(அபிமன் முன்) அழிதலை, கண்டு-பார்த்து, அரசன்-துரியோதனன். கன்னனை பார்த்து-கர்ணனைநோக்கி, 'கிரீடி வந்து இவனை கூடில்- அருச்சுனன் வந்து இவ்வபிமனைக் கூடிவிட்டால், (பின்பு) இபோர், கேவலம் அல்ல - இந்தப் போர் (வெல்ல) எளிதன்று: (ஆதலின் விரைவிலே.) நீ வலை ஆகின் சென்று நேர் மலைந்து அடர்த்தி - நீ வல்லவனாவையானால் (எதிரிற்) சென்று போர் செய்து (இவ்வபிமனை) அழிப்பாய்,' என்ன-என்றுசொல்ல, (அப்படியே), கொடையால் மிக்கோன் - ஈகைத்தொழிலாற்சிறந்த கர்ணன், கோவலன் மருகன் தன்னை குறுகினன் - கண்ணன்மருமகனான அபிமனைச் சமீபித்தான் எ - று.) (238) 101. கர்ணனுந் தோற்றுப் போதல். மன்முரிகுவவுத்திண்டோள்வாசவன்பேரன்றன்னோடு அன்முரியிரவிமைந்தனருஞ்சமர்விளைத்தகாலைச் சென்முரிந்தென்னவேறுதேர்முரிந்தெடுத்தவாகை வின்முரிந்துள்ளந்தானுமிகமுரிந்துடைந்துமீண்டான். |
(இ-ள்.) மன் - அரசர்கள், முரி- அழிதற்குக்காரணமான, குவவுதிண் தோள்- திரட்சியையுடைய வலிய தோள்களையுடைய, வாசவன் பேரன்தன்னோடு - இந்திரனது பௌத்திரனான அபிமனுடனே, அரு சமர் விளைத்த காலை - (செய்தற்கு) அரியபோரை மிகுதியாகச்செய்தபொழுது, அல்முரி இரவி மைந்தன் - இருள் அழிந்தற்குக் காரணமான சூரியனுக்குப் புத்திரனான கர்ணன், செல்முரிந்து என்ன-மேகம் மிகச்சிதைந்தாற்போல, ஏறு தேர் முரிந்து- (அபிமனம்புகளால் தான்) ஏறியிருந்த தேர் உடைந்து, எடுத்த வாகை வில் முரிந்து-(கையிற்பிடித்த) வெற்றியைத்தருகிற வில் முரிபட்டு, உள்ளம் தான்உம் மிக முரிந்து- மனமும் மிகக்கலங்கி, உடைந்து- தோற்று, மீண்டான் - திரும்பினான் [புறங்கொடுத்தான்]: (எ-று.) மன் என்பது- அரசச்சாதியை யுணர்த்திற்று. மல் முரி எனப் பிரித்து, மற்போர்த்தொழிலிற் சிரமப்பட்ட என்றும், மற்போர்வீரரை அழிக்கவல்ல என்றும் பொருள்கொள்ளலும் அமையும். விரைந்து செல்லுதலிலும். பெரிய வடிவத்திலும், மேகத்துக்குத் தேர் உவமை. (239) 102.- கர்ணன் அபிமனை மீண்டும் எதிர்த்துத் தோற்றல். தேறினான்றேறித்துச்சாதனன்றருஞ்செம்பொற்றேரி னேறினான்மீளவில்லுமெரிகணைபலவுங்கொண்டு தூறினானபீமன்செங்கைத்தொடைகளாலெதிர்த்தலஞ்சி மாறினான்முகமுந்தேரும்வரிவில்லுமழிந்துமன்னோ. |
(இ-ள்.) (அஞ்சிப்புறங்கொடுத்த கர்ணன், பின்பு), தேறினான்- மனந்தைரியப்பட்டான்; தேறி-தைரியப்பட்டு, துச்சாதனன் தரும் செம் பொன் தேரின்- துச்சாதனன் கொடுத்த சிவந்த பொன்மயமான தேரில், ஏறினான் - ஏறிக்கொண்டு, வில்உம் எரிகணை பலஉம் கொண்டு- வில்லையும் அழிக்கிற அநேக பாணங்களையும் எடுத்துக்கொண்டு, மீள-மறுபடியும், தூறினான்- (அவ்வம்புகளைச்) |