109.- மூன்றுகவிகள்- எதிர்த்தஅபிமன் வாளால் மும்முறைவென்று துரோணனை நகைத்தமை கூறும். துரியோதனன்மகனும்பொருதுச்சாதனன்மகனும் புரியோதனமுனைவென்றமைபுரிவின்முனிகருதா வரியோமெனுமறையாலடலம்பாயிரமெய்தான் வரியோலிடுகழலானவைவாள்கொண்டுதுணித்தான். |
(இ-ள்.) துரியோதனன் மகன்உம் - துரியோதனனுக்கு மகனான இலக்கணனையும், பொரு துச்சாதனன் மகன்உம் - போர் செய்த துச்சாதனனுக்கு மகனான துச்சனியையும், புரி யோதனம் முனை - போர்செய்கிற யுத்தகளத்தில், வென்றமை - (அபிமன்கொன்று) சயித்ததை, புரி வில் முனி-கட்டமைந்த வில்லில்வல்ல துரோணாசாரியன், கருதா-எண்ணி, அரி ஓம் எனும் மறையால்- 'ஹரி! ஓம்' என்று தொடங்கிச் சொல்லப்படுகிற வேதமந்திரத்தைக் கொண்டு, அடல் அம்பு ஆயிரம் எய்தான்-வலிமையுடைய ஆயிரம் பாணங்களைத் தொடுத்தான்; (தொடுக்க), வரி ஓல் இடு கழலான்-அழகிய ஒலித்தல் செய்கிற வீரக்கழலையுடைய அபிமன், அவை - அந்த அம்புகளையெல்லாம், வாள் கொண்டு துணித்தான்- வாளினால் துண்டித்தான்; (எ - று.) புரிவின் முனி என எடுத்து, அவர்கள்பக்கல் அன்பையுடைய முனிவனெனினுமாம்; புரிவு- அன்பு, இன்- சாரியை. அரிஓம் - திருமாலேபிரணவப்பொருள் என்பதைக்குறிக்குமென்ப. (247) 110. | சொரியுங்கணைமழையேவுதுரோணாரியன்வில்லும் பரியுங்கடவிரதத்தொடுபாகும்பலபலவாய் முரியும்படிவடிவாள்கொடுமோதாவமர்காதா விரியுஞ்சுடரெனநின்றனன்விசயன்றிருமகனே. |
(இ-ள்.) (அதுவுமன்றி), விசயன் திரு மகன் - அபிமன்,- சொரியும் கணை மழைஏவு-பொழிகிற பாணவர்ஷத்தைச் செலுத்துகிற, துரோண ஆரியன் - துரோணசாரியனது, வில்உம்-, பரிஉம்-தேர்குதிரைகளும், கடவு இரதத்தொடு - செலுத்துப்படுகிற தேருடனே, பாகுஉம் - சாரதியும், பல பல ஆய் முரியும்படி - அநேகந் துண்டுகளாய் அழியும்படி, வடி வாள் கொடு மோதா- கூரிய வாளாயுதத்தால் வீசி, அமர் காதா - போரை (உக்கிரமாக)ச் செய்து. விரியும் சுடர் என நின்றனன்-(நெடுந்தூரம்) பரவுகிற (மிக்க) ஒளியையுடைய சூரியன்போல (விளக்கமுற்று) நின்றான்; (எ - று.) (248) 111. | ஒருக்காலழிதேரன்றியுமுருளாழிகொடேர்மே லிருக்கால்வரமுக்கால்வரவெக்காலுமழித்தே பெருக்காறணைசெய்தொத்தவிர்பிள்ளைப்பிறையனையான் செருக்கானகைசெய்தான்வரிசிலையாசிரியனையே. |
(இ-ள்.) ஒரு கால் அழி தேர் அன்றிஉம்- ஒருதரம் தேரழிந்தது மாத்திர மல்லாமல்,உருள் ஆழி கொள் தேர்மேல் - உருளுந்தன்மையுள்ள சக்கரங்களைப் பூண்டவேறு தேரின் மேல், (துரோணன் ஏறிக்கொண்டு), இருகால் வர முக்கால் வர -இரண்டாந் |