தரம் மூன்றாம்தரம் (மீண்டுமீண்டு) வர, எ காலும் அழித்து-எல்லா முறையிலும் (அத்துரோணனைத்) தோற்கடித்து, பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து- யாற்றுநீர்ப் பெருக்குக்கு அணை செய்தாற் போன்று, (அவனைத் தடுத்து),-அவிர் விளங்குகிற, பிள்ளை பிறை அனையான் - இளஞ்சந்திரனையொத்த அபிமன்,- செருக்கால்-வீரக்களிப்பினால், வரி சிலை ஆசிரியனை - கட்டமைந்த வில்லில் வல்லதுரோணணை (நோக்கி), நகை செய்தான்- (இகழ்ச்சிதோன்றச்) சிரித்தான்: (எ - று.) "மூன்றாறுருபெண்" என்ற சூத்திர விதிப்படி ஒருகால், இருகால் என இயல்பாகவரவேண்டியவை, இங்கு, சந்தவின்பத்திற்காக வலிமிக்குநின்றன. (249) 112. -துரோணன் அபிமனது வலக்கையை வாளோடும் வீழ்த்துதல். முன்னுஞ்சுருதியினாலுயர்முனிவீரனைமுனியாப் பின்னும்பனிவரைபோலொருபெருந்தேர்மிசைகொள்ளா மன்னுஞ்சிலைகுனியாமுனைவடிவாளொடுகையு மின்னும்பிறைமுகவாளியின்விழும்படிவிட்டான். |
(இ-ள்.) முன்னும்- (யாவராலும் சிறந்ததாகக்) கருதப்படுகிற, கருதியினால் - வேதங்களில் வல்லவனாதலால், உயர் - சிறந்த, முனி - துரோணன், வீரனை முனியா- (தன்னைப் பரிகசித்த) அபிமனைக் கோபித்து, பின்உம் - மீண்டும், பனி வரை போல் - பனிமயமான இமயமலைபோன்ற, ஒரு பெரு தேர்மிசை-ஒரு பெரிய தேரின் மேல், கொள்ளா - ஏறிக்கொண்டு, மன்னும் சிலை குனியா - பெரிய (தன்) வில்லை வளைத்து, முனை வடி வாளொடு கைஉம்-(அபிமனது) கூரிய வடிக்கப்பட்ட வாளுடன் வலக்கையும், மின்னும் பிறை முகம் வாளியின் - விளங்குகின்ற அர்த்தசந்திரபாணத்தால், வீழும்படி - துணிந்து கீழ்விழும்படி, விட்டான் - (அதனைப்) பிரயோகித்தான்; (எ-று.)- மலையரசனாதலின், இமயத்தை எடுத்துக்கூறினார் (250) 113.-வாள் வீழ அபிமன் நின்றமை. பேணாருயிர்பருகும்பசிபெட்பப்பகுவாய்வெங் கோணாகமுலாவந்தெதிர்கொடுநாவெறிவதுபோற் பூணார்கடகக்கையொடுபுகர்வாளமுமண்மே னீணாகர்வியக்கும்படிவிழமீளியுநின்றான். |
(இ-ள்.) பேணார் உயிர் பருகும் - பகைவர்களது உயிரைக் குடிக்க வேண்டுமென்ற, பசி-, பெட்ப-மிக, பகுவாய் வெம் கோள் நாகம் - திறந்த வாயையும்கொடிய வலிமையையுமுடைய சர்ப்பம், உலா வந்து - உலாவிவந்து, எதிர் கொடு -எதிரிற் பெருந்தி, நா எறிவது போல்-நாக்கை வெளிநீட்டுவதுபோல,- கடகம் பூண்ஆர்கையொடு - கடகமென்னும் ஆபரணம் பொருந்தின கையுடனே, புகர்வாளம்உம் - பளபளப்பையுடைய வாளாயுதமும், மண்மேல் - தரையிலே, நீள் நாகர்வியக்கும்படி விழ - உயர்ந்த தேவலோகத்தவர்கள் ஆச்சரியப்படும்படி (துணிந்து)வழ, மீளிஉம் - அபிமனும், நின்றான் - (சலியாது) நின்றான்; (எ - று.) |