பக்கம் எண் :

142பாரதம்துரோண பருவம்

குனித்தவின்னிமிராவண்ணங்கொடுஞ்சமர்க்கொன்றிலேமே
லினித்தனுவென்றுபோரிலெடுக்கிலேமிறைவவென்றார்.

     (இ-ள்.) (அதுகேட்டு, அரசர் எல்லாம்-, தனி தனி-, தாள் இணைபணிந்து-
(துரியோதனனது) உபயபாதத்தை வணங்கி, போற்றி - துதித்து, 'இறைவ-அரசனே!
பனித்து உயிர் பொன்றி வீழ-(உடம்பு) நடுக்கமுற்று உயிரொழிந்து கீழ்விழும்படி,
பார்த்தன் மா மகனை-அருச்சுனனுக்குச் சிறந்த புத்திரனான அபிமனை, இன்னே-
இப்பொழுதே, குறித்த வில் நிமிரா வண்ணம்-வளைத்தவில் வளைவு மாறாமல்,
கொடுசமர்-கொடிய போரில், கொன்றிலேம் ஏல் -(நாங்கள்) கொன்றிடோமாயின்,
இனி-பின்பு, தனு என்று போரில் எடுக்கிலேம்-வில் என்று யுத்தத்தில்
ஏந்துவோமல்லோம்,'என்றார் - என்று சபதங் கூறினார்கள்: (எ - று.) (231)

94.- இரண்டுகவிகள் - அசுவத்தாமன் துரோணன்  முதலியோர்பலர்  
திரண்டுவளைந்து, அபிமன்மீது கோடிக்கணக்காக அம்புபொழிதலைக்கூறும்.

குன்றவில்லவனையொக்குங்குமரனும் பகைகளாறும்
வென்றவின்முனியுமற்றும்வேந்தராயருகுதொக்கு
நின்றவில்விருதர்யாருநிருபன்மாமதலையாவி
பொன்றவில்வளைத்தோன்றன்னைப்புலிவளைந்தென்னச்சூழ்ந்தார்

     (இ-ள்.) குன்றம் வில்லவனை ஓக்கும் - மேருமலையை வில்லாகக்கொண்ட
சிவபிரானைப் போன்ற, குமரன்உம் - துரோணபுத்திரனான அகவத்தாமனும்,
பகைகள் ஆறுஉம் வென்ற-உட்பகையாகிய ஆறு குற்றங்களையும் சயித்த,
வில்முனிஉம்-வில்லில்வல்ல துரோணாசாரியனும், மற்றும்-, வேந்தர் ஆய்-
அரசர்களாய், அருகுதொக்கு நின்ற-பக்கத்திற் கூடி நின்ற, வில் விருதர் யார்உம்-வில்
வீர ரெல்லோரும், நிருபன் மா மதலை ஆவி பொன்ற வில் வளைத்தோன்தன்னை-
துரியோதனராசனது சிறந்த குமாரனான இலக்கணனது உயிர் ஒழியும்படி வில்லை
வளைத்துப் பொருத அபிமனை, புலி வளைந்து என்ன சூழ்ந்தார் - புலிகள்
சூழ்ந்துகொண்டாற் போலச் சூழ்ந்து கொண்டார்கள்; (எ - று.)

     பகைகள் ஆறு-காமம், கோபம், லோபம், மோகம,் மதம், மாற்சரியம் என்பன;
வடநூலார் 'அரிஷட்வர்க்கம்' என்பர். இவற்றை வெல்லுதல் - இவை தன்னிடம்
உண்டாகாதபடி விலக்குதல். புலி வளைந்தென்ன-புலியைச் சூழ்ந்தாற்போல எனினும்
அமையும்.                                                     (232)

95.போரொருமுகத்தாலன்றிப்பொருப்பொன்றிற்புணரியேழுங்
காரொருமுகமாய்மொண்டுகணக்கறப்பொழியுமாபோற்
றேரொருவளையமாகச்சென்றுதிண்சிலைகள்கோலி
யோரொருவீரர்கோடியாசுகமுடற்றினாரே.

     (இ-ள்.) கார் - மேகங்கள், புணரிஏழ்உம்- ஏழுகடல்களின் நீரையும், மொண்டு-
முகந்து எடுத்துக்கொண்டு. பொருப்பு ஒன்றில்-ஒருமலையின்மேல், ஒரு முகம் ஆய்-
ஒரே தன்மையாய், கணக்கு அற பொழியும் ஆபோல் - அளவில்லாமல்
மழைபொழியும் விதம்