பக்கம் எண் :

144பாரதம்துரோண பருவம்

     மரித்தா ரென்ற ஒரு பொருளை, பட்டான், மாய்ந்தான், நாக முற்றனர்கள்,
வீழ்ந்தார் என்ற பலசொற்களால் குறித்தது-பொருட்பின்வருநிலையணி. கிருபன்
கௌதமமுனிவனது பௌத்திரன்; சரத்துவந்தமுனிவனது குமாரன்; துரோணன்
மனைவியாகிய கிருபியினுடன் பிறந்தவன்: கௌரவ பாண்டவர்க்கு முதல்
வில்லாசிரியன். நாணற்காட்டிற் பிறந்திருந்த முனிமக்களை வேட்டைக்கு வந்த
சந்தனுமகாராசன் பார்த்துக் கிருபையினால் பரிக்கிரகித்ததனால். கிருபனென்றும்
கிருபியென்றும் பெயருண்டாயின வென விஷ்ணுபுராணத்தால் அறிக.
வைவகவதமநுகுலத்தவனான கோசலன் பெயர் பிருகத்பல னென்றும்,
கேகயன்பெயர்பிருகத்க்ஷத்ரனென்றும், மாகதன் பெயர் அசுவகேது வென்றும்
முதனூலால்தெரிகிறது.                                       (235)

98.-சிலையழிந்தவரநேகர்தேரழிந்தவரநேகர்
தலையழிந்தவரநேகர்காளழிந்தவரநேகர்
நிலையழிந்தவரநேகர்நெஞ்சழிந்தவரநேகர்
துலையழிந்தவரநேகர்தோளழிந்தவரநேகர்.

     (குறிப்புரை.)சிலை - வில். தாள் - கால். நிலை - உடம்பு;
உறுதிநிலைமையுமாம். துலை -வலிமை: இது - நிறைக்கோலின்பெயர்:
இலக்கணையால், பாரமெனப் பொருள்பட்டு வலிமையென்னுங் கருத்தில்
வந்ததுபோலும்: ஒப்பு என்றாரு முளர்.                           (236)

99.-இனைவருஞ்சகுனிமைந்தரெழுவருந்துணைவருள்ளா
ரனைவருமாவிமாளவமரழிந்தவனும்போனான்
துனைவரும்புரவித்தேர்த்துச்சாதனன்றுணைவரோடு
முனைவருமளவிற்பாலன்முனைவெரீஇமுதுகுதந்தான்.

     (இ-ள்.) இனைவு அரு - வருந்துதலில்லாத, சகுனிமைந்தர் எழுவர்உம் -
சகுனியின் குமாரர் ஏழுபேரும், துணைவர்உள்ளார் அனைவர்உம்-(அவனுக்கு)
உடன்பிறந்தவராயுள்ளவ ரெல்லோரும், ஆவி மாள - உயிரொழிய, அவன்உம்-
சகுனியும், அமர் அழிந்து போனான் - போரில் தோற்றுச் சென்றான்: துனைவரும் -
விரைந்து செல்கிற, புரவி-குதிரைகளைப்பூட்டிய, தேர்-தேரையுடைய, துச்சாதனன்-
துணைவரோடு- (தன்) தம்பிமாருடனே, முனை வரும் அளவில்-எதிரில்
வந்தமாத்திரத்தில், பாலன் முனை வெரீஇ- இளங்குமாரனான அபிமனது
போருக்குஅஞ்சி. முதுகு தந்தான்-: (எ-று.)-பி-ம:் அம்பால் முகம்வெரீஇ.  (237)

100.- துரியோதனன் சொல்லக்
கர்ணன் அபிமனுடன் பொரச் செல்லுதல
்.

காவலருடைதல்கண்டுகன்னனையரசன்பார்த்துக்
கேவலமல்லவிப்போர்கிரீடிவந்திவனைக்கூடில்
நீவலையாகிற்சென்றுநேர்மலைந்தடர்த்தியென்னக்  
கோவலன்மருகன்றன்னைக்குறுகினன்கொடையான்மிக்கோன்.

     (இ-ள்.) காவலர் - (இந்த) அரசர்கக்ளெல்லோரும், உடைதல்-