பக்கம் எண் :

170பாரதம்துரோண பருவம்

யுடன்-, அழிந்து-மூர்ச்சித்து, மணி தேரின்மிசை- அழகியதேரில், வீழ்ந்தான்-;(எ-று.)

142.- இதுமுதல் மூன்றுகவிகள் - வீமன்புலம்புதல்.

சங்கலாரிடைவளைத்த சக்கரத்தை யுடைப்பதற்குத்
                                தமியேனெய்தி,
யங்குலாவருமிரதத்தரசரையுந்தொலைத்துன்னையடுப்பான்
                                    வந்தேன்,
பங்கெலாமரகதமாம் பவளநிறப்பொருப்புதவுபைம்பொற்
                                 கொன்றைத்,
தொங்கலாற் கோறுவித்த சூழ்ச்சியை யின்றறிந்திலனே
                             தோன்றலேநான்.

     (இ-ள்.) தோன்றலே - குமாரனே! சங்கலார் - பகைவர்கள்,இடை
வளைத்த-(நீ)நடுவிலிருக்க (உன்னைச்) சூழ்ந்துகொண்ட, சக்கரத்தை-சக்கர
வியூகத்தை,உடைப்பதற்கு-, தமியேன்-தனியனான யான், எய்தி - மனம்பொருத்தி,
அங்கு உலாவரும் - அந்தச் சக்கரவியூகத்தில் உல்லாசமாகப்பொருந்திய, இரதத்து
அரசரை உம்-தேர்வீரர்களையும், தொலைத்து-அழித்து, உன்னை அடுப்பான்
வந்தேன்-உன்னைச்சமீபித்தற்கு வந்தேன்; பங்கு எலாம் மரகதம் ஆம்-
(பார்வதீரூபமான) இடபக்கம் முழுவதும் பச்சை ரத்தின நிறமான, பவளம் நிறம்
பொருப்பு -பவழநிறத்தையுடையமலை போன்ற சிவபிரான், உதவு-கொடுத்தருளிய,
பை பொன்கொன்றை தொங்கலால்-பசிய பொன்னின்நிறமான கொன்றைப்
பூமாலையைக்கொண்டு, கோறுவித்த-(உன்னைக்) கொல்வித்த, சூழ்ச்சியை-
வஞ்சனையை, இன்று நான் அறிந்திலன்ஏ - இன்று நான்
அறிந்திட்டேனில்லையோ!(எ - று.)

     சங்கு - ஸங்க மென்னும் வடமொழி விகாரப்பட்டது; கூடுதலென்று பொருள்,
அதனையுடையவரல்லாதவர் - சங்கலார்; எனவே, பகைவராவர். தமியேன்-ஒப்பற்ற
யான், ஒன்றியானயான், அர்த்தநாரீசுவரனாதலால், இவ்வாறு கூறினார். பொருப்பு-
இங்கே, உவமவாகுபெயர். 'கோறுவித்த' என்பதில், றுவி என்னும் இரண்டு
பிறவினைவிகுதிகள் விகுதிமேல்விகுதியாய் அடுக்கி வந்தன வெனக் கொள்ளல்
வேண்டும்; கொல் என்னும் பகுதி, முதல் நீண்டு இறுதிகெட்டது. சந்திவிகாரங்கள்.
பி-ம்: உனை வளைத்தசூழ்ச்சியை, கோறல்புரிசூழ்ச்சியை.               (280)

143.மின்னாமலிடித்ததெனவீழ்த்தபொலந்தொடையாலும்
                          விடையோனீந்த,
பொன்னார்வெங்கதையாலுமல்லதபிமனையமரிற்
                        பொரவல்லார்யார்,
தன்னாண்மைநிலைநிறுத்திச்சங்கமுழக்கியவீர
                               சிங்கசாப,
வென்னானையிறந்துபடவின்னமுநானிவ்வுயிர்
                     கொண்டிருக்கின்றேனே.

     (இ-ள்.) மின்னாமல் இடித்தது என - மின்னலில்லாமலே இடியிடித்தது
போல,வீழ்ந்த - (எதிர்பாராதிருக்கக்) கொணர்ந்து போகட்ட,
பொலம்தொடையால்உம்-பொன்னிறமான கொன்றைப்பூமாலையினாலும்,
விடையோன் ஈந்த-இடபத்தை(வாகனமுங்கொடியுமாக) உடைய சிவபிரான்
கொடுத்த, பொன் ஆர் வெம்கதையால்உம்-பொன்மயமாய்நிறைந்த கொடிய
கதாயுதத்தினாலும், அல்லது-(இவ்விரண்டினாலும்) அன்றி, அபிமனை-,
அமரில்-யுத்தத்தில்