பக்கம் எண் :

பதினோராம் போர்ச்சருக்கம்15

நாளில் [பதினோராம்நாளில்], போர் செய்த-, வீரம்- பராக்கிரமம், எம்
அனோர்க்கு -எம்மைப்போன்றவர்களுக்கு, இயம்பல் ஆம்ஓ- சொல்லுதல் கூடுமோ?
[சொல்லமுடியாது என்றபடி]; (எ -று.)

     சோமதத்தன் - குருவமிசத்தவனான பிரதீபனுடைய புத்திரர் மூவருள்
ஒருவனான பாகிலீகனுக்குப் புதல்வன் : கலிங்கநாட்டரசனென்பாருமுளர்.ஆண்தகை
- உயர்திணைப்பெயராதலின், அதன் முன் வலி மிகவில்லை. என்பான் -
முதல்வேற்றுமைச் சொல்லுருபு. பி -ம்: ஆண்டகைச்சிகண்டி. செய்த வண்ணம். (18)

வேறு.

19.- அபிமன்யுவும் லட்சண குமாரனும் பொருதல்.

தேர்த்திரள் பரித்திரள் கரித்திரள் சேனையின்
கோத்திரள் புடைவரக் குடைவரக் கொடிவரப்
பார்த்திவன் மதலையும் பார்த்தன்மா மதலையுந்
தூர்த்தனர் விசும்பையுந் தொடுத்தன தொடைகளால்.

     (இ-ள்.) தேர் திரள் - தேர்களின் கூட்டமும், பரி திரள்- குதிரைகளின்
கூட்டமும், கரி திரள் - யானைகளின் கூட்டமும், சேனையின் கோ திரள் -
சேனையின் சம்பந்தமான அரசர்களின் கூட்டமும், புடை வர - பக்கங்களிற்
சூழ்ந்துவரவும், குடை வர - குடைகள் (உடன்) வரவும், கொடி வர - துவசங்கள்
(உடன்)வரவும், பார்த்திவன் மதலைஉம் - துரியோதனராசனுக்குப் புத்திரனான
லக்ஷணகுமாரனும், பார்த்தன் மா மதலைஉம் - அருச்சுனனுக்குச் சிறந்த
புத்திரனானஅபிமந்யுவும், (ஒருவரோடு ஒருவர் எதிர்த்து), தொடுத்தன
தொடைகளால் - (தாம்தாம்) பிரயோகித்தனவான அம்புகளால், விசும்பைஉம்
தூர்த்தனர் - (பரந்த)ஆகாயத்தையும் நிறைத்தார்கள்; ( எ - று.)

     அபிமந்யு - அருச்சுனன் தீர்த்தயாத்திரைசென்றபோது அவனுக்குக் கண்ணன்
தங்கையான சுபத்திரையினிடம் பிறந்தவன். விசும்பையும், உம் - உயர்வுசிறப்பு; அது
- அதன்  அளவிறந்தபரப்புடைமையை விளக்கும். புடைவர, குடைவர, கொடிவர
என்றவற்றில் எண்ணும்மை தொக்கது, வினைச்செவ்வெண். அக்காலத்து
இராசராசனாய்ப் பூமியை அரசாண்டவன் துரியோதனனே யாதலால், அவளை
'பார்த்திவன்' என்றார்.

     இதுமுதல் பதினைந்து கவிகள் - பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
விளச்சீர்களாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.

20,- நான்குகவிகள் - அவ்விருவரும் பொர, முடிவாக,
அபிமன்யு லக்ஷணகுமரனைத்தலைமயிரைப்பிடித்துத் தேரிற்கொண்டு
போனமைகூறும்.

மொய்கணைபிற்படமுந்துதேருந்தவும்
பெய்கணைகணையுடன்பின்னிமுன்வீழவு
மெய்கணையபிமனுமிலக்கணகுமரனுங்
கைகணைதரநெடுங்கார்முகம்வாங்கினார்.

     (இ -ள்.) மொய் - நெருங்கிய, கணை - அம்புகளும், பின் பட- (வேகத்தில்)
பின்னிடும்படி, முந்து தேர் - சிறந்த (தம்தம்) தேர்,