பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்149

கார்போனனி யதிராவிதழ் மடியாவெறி கடல்வாய்
நீர்போலுடன்மொய்த்தார்வெரு வுற்றோடிய நிருபர்.

     (இ-ள்.)  (அப்பொழுது), வெருவு உற்று ஓடிய நிருபர் - (முன்பு) அச்சம்
மிக்குஓடிப்போன அரசர்கள், 'சிறுவன் - சிறு பிள்ளையான அபிமானது, தேர்-,
போனது-ஒழிந்தது: பரி-தேர்க் குதிரை, போனது-; சிலை-வில், போனது-; போர்-
(அவனது)யுத்தம், போனது-; இனி சென்று அமர் புரிவோம் - இனிமேல் (நாம்
தைரியமாகப்)போய்ப் போர்செய்வோம்,' என நினையா என்று எண்ணி, கார்
போல் நனி அதிரா -மேகம்போல மிகுதியாக ஆராவரித்து, இதழ் மடியா -
(கோபத்தால்) உதட்டைக்கடித்துக் கொண்டு, ஏறி கடல்வாய் நீர் போல் -
அலைவீசுகிற கடலில் யாற்று நீர்கள்(ஒருங்குவந்து விழுதல்) போல, உடன்
மொய்த்தார் - ஒரு சேர (அபிமன்மேல்வந்து) நெருங்கினார்கள்; (எ - று.)-
அபிமனுக்குக் கடலுவமைகூறியதனால், அவனதுகம்பீரத்தன்மை விளங்கும்.
பி-ம்: வெருவுறவோடிய.

     இதுமுதற் பத்துக்கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.        (245)

108.- எதிர்த்துவந்த துச்சாதனகுமாரனை அபிமன் தலையறுத்தல்.

துச்சாதனன்மகன்மன்னர்தொழுந்துச்சனியென்னும்
நச்சாடரவனையானினிநானேபழிகொள்வே
னிச்சாயகமொன்றாலெனவெய்தானவன்முடியோ
டச்சாயகம்வடிவாள்கொடறுத்தானடலபிமன்.

     (இ-ள்.) துச்சாதனன் மகன் - துச்சாதனனது புத்திரனான, மன்னர்தொழும்-
அரசர்களால் வணங்கப்படுகிற, துச்சனிஎன்னும்-துச்சனியென்று பெயர் கூறுப்படுகிற,
நஞ்சு ஆடு அரவு அனையான்-விஷத்தையுடைய படமெடுத்து ஆடுகிற
பாம்புபோலக் கொடிய வீரன், 'இனி- இப்பொழுது, நானே - யான் ஒருவனே, இ
சாயகம் ஒன்றால்-இந்த ஓரம்பினால், பழி கொள்வேன்-(அபிமனைக்கொல்லுதலாகிய)
பழியை ஏற்றுக்கொள்வேன் (தவறாமற் கொல்வேன்), என - என்று (வீரவாதஞ்
செய்துகொண்டு), எய்தான்-(அபிமன்மேல் ஓரம்பைப்) பிரயோகித்தான்; (உடனே),
அடல் அபிமன் - வலிமையையுடைய அபிமந்யு, அவன் முடியோடு - அந்தத்
துச்சனியில் தலையுடனே, அ சாயகம் - அந்த அம்பையும், வடி வாள்கொடு
அறுத்தான் - கூரிய (தன்) வாளினால் அறுத்திட்டான்; (எ - று.)

     துச்சனியென்பது - துச்சாதனியென்பதன் திரிபுஆக இருக்கலாம்.
துச்சாசனனதுமகன் சயசேன னென்று பெருந்தேவனார் பாராதத்தால் தெரிகிறது.
விரைவுதோன்ற, முடியை முன்னும் சாயகத்தைப் பின்னுங் கூறினார். பழிகொள்ளுதல்
- இலக்கணனைக் கொன்றதாகிய அவன் செய்த பழிக்கு எதிர்ப்பழிவாங்குதலுமாம்.
பழிகொள்ளுத லென்ற சொல்லின் தகுதியால், தேர் முதலியவற்றை யிழந்த வீரனைக்
கொல்லுதல் பழிப்பாமென்பது, தோன்றும் நானே,ஏ- பிரிநிலையோடு, தேற்றம்.(246)