பொருந்திய பொழுதில், (அபிமன்), சடாதுங்கம் மௌலி- (கபர்த்த மென்னுஞ்) சடையையுடைய உயர்ந்த முடியையுடைய, புரசூதனன் தன்னை-திரிபுர மெரித்தபரமசிவனை, ஒத்தான்-; (எ - று.) அளவிறந்த பகைவர்கூட்டத்தின்மத்தியில் அஞ்சாது வீரத்தோடுநின்று தானொருவனே தொழில்செய்தற்குப் பரமசிவன் உவமம். பரராஜர், கோணம், ஜடாதுங்கமௌலி, புரஸூதநன்-வட சொற்கள், வடாது-வடக்கிலுள்ளது; இது- மரூஉமொழி-மற்றை மூன்றையும் அங்ஙனமே காண்க. விராய- விராவு என்னும் பகுதி,ஈறுதொக்கது. (218) 81,-அபிமன் வென்றமைக்கு நாணித் துரியோதனன் அவன்மீது பல்லாயிரவர்சூழத் தன்மகனைச் செலுத்துதல். வின்மைந்துகொண்டுதகுவோர்தமைவென்றவீர னன்மைந்தனுக்குமுதுகிட்டானரென்றுநாணி மன்மைந்தரெண்ணில்பதினாயிரர்வந்துசூழத் தன்மைந்தனையுமுடனேவினன்சர்ப்பகேது. |
(இ-ள்.) 'வில் மைந்துகொண்டு - வில்லின் வலிமையால், தகுவோர்தமை வென்ற-(நிவாதகவசர் காலகேயர் என்னும்) அசுரர்களைச் சயித்த, வீரன்- பராக்கிரமசாலியானஅருச்சுனனுடைய, நல் மைந்தனுக்கு-சிறந்த புத்திரனான அபிமனுக்கு, முதுகுஇட்டனர்- (தன்சேனையார்) புறங்கொடுத்தார்கள்,' என்று- என்றகாரணத்தால், நாணிவெட்கப்பட்டு,-சர்ப்ப கேது-பாம்புக்கொடியனான துரியோதனன்,-எண்ணில்பதினாயிரர் மன்மைந்தர் வந்து சூழ- அளவிறந்த பதினாயிரக்கணக்கானஇராசகுமாரர்கள் சுற்றிலும் வர, தன் மைந்தனைஉம்- தன்மகனான இலக்கணனையும்,உடன் ஏவினன்-விரைவில் எதிர்செலுத்தினான்; (எ-று.)-தகுவர். (219) |