பக்கம் எண் :

14பாரதம்துரோண பருவம்

17.- துருபதனும் பகதத்தனும் வேழப்போர் புரிதல்.

துருபதயாகசேனநிருபனுந்தும்பைசூடி
வரபகதத்தஎனன்னுமடங்கலேறனையகோவும்
ஒருபகன்முழுதுந்தங்களூக்கமுமுரனுந்தேசும்
பொருபடைவலியுங்காட்டிப்போதகப்பூசல்செய்தார்.

     (இ-ள்.) துருபத யாகசேன நிருபன்உம் - துருபதனென்றும் யாகசேனனென்றும்
பெயருள்ள (பாஞ்சாலதேசத்து) அரசனும், தும்பை சூடிவரு - தும்பைப்பூமாலையைத்
தரித்தவருகிற, பகதத்தன் என்னும்- பகதத்தனென்கிற, மடங்கல் ஏறு அனைய
கோஉம் - சிறந்த ஆண் சிங்கத்தை யொத்த அரசனும் ( இவ்விருவரும்), ஒரு பகல்
முழுதுஉம் - அவ்வொருநாளைப் பகற்பொழுது முழுவதிலும், தங்கள் -
தங்களுடைய, ஊக்கம்உம்- (போரில்) உற்சாகத்தையும், உரன்உம்- (தேக)
வலிமையையும், தேசுஉம் - பராக்கிரமத்தையும், பொரு படை வலிஉம்-
போர்செய்கிற ஆயுதங்களின் பலத்தையும், காட்டி-(பலரும் அறிய) வெளியிட்டு,
போதகம் பூசல் செய்தார் - யானைப்போரைச் செய்தார்கள் ; (எ -று.)

     துருபதயாகசேனநிருபன் - திரௌபதியின் தந்தை. தும்பை யென்னுஞ்
செடியின் பெயர், அதன் பூவினாலாகிய மாலைக்கு இரு மடியாகுபெயர். இப்பூமாலை,
போர்செய்வார்க்கு உரியது. பகதத்தன்-(பிராக்ஜ்யோதிஷபுரத்து அரசனும்
வராகமூர்த்திக்குப் பூமி தேவியினிடம் பிறந்தவனும் கண்ணனாற்
கொல்லப்பட்டவனுமாகிய) நரகாசுரனது மகன். மடங்கல்-(பிடரிமயிர்) மடங்குதலுடைய
தென ஆண்சிங்கத்துக்குக் காரணக்குறி. மடங்கலென்றதே ஆண்சிங்கத்தைக்
குறித்தலால், 'ஏறு’என்றது- சிறப்பை உணர்த்தும். உரன்- அறிவுமாம். தேசு-
தேஜஸ்.போதகப் பூசல்-யானைமேலிருந்து யானைச் சேனைகளொடு பொருந்திப்
போர்செய்தல். போதகம் - பத்துவருஷத்து யானைக்குட்டி; இங்கே
யானைமென்னுமாத்திரமாய் நின்றது. 'உரனும்' என்றவிடத்து 'முரணும்' என்றும்
பாடம்.                                                        (17)

18.-சிகண்டியின் வீரம்.

துன்றுவெங் கழற்காற் சோம தத்தனுஞ் சூழ்ந்து நின்ற
வன்றிறல் வேந்தர் தாமும் வாளமர் புறந்தந் தோட
அன்றுவீ டுமனை வென்ற வாண்டகை சிகண்டி யென்பான்
இன்றுபோர் செய்த வீர மெம்மனோர்க் கியம்ப லாமோ.

     (இ-ள்.) துன்று- நெருங்கிய, வெம் - பயங்கரமான, கழல்- வீரக்கழலையணிந்த,
கால்- காலையுடைய, சோமதத்தனும்-, சூழ்ந்து நின்ற-(அவனுக்கு உதவியாய்ச்)
சுற்றிலும் நின்ற, வல் திறல் வேந்தர்தாம்உம் - கொடிய வலிமையுடைய அரசர்களும்,
வாள் அமர்- வாளினாற்செய்யும்போரில், புறம் தந்து ஒட- முதுகுகாட்டியோடும் படி,
அன்று வீடுமனை வென்ற ஆண் தகை சிகண்டி என்பான் - அந்நாளில் [முந்தின
பத்தாம்போர்நாளில்] பீஷ்மனைச் சயித்த ஆண்மைக்குணடுடையவனான சிகண்டி
யென்பவன், இன்று - இந்