பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்137

றும் முத்துப்போன்ற நீர்த்துளி சிந்துகிறகண்கள் என ஒருபொருள் தொனிக்கும்.
கரும்புவில்லை 'வளையமுத்துதிர்விழியுடை வரிசிலை' என்றும், அபிமனை 'மதனன்
மைத்துனன்' என்றும் சுற்றுவழியாற் சொன்னது- 'பர்யாயோக்தம்'  என்னும்
அலங்காரம்: தமிழில், பிறிதினவிற்சியணியெனப்படும்; கருதிய பொருளை
அதற்குரியவிதத்தாற் கூறாது மற்றொருவிதத்தாற் கூறுவது அது.

     "மங்குலு மிளையு மாலு மம்புதமும், விண்டுவு மென்றிவை மேகப் பெயரே"
என்ற பிங்கலந்தையால், இளையென்பது மேகமாதல் அறிக. இனி, 'இளையொன்'
என்பதற்கு-சுற்றுவேலியை அழித்தல்போல் எனினுமாம்; "இளைபுய லிளமை வேலி
தலைக்காவ லிவை நாற்பேரே" என்ற நிகண்டினால், இதன் பலபொருள்களும்
விளங்கும். இங்கே, மேகம்-அம்பு மழைபொழிதற்கு உவமை. இளையவித்தகன் -
வித்தகவிளையவனெனன மொழி மாறுக; இது - லக்ஷண குமார னென்பதற்கு ஒரு
பரியாயப் பெயராக நின்றது. பி -ம்: உடையவே.                      (223)

86.ரகுகுலத்தவனிளவலுநிசிசரரிறையளித்தருளிளவலுமிரு
                                     வரு
நிகரெனத்துணைவிழிகடைநிமிர்தரநெறிகடைப்புருவமு
                                 மிகமுரிதர,
முகிலிடித்தெனவெழுகடல்களுமிகமொகுமொகுத்தெனவனி
                               லமுமனலமு,
முகமுடித்தெனமுறைமுறைபலபலவுரையெடுத்தன
                      ரொருவரொடொருவரே.

     (இ-ள்.) ரகு குலத்தவன்-ரகுவென்னும் அரசனது வமிசத்திலவதரித்த
இராமபிரானுக்கு, இளவல்உம்-தம்பியான இலக்குமணனும், நிசிசரர் இறை-
இராக்கதர்க்கு அரசனான இராவணன், அளித்து அருள் - பெற்று அன்போடு
வளர்த்த, இளவல்உம்-இளங்குமரனான இந்திரசித்தும், நிகர் - (தமக்கு) ஓப்பு,
என-என்று (கண்டவர்) சொல்லுபடி, இருவர்உம்-(அபிமன் இலக்கணன்
என்னும்)இரண்டுபேரும், துணை விழி-(தம்தம்) கண்களிரண்டும், கடை நிமிர்தர-
(கோபத்தால்) நுனி விழிக்கவும், புருவம்உம்-புருவங்களும், நெறி கடை-நெறித்த
நுனியையுடையனவாய், மிக முரிதர- மிகவும் முரிபடவும் முகில் இடித்து என-
மேகங்கள் இடித்தாற் போலவும், எழு கடல்கள்உம் மிக மொகுமொகுத்து என-ஏழு
கடல்களும் மிகவும் ஒலித்தாற் போலவும், அனிலம்உம் அனலம்உம் உகம் முடித்து
என- காற்றும் நெருப்பும் உகாந்தகாலத்தில் (உலகத்தை) முடிக்க எழுந்தாற்போலவும்,
ஒருவரொடு ஒருவர்-ஒருத்தரோடு ஒருத்தர், முறைமுறை-மாறிமாறி, பலபல உரை
எடுத்தனர் - அநேகம் வீரவாதங்களைக் கூறத்தொடங்கினார்கள்; (எ-று.)-
அவற்றைமேல் இரண்டு கவிகளிற் காண்க. பி - ம்: அனிலமுமனிலமும்.

     சூரியகுலத்தில் ரகுவென்பவன் திக்குவிசயஞ்செய்து பிரசித்தி பெற்ற
ஓரரசனானதலால், அவன்மரபிற் பிறந்த ஸ்ரீராமனை 'ரகுகுலத்தவன்' என்றார்;
'ராகவன்என்ற ஒரு திருநாமமுங் காண்க. மேல், கொல்பவனான சிறந்த
அபிமனுக்குஇலக்குமணனும், கொல்லப்படுபவனான கொடிய இலக்கணனுக்கு
இந்திரசித்தும்உவமையெனக் காண்க: இதில், அயோக்கியனான இராவணன்
துரியோதனனுக்கு