பக்கம் எண் :

148பாரதம்துரோண பருவம்

தன்னை' என்பதை உருபுமயக்கமாகத் தனயனுக்கு என்றுங் கொள்லாம். தந்தை -
பெரிய தந்தை. தனயன்-தம்பியின் மகன். கர்ணன் அபிமன்முன்
பலமுறைபின்னிட்டதனைக் கருதி, இங்கே 'பின்னிடாது' என்றார். அசைந்து-
களிப்பினாற் கூத்தாடி யென்க. இனி, அசைந்து பின்னிடாது நிற்ப என
மொழிமாற்றினுமாம்; இவ்வுரைக்கு, அசைதல்-சோர்தல் உன்னயப்புரவித்தேரு
மொத்தஎன்ற பாடத்திற்கு, உன்னயம் - அசுவசாஸ்திரமென்பர்.       (243)

106.-  அபிமன் வாளோடு பரிசையேந்தி மண்டலம் பயிற்றுதல்.

வாளொடு பரிசை யேந்தி மண்டலம் பயிற்றி யிற்றை
நாளொடு துறக்க மெய்த நயந்தன னின்ற வீரன்
றோளொடு புரையுஞ் செம்பொன் மேருவைச் சுடரோனாகக்
கோளொடு சூழ்வ தென்னச் சுழற்றினான் குமர ரேறே.

     (இ-ள்.) இற்றை நாளொடு - இன்றைத்தினத்துடனே [இன்றைத்தினத்திலே
என்றபடி],துறக்கம் எய்த - இறந்து வீரசுவர்க்கத்தையடைய, நயந்தனன் நின்ற -
விரும்பிநின்ற,வீரன்-பராக்கிரமசாலியான, குமார் ஏறு - இராசகுமாரர்களுக்குச்
சிங்கம்போன்றவனான அபிமன்,-வாளொடு பரிசை ஏந்தி-(வலக்கையில்) வாளையும்
(இடக்கையில்) கேடகத்தையும் எடுத்துக் கொண்டு, மண்டலம் பயிற்றி -மண்டலமாகச்
சுற்றிவருதலைச் செய்து,-தோளொடு புரையும் - (தனது) தோளோடு ஒத்த, செம்
பொன்  மேருவை-சிவந்த பொன்மயமான மேருமலையை, சுடரோன்-சூரியன். நாகம்
கோளொடு- பாம்பின் வடிவமான (கேதுவென்னுங்) கிரகத்துடனே, சூழ்வதுஎன்ன-
சுற்றுவது போல, சுழற்றினான்-(கேடகத்தையும் வாளையும் கைகளாற்) சுழற்றினான்.
(எ - று.)

     கேடகம் - எதிரிகள் எறியும் ஆயுதங்களைத் தன்மேற் பட வொட்டாமல்
தடுப்பதொரு கருவி. மண்டலம்பயிற்றுதல்-வட்டமாகவருதல். இடசாரி,வலசாரி,
மண்டலம், நடநம், பவுரி [தானே சுழலுதல்] என்பன-வீரர்க்குஉரிய
கதிவிசேஷங்களாம். 'தோளொடு புரையும்மேரு' எனப் பிரசித்த உபமானத்தை
உபமேயமாகவும் உபமேயத்தை உபமானமாகவும் மாற்றிக்கூறியது, எதிர்நிலையணி;
வடநூலார் 'பிரதீபாலங்காரம்'  என்பர். மேரு-சலியாத அபிமனுடம்புக்கும்,
சூரியமண்டலம் - வட்டவடிவான பரிசைக்கும் நாகக்கோள்-கொடிய வாளுக்கும்
உவமை யெனக் காண்க. கோள்-க்ரஹமென்னும் வடசொல்லின் பொருள்கொண்டது;
(காலத்தை அளந்து) கொள்வ தென்று பொருள்: பகுதிநீண்ட பெயர். குமரர் ஏறு-
மிருகங்களுள் அரசாகிய சிங்கம் போல, இராசகுமாரர்களுள் சிறந்தவனென்க;
அல்லது, பகையரசகுமாரரான யானைகளுக்குச் சிங்கம்போன்றவனெனக்
கொள்ளினுமாம்.                                               (244)

வேறு.

107.- முன்பு தோற்றோடிய நிருபர்

அப்பொழுது ஒரு சேர அபிமன்மேல் நெருங்குதல்.
தேர்போனது பரிபோனது சிலைபோனது சிறுவன்
போர்போனதி னிச்சென்றமர் புரிவோமென நினையாக்