பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்147

அந்தநாகத்தைக் கர்ணனுக்கு உவமைகூறினது, கறுவுடைமைக்கும் கொடுமைக்கும்
என்க. முன்னிரண்டடி-அநுவாதமென்னலாம்.

104.-  கர்ணனம்புகளால் அபிமன்யுவின் தேர்முதலியன அழிதல்.

விற்குனத்திரவிமைந்தன்விடும்விடுங்கணைகள்பட்டுப்
பற்குனன்மைந்தன்றிண்டேர்ப்பரிகளும்பாகும்பட்டு
முற்குனித்தெய்தவில்லுமுரிந்ததுமூரித்தேரு
நிற்குநன்னிலைமைகுன்றிநேமியுநெரிந்ததன்றே.

     (இ-ள்.) (இவ்வாறு), இரவி மைந்தன் - கர்ணன், வில் குனித்து - வில்லை
வளைத்து, விடும் விடும் - மிகுதியாகச் சொரிகிற, கணைகள் - அம்புகள், பட்டு -
தைத்ததனால், பற்குனன் மைந்தன் - அருச்சுனபுத்திரனான அபிமனது, திண் தேர்
பரிகள்உம்-வலிய தேரிற்பூட்டிய குதிரைகளும், பாகுஉம் - சாரதியும், பட்டு -
அழிய, முன் குனித்து எய்த வில்உம்- முன்னே வளைத்து அம்பெய்து
கொண்டிருந்த(அவன்கை) வில்லும், முரிந்தது - ஒடிந்தது; மூரிதேர் உம்-
வலிமையையுடையதேரும், நிற்கும் நல் நிலைமை குன்றி நிற்றற்குரிய நல்ல
உறுதிநிலைமைகுறைபட்டு,நேமிஉம் நெரிந்தது- சக்கரங்களுஞ் சிதையப்பெற்றது;
(எ - று.)-அன்று, ஏ -ஈற்றசை; அப்பொழுதே யெனினுமாம்.

     பட்டு என்பது - இரண்டிடத்திலும், பட வென்னுஞ் செயவெ னெச்சத்தின்
திரிபு: முன்னே காரணப்பொருளதும், பின்னேஉடனிகழ்ச்சிக்பொருளதும் எனக்
காண்க. அபிமன்தேர் கோங்குமரக் கொடியையுடைய தென்றும் அவன்தேர்ப்பாகன்
சுமித்திர னென்றும் வடநூலால் தெரிகிறது. தேர்நேமி நெரிந்தது - சினைப்பெயர்
முதல்வினையைக்கொண்ட வழுவமைதி.                            (242)

105.- தேரையிழந்த அபிமன் வாளேந்தித் தரையி லிழிதல்.

தன்னையத்தனயன்செய்ததாழ்வெலாந்தனயன்றன்னைப்
பின்னையத்தந்தைசெய்துபின்னிடாதசைந்துநிற்ப
முன்னையபுரவித்தேருமொத்தவெஞ்சிலையுமின்றி
மின்னையொத்திலங்கும்வாளோடவனிமேல்விரைந்துபாய்ந்தான்.

     (இ-ள்.)  தன்னை அதனயன் செய்த தாழ்வு எலாம்-(தந்தையாகிய) தன்னைப்
பிள்ளையாகிய அவ்வபிமன் (முன்னே) செய்த தோல்விகளையெல்லாம், பின்னை-
பின்பு, அ தந்தை - அந்தத்தந்தையாகிய கர்ணன், தனயன் தன்னை செய்து -
பிள்ளையாகிய அவ்வபிமனை (அடைய)ச் செய்து, பின் இடாது-(முன்போலப்)
புறங்கொடாமல், அசைந்துநிற்ப-மகிழ்ச்சிகொண்டு முன்நிற்க, (அபிமன்), முன்னைய
புரவி தேர்உம் மொய்த்த வெம் சிலைஉம் இன்றி - முன் இருந்த குதிரைபூண்ட
தேரும் வலிமையுடைய கொடிய வில்லும் இல்லாமல், மின்னை ஒத்து இலங்கும்
வாளோடு-மின்னலைப் போன்று விளங்குகிற வாளுடனே, அவனிமேல் - தரையில்,
விரைந்து பாய்ந்தான் - துரிதமாய்க் குதித்து இழிந்தான்; (எ - று.)

     தன்னை அத்தனயன் செய்த தாழ்வு - தேரையும், வில்லையும் இழத்தல்;
கீழ்101, 102,103,-ஆங் கவிகளைக் காண்க. 'தனயன்