குதிரைகளையும், துணித்து - துண்டாக்கி, எதிர் முனை - எதிரில் தொழில்செய்கிற, வலவனை-சாரதியையும், முரணுடன் புடைத்து-வலிமையோடு தாக்கி, அணி துவசம்உம்- அழகிய கொடியையும், விழ-ஒடிந்து விழ (ச்செய்து), முதுகு கண்ட பின்-புறங்கொடுக்குமாறு வெல்லத் தொடங்கியவுடனே,-அவன்உம் -சயத்திரதனும், சரபம், அது எனும் வகை-(சிங்கத்தைக்கொல்லவல்ல) சரபம்போல, அரன் வழங்கு பொன் கதையுடன்-சிவபிரான் அளித்த பொன்மயமான கதையுடனே, அவனியில் முன் குதித்து - பூமியிலே வேகமாகக்குதித்து, அடலுடன் முனைய -வலிமையோடு போர்செய்ய,-(எ - று.)-"சிதறின" என அடுத்த கவியில் முடியும் களிறு- ஒருகையோடுஇருத்தற்கும் உவமை. பி-ம்: அடலுடைவலவனை, (262) 125.- இருவரும் தரையிற் கைகலந்து பொருதல். பதயுகங்களொத் தியவலிபலகணபணபுயங்கர்பற் பலமுடிசிதறின, வெதிர்கொடண்டமொத்தியவொலிதிசைகளிலிபமுநின்று மெய்ப்பிடியொடுசிதறின, கதியில்வந்தசித்திரமெனமுறைமுறைகதுவிமண்டலித்தொருபகன் முழுவது, மதிசயப்படப்பொருதனரெதிரெதிரபிமனுஞ்சயத்திரதனுமமரிலே. |
(இ-ள்.) அபிமன்உம் சயத்திரதன்உம் - அவ்விரண்டுபேரும். பதயுகங்கள் ஒத்திய - (தம்தம்) இரண்டுகால்களையும் உறுதியோடு வைத்த, வலி-வலிமையினால், பணம்- படத்தையுடைய, கணம் - கூட்டமான, பல புயங்கர் (கீழிருந்து பூமியைத்தாங்குகிற) அநேக நாகர்களது, பல் பல முடி - பலபலதலைகள், சிதறின - நெருங்கின; எதிர் கொள் - எதிரெதிரிற் கொண்ட, தண்டம் - கதாயுதம், மொத்திய- (ஒன்றோடொன்று) தாக்குவதனாலுண்டான, ஒலி - ஒளியினால், திசைகளில் நின்று- (எட்டுத்) திக்குக்களினின்று, இபம்உம்-திக்குயானைகளும், மெய்- உண்மையாக பிடியொடு-(தம்தம்பெண்யானையுடனே, சிதறின-நிலைகுலைந்து ஓடின; (இவ்வாறுஅபிமனும் சயத்திரதனும்), அமரில்-போர்க்களத்தில், கதியில் வந்த சித்திரம்என- வேகமாகவந்த புலிகள்போல, முறைமுறை கதுவி-மாறிமாறி (ஒருவரையொருவர்) பற்றி, மண்டலித்து சுழன்றுவந்து, ஒரு பகல் முழுவது உம்-(அந்த) ஒருபகற்பொழுது முடியுமளவும். எதிர் எதிர் -எதிரிலே எதிரிலே, அதிசயம் பட - (காண்பவர்க்கு) வியப்புண்டாக, பொருதனர் - போர் செய்தார்கள்; (எ - று.) ஐந்தலை, இருதலை முதலாக ஒவ்வொருநாகத்துக்கே பலதலைகள் உண்மை பற்றி, 'பற்பலமுடி' எனப்பட்டது. மெய்ப்பிடியொடு - தேகபலத்தோடு எனினுமாம். வீமசேனனை வீமனென்றும், சத்தியபாமையைச் சத்தியை யென்றும், கிருதவர்மாவைக் கிருதனென்றுங் கூறுதல்போல, சித்திரகாயத்தைச் சித்திரமென்றார்; சித்திரகாயம் என்று புலிக்குப்பெயர்; (கோடுகளால்) பலவகை நிறமுள்ள உடம் புடையதென்று காரணப்பொருள். இனி, இவ்விருவருள் ஒருவன் செய்த தொழிலை மற்றொருவன் அவ்வாறே செய்தலால், 'சித்திரமென' என்பதற்கு - ஒன்றில் உள்ளபடி யெழுதப்படுகிற சித்திர வடிவம்போல என்றும் உரைக்கலாம். முறைமுறை கதுவி மண்ட |