பக்கம் எண் :

168பாரதம்துரோண பருவம்

காட்டிலும், பீடுஉம் தேசுஉம் சிறந்தனை -(நீ) பெருமையும் ஒளியும் மிக்குள்ளாய்,
என்று - என்ற காரணத்தால், உனை கொண்டு ஏ தெவ்வரை வென்று உலகு
ஆனசிந்தித்தேன்  ஏ - உன்னைக்கொண்டே பகைவர்களைவென்று (யான்)
உலகத்தைஅரசாள எண்ணியிருந்தேனே! எங்களைஉம்-(உனது அன்புள்ள
தந்தையரான)எங்களையும், மறந்தனைஓ-மறந்துவிட்டாயோ? (மறந்திடாமல்),
மாலையினால்வளைப்புண்டு - கொன்றைமாலையாற் சூழப்பட்டு, மருவார்
போரில்-பகைவர்கள்செய்தபோரில், இறந்தனை ஓ-? இன்று என்செய்தாய்ஏ-இன்றைக்குஎன்னசெய்துவிட்டாயே!

     தந்தைக்கு 'பெற்றெடுத்த' என்ற அடைமொழிகொடுத்தல், உபசாரம். இனி,
'பெற்றெடுத்தவிடலையினும்' என்பதற்கு-யான்பெற்றுவளர்த்த (விந்தனென்னும்
எனது)குமாரனினும் என்று உரைத்தல் சிறப்பன்று, என்கண், என் உயிர் -
சிறப்பினால்உயர்திணையில் அஃறிணைவந்த வழுவமைதி; [நன்-பொது-28.] பி-ம்:
சிந்தித்தேன்யான்.                                               (276)

139.தேனிருக்குநறுமலர்த்தார்ச்சிலைவிசயனிருக்கவரைத்திண்
                                 டோள்வீமன்,
றானிருக்கமாநகுலசாதேவர்தாமிருக்கத்தமராய்வந்து,
வானிருக்கின்முடிவான மரகதமாமலையிருக்க
                              வாழ்வானெண்ணி,
யானிருக்கவினையறியாவிளஞ்சிங்கமிறப்பதேயென்னே
                                    யென்னே.

     (இ-ள்.) தேன் இருக்கும் -தேன்பொருந்தின, நறு-வாசனை வீசுகிற, மலர்-
பூக்களாலாகிய, தார் - வெற்றிமாலையையுடைய, சிலை-(காண்டீவமென்னும்)
வில்லையுடைய, விசயன் - அருச்சுனன், இருக்க - வாழ்ந்திருக்க,- வரை திண்
தோள் - மலைகள்போலும் வலியதோள்களையுடைய, வீமன்-,  தான் இருக்க-,
மா-சிறந்த, நகுல சகாதேவர்-, தாம் இருக்க-, வான் இருக்கின் முடிவு ஆன-
சிறந்தவேதங்களின் அந்தத்துப்பொருளான, மரகதம் மா மலை-சிறந்த
மரகதரத்தினமயமான மலை போன்ற கண்ணபிரான், தமர் ஆய் வந்து-
உறவினனாய்ப் பொருந்தி, இருக்க-, யான்-, வாழ்வான் என்ணி - (பகைவென்று
அரசாண்டு) வாழக் கருதி,  இருக்க-, வினை அறியா - செய்தொழிலை முற்ற
அறியாத, இளசிங்கம் சிங்கக்குட்டிபோன்ற நீ, இறப்பது தகுதியோ? என்னே
என்னே-(இது) என்ன அநீதி! என்ன அநீதி!! (எ - று.)-பி-ம்; விளைவறியா.

     அபிமன்சக்கரவியூகத்தின் உட்செல்லுதல்மாத்திரம் உணர்ந்து
மீண்டுவரவிதறியாதவ னென்பது தோன்ற, 'வினையறியா இளஞ்சிங்கம்' என்றார்;
இதனை முதனூலால் அறிக. 'தமராய்வந்து' என்பது, எல்லோருக்குங் கூட்டத்தக்கது:
ஆனதுபற்றியே, 'தமர்' எனப் பண்மையாற் கூறியது. மாநகுலன் என எடுத்து,
குதிரைத் தொழிலில்வல்ல நகுலனென்றுமாம். நகுலசகதேவர் இரட்டைப்
பிள்ளையராதலால், ஒருதொடராகக் கூறப்பட்டனர். இருக்கு- நான்குவேதங்களுள்
முதலாவதன் பெயராவதே யன்றி, எல்லா வேதங்களுக்கும் பொதுப்பெயராகவும்
வழங்கும். 'இருக்கின்முடிவு' என்றது-வேதத்தின்பிரிவான கர்மகாண்டம் பிரகாண்டம்
என்ற இரண்டனுள் சிறந்ததும், பிந்தினதுமான உபநிஷத்துக்களின் சித்