போல, போர் - அப்போரில், ஒரு முகத்தால் அன்றி -ஒரு முகமாக வல்லாமல் [பலமுகங்களாக]. தேர் ஒரு வளையம் ஆக சென்று - (அபிமனது) தேரைச் சுற்றிலும் ஒரு வளையம்போலப் போய்ச் சூழ்ந்துகொண்டு, திண் சிலைகள் கோலி- வலிய (தம்தம்) விற்களை வளைத்து, ஓர் ஒரு வீரர் - ஒவ்வொரு (பகை) வீரரும், (அபிமன்மேல்), கோடி ஆசுகம் உடற்றினார்-கோடிக்கணக்கான அம்புகளைப் பெருங்கோபத்தோடு செலுத்தினார்கள்: (எ - று.) எவ்வளவு மழை பொழிந்தாலும் அதனால் மலை கலங்காதவாறு போல, அபிமன் கலங்காநிலைமைய னென்பதை உவமையால் விளக்கினார். புணரி - (ஆறுகளோடு) புணர்வதுஎனக் காரணப்பெயர்; புணர்தல்-கலத்தல். (233) 96.- நான்குகவிகள் அபிமன்கடுமையாகப்பொரப் பலரும் ஆவிமாள, சகுனிதுச்சாதனன்முதலியோர் முதுகுகொடுத்தோடினமை கூறும். தரணிபரெய்தவெய்தசரங்களைச்சரங்களாலே முரணறவிலக்கிப்பாதமுடியளவாகவந்தக் கரணமும்புலனுமெய்யுங்கலங்கியக்கணத்தில்யாரு மரணமென்றுன்னவல்வில்வளைத்தனன்வளைவிலாதான். |
(இ-ள்.) வளைவு இலாதான்-(பகைவர்க்கு) வணங்குத லில்லாதஅபிமன், தரணிபர் எய்தஎய்த சரங்களை-அரசர்கள்(தன்மேல்) மிகுதியாக எய்த அம்புகளை, சரங்களால்ஏ-(தன்) அம்புகளாலே, முரண் அற - வலிமைகெட, விலக்கி - தடுத்து,- பாதம் முடி அளவு ஆக - கால் முதல் தலைவரையில், மெய்உம்- உடம்பும், புலன்உம்- உறுப்புக்களும், அந்தக்கரணம்உம் - மனமும், கலங்கி-, யார்உம் - எல்லாவீரரும், அ கணத்தில் -அந்தக்ஷணத்திலே, மரணம் என்று உன்ன- (தந்தமக்கு)அழிவென்று நினைக்கும்படி, வல் வில் வளைத்தனன் - வலியவில்லை வளைத்துப்பொருதான்; (எ - று.)-முரண் அற - மாறுபடுதலில்லாமல் எனினுமாம்: நேராகஎன்றபடி (234) 97.- | ஆகவந்தன்னின்முந்தமனுலகுலத்தரசன்பட்டான் கேகயன்குமரன்மாய்ந்தான்கிருபன்வில்லொடிந்துமீண்டான் மாகதத்குரிசிலோடுமகுடவர்த்தனரநேகர் நாகமுற்றனர்கள்கோடிநரபதிகுமார்வீழ்ந்தார். |
(இ-ள்.) (அப்பொழுது அபிமன் அம்புகளால்), 'ஆகவந்தன்னில்- போரிலே, முந்த-முன்னே, மனு குலத்து அரசன் மனு சக்கரவர்த்தியின் குலத்திற் பிறந்த அரசன்,பட்டான்-இறந்தான்: கேகயன் குமரன்-கேகயதேசத்தரசனுக்குக் குமாரன், மாய்ந்தான்.இறந்தான்; கிருபன் - கிருபாசரரியன், வில் ஒடிந்து-, மீண்டான்- புறங்கொடுத்துச்சென்றான்; மாகதம் குரசிலோடு - மகததேசத்து அரசனுடனே, மகுடவர்த்தனர் அநேகர்- அநேகம் மகுடவர்த்தனராசர்கள், நாகம் உற்றனர்கள்- வீரசுவர்க்க மடைந்தார்கள்; கோடி - கோடிக்கணக்கான, நரபதிகுமார் - இராசகுமாரர்கள், வீழ்ந்தார்- இறந்து விழுந்தார்கள்; (எ - று.)-பி -ம்: வீந்தார். |