சொரிந்து, அகிமன் செம் கை தொடைகளால் - அபிமந்யுவின் சிவந்த கையால் விடப்பட்ட பாணங்களால் முகம்உம் தேர்உம் வரிவில்உம் அழிந்து- (தன்னுடைய)முகமும் தேரும் கட்டமைந்த வில்லும் அழிபட்டு, எதிர்த்தல் அஞ்சி மாறினான் - அவனெதிரில்நிற்றற்கும் பயந்து புறங்கொடுத்தான்; (எ - று.)-மன் ஓ - ஈற்றசை. வில்லுங்கொண்டு எரிகணைபலவும் தூறினான் என்றும், தேரும் வரிவில்லும் அழிந்து முகமும் மாறினான் என்றும் மொழி மாற்றி யுரைப்பினும் அமையும். தூறுதல்-சிதறுதல். எதிர்த்தல்-பொருதலுமாம். (240) 103.- துரியோதனன் தூண்டச் சென்ற கர்ணன் தோற்று மீண்டும் அபிமனோடுபொரச் செல்லுதல். தூண்டினன்மேலாளாகித்துனைபரித்தடந்தேர்தூண்டி மீண்டனன்காலளாகிவிளிந்தனன்றெளிந்துமீளத் தாண்டினபரித்தேர்தேடிச்சாபமுந்தேடிநெஞ்சாற் பூண்டனன்பொருவான்றன்கைப்பொருகணைப்புயங்கம்போல்வான். |
(இ-ள்.) தன் கை - தனதுகையிலுள்ள, பொரு கணை-போர்ச்செய்கிற அம்பின் வடிவமான, புயங்கம்-நாகத்தை, போல் வான்-ஓப்பவனான கர்ணன், (இங்ஙனம்), தூண்டினன்-(துரியோதனனால்) தூண்டப்பட்டவனாய், மேல் ஆள் ஆகி-(தேரின்) மேல்நிற்கும் வீரனாய், துனை பரி தட தேர் தூண்டி -விரைந்து செல்லுகிற குதிரைகளைப் பூண்ட பெரிய தேரை (முன்னே) செலுத்திவந்து, (உடனே)அம்புகளால் யாவும் அழிந்து), கால் ஆள் ஆகி மீண்டனன்- (வாகனமின்றிக்)கால்களால்நடக்கும் வீரனாய்த்திரும்பி, விளிந்தனன்- தோற்றழிந்தான்; (அங்ஙன்தோற்றவன்), தெளிந்து-மனந்தைரியப்பட்டு, மீள- மறுபடி, தாண்டினபரி தேர் தேடி -தாவிச்செல்லுந்தன்மையனவான குதிரைகளைப் பூண்ட தொரு தேரைத்தேடி,(அதன்மேலேறி), சாபம்உம் தேடி-வில்லொன்றையுந் தேடியெடுத்துக்கொண்டு,பொருவான் - போர் செய்யுந்தொழிலை, நெஞ்சால் பூண்டனன் -மனத்தினால் ஏற்றுக்கொண்டான்; (எ-று.)-போர்செய்யச் சித்தனானான் என்பதாம். பி-ம்: விழுந்தனன்றெளிந்து. 'தன்கைப்பொருகணைப்புயங்கம்' என்றது. கர்ணன்கையிலுள்ள நாகாஸ்திரத்தை: அதன் வரலாறு;- காண்டவதகநகாலத்தில் அவ்வனத்தினின்று ஓடுகிற பிராணிகளை அருச்சுனன் அம்பெய்துகொன்று அத்தழலிலே விழுத்தி வருகிறபொழுது, தக்ஷகனென்னும் நாகராசனதுமனைவி தன் குழந்தையான அசுவசேநனென்னுஞ் சிறுநாகத்தைத் தன்வாய்க்குள் மறைத்து வைத்துக்கொண்டு அங்கிருந்து ஆகாயமார்க்கத்தில் எழும்ப, அதுகண்டு பார்த்தன் தன் பாணத்தால் அந்த நாககன்னியின் தலையைத் துணிக்க. உடம்பு நெருப்பிலும் தலை வெளியிலுமாக விழுந்தது; அப்பொழுது அதன் வாயிலிருந்த நாககுமரான் வால்மாத்திரம் அறுப்புண்டு பிழைத்து எழுந்து, தன் தாயைக்கொன்ற அவன்மீது கறுக்கொண்டு, அவனுக்குப் பகைவன் யாரோன்று விசாரித்து, அவனைக் கொல்லும்பொருட்டு அஸ்திரவடிவமாகக் கர்ணனை அடைந்தன னென்பதாம். |